Barkkavi's Stories Skip to main content

Posts

Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)
Recent posts

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

19 - புவியே காட்சிப்பிழையாய்

  காட்சிப்பிழை 19   நவி , அந்த படிகளைக் கடந்து வெளியே வந்ததும் , அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் தங்களையும் மறந்து கைகளைத் தட்ட , “ வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் ? என்னமோ நம்ம ப்ராஜெக்ட் சக்ஸஸான மாதிரி கையைத் தட்டிட்டு இருக்கீங்க ? அவ வெளிய வந்தது , நம்ம ப்ராஜெக்ட்டை பாதிக்குதுன்னு கூடவா தெரியல .” என்று திட்ட ஆரம்பித்தார் பிரசாத் .   ரிஷபின் மேலுள்ள கடுப்பும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக குழுவின் மேல் இறங்கியது . ஆனால் , கண்டுகொள்ள வேண்டியவனோ அவரை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை .   வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும் , அகம் முழுவதும் சந்தோஷமே வியாபித்திருந்தது ரிஷபிற்கு . கூடவே , வியப்பும் ! நவியை குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ என்ற சந்தேகம் கூட எழுந்தது .   எது எப்படியோ , ‘ இயந்திர பழுது ’ என்று பிராசாத்திடம் காரணம் கூற வைக்காமல் , அவளே வெளியே வந்தது , அவர்களின் திட்டத்திற்கு எந்த பங்கமும் வராமல் காப்பாற்றியது .   அங்கு நவியோ , வெள்ளையான வெற்றிடத்தை எதிர்பார்த்த ...