சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
தீதும் நன்றும் நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது . அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் . அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் . கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் . “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு . என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...