19 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

19 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 19

 

நவி, அந்த படிகளைக் கடந்து வெளியே வந்ததும், அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் தங்களையும் மறந்து கைகளைத் தட்ட, “வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்? என்னமோ நம்ம ப்ராஜெக்ட் சக்ஸஸான மாதிரி கையைத் தட்டிட்டு இருக்கீங்க? அவ வெளிய வந்தது, நம்ம ப்ராஜெக்ட்டை பாதிக்குதுன்னு கூடவா தெரியல.” என்று திட்ட ஆரம்பித்தார் பிரசாத்.

 

ரிஷபின் மேலுள்ள கடுப்பும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக குழுவின் மேல் இறங்கியது. ஆனால், கண்டுகொள்ள வேண்டியவனோ அவரை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

 

வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், அகம் முழுவதும் சந்தோஷமே வியாபித்திருந்தது ரிஷபிற்கு. கூடவே, வியப்பும்! நவியை குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ என்ற சந்தேகம் கூட எழுந்தது.

 

எது எப்படியோ, ‘இயந்திர பழுதுஎன்று பிராசாத்திடம் காரணம் கூற வைக்காமல், அவளே வெளியே வந்தது, அவர்களின் திட்டத்திற்கு எந்த பங்கமும் வராமல் காப்பாற்றியது.

 

அங்கு நவியோ, வெள்ளையான வெற்றிடத்தை எதிர்பார்த்த வந்திருந்தாலும், இத்தனை நேரம் அவளின் முழுபலத்தை பயன்படுத்தியதால் சோர்ந்து கீழே விழுந்து மயங்கினாள்.

 

அடுத்த நொடியே, ரிஷப் மும்முரமாக நவியின் மேல் சென்று கொண்டிருந்த கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட,  அதற்கு மேல் அங்கிருந்தால் அவருக்கு மரியாதை இல்லை என்பதை நன்குணர்ந்த பிரசாத் அவ்விடம் விட்டு சென்றார்.

 

அதன்பின்பு, நவியின் உடல்நிலையை ஆராய்ந்து அது இயல்பாக இருப்பதை தெரிந்து கொண்டனர். ஆனால், அவள் மனநிலைதான் சற்று மோசமாக இருந்தது. அதற்கான காரணத்தை ரிஷபும் உணர்ந்து தான் இருந்தான். அவன் கேள்வியாக ஜாஷாவை நோக்க, அவளும் கண்ணசைவிலேயே பார்த்துக் கொள்வதாக கூறினாள்.

 

அந்த இடத்தில் அதிக நேரம் இருந்தால், அதுவும் கூட பேசுபொருளாக மாறும் என்று நன்கு புரிந்ததால் அங்கிருந்த மற்றவர்களிடம் நவியின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணிக்குமாறும், அவள் எழுந்ததும் தன்னிடம் தெரிவிக்குமாறும் கூறிவிட்டு வெளியே சென்றான்.

 

*****

 

சில மணி நேரங்களுக்குப் பின்னர் கண் விழித்தாள் நவி. அதே ஆராய்ச்சி அறை என்று தெரிந்தே கண்களைத் திறந்தாலும், தெரியாததைப் போல் நடிக்க வேண்டிய சூழலினால், அவ்வாறே நடிக்கவும் செய்தாள்.

 

அவள் எழுந்த விஷயம் ரிஷபிற்கு தெரிவிக்கப்பட, அவனும் வந்து அவளின் நிலையை பரிசோதித்தான். அவளின் சோர்வான முகமே உணர்வுகளை அடக்கி வைத்திருக்கிறாள் என்பதைக் கூற, அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல், “ஜாஷா, இவங்களை அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போங்க. அப்பறம் அந்தமெமரி ரிவர்சல். ட்ரக்கை போட்டு விட்டுடுங்க. அவங்களோட இரண்டு அனுபவங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதிருக்கும்.” என்று சத்தமாக கூறியவன், ஜாஷாவிற்கு மட்டும் தெரியுமாறு தலையசைத்தான்.

 

ஜாஷா புரிந்தது என்பது போல் தலையசைத்து தேவையானதை எடுத்துக் கொண்டிருக்க, ரிஷபோ ரியானிடம் கண்ணசைவில் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

 

அப்போது ஜாஷாவின் அருகே  நின்றிருந்த ஜென்சியோ, “வாவ்! சார் எப்படி இப்படி ஃபியூசச்சரிஸ்டிக்கா யோசிக்குறாரு?” என்று பாராட்ட, அவளைத் திரும்பிப் பார்த்த ஜாஷா, “மத்தவங்களை புகழ்ந்துட்டே காலத்தை ஓட்டுறதை விட்டுட்டு நீங்களும் அப்படி யோசிச்சா நல்லா இருக்கும்.” என்றவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.

 

செல்பவளின் முதுகை வெறித்த ஜென்சி தன் தோழிடயிடம், “ஜாஷாக்கும் நம்ம. ஹீரோ மேல கண்ணா இருக்குமோ?” என்று வினவ, அவளின் தோழியோ, “பத்து வயசு வித்தியாசம் ரெண்டு பேருக்கும். எப்படி செட்டாகும்?” என்றாள்.

 

ஹ்ம்ம், இப்போ தான் ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக் மூலமா இளமையா இருக்கலாமே. இன்ஃபேக்ட் ஜாஷாவே பார்க்க யங்கா தான தெரியுறாங்க.” என்றாள் ஜென்சி.

 

இவையனைத்தும் ஜாஷாவின் செவிகளில் விழத்தான் செய்தது. ஆனால், எப்போதும் போல அதைக் கடந்து சென்றாள். ஆனால், அவளுடன் அதைக் கேட்டவளின் நிலை என்னவோ!

 

நவிக்கு, அத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும் இவர்களின் உரையாடல் செவிக்குள்ள புகுந்து மூளையை அடைந்தது. ‘பத்து வயது வித்தியாசம்’, ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்போன்ற வார்த்தைகள் ஏதோ சொல்ல வருவதைப் போல இருக்க, விடுபட்ட சொற்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்ததால், அதன் முழு பொருளை அறிந்துகொள்ள அப்போது விரும்பவில்லை நவி.

 

அவள் யோசனையைத் தடுத்த வண்ணம், “போலாமா?” என்று ஜாஷா வினவ, அவளும் ஜாஷாவின் பின்னே நடக்க ஆரம்பித்தாள்.

 

முன்னர் போல வழியில் கவனமில்லை நவிக்கு. ஏனோ, மனம் முழுவதும் குற்றவுணர்வாக இருந்தது. அவள் செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்ய நினைப்பதுஇவையெல்லாம் சரியா தவறா என்பதைக் கூட அவளால் இப்போது வரை கணிக்க முடியவில்லை. அதே குழப்பத்துடன் நடந்தவள், அவளின் அறையை அடைந்தாள்.

 

உள்ளே நுழைந்ததும், தன் உணர்வுகளை அதற்கு மேலும் அடக்க முடியாமல், கட்டிலில் கவிழ்ந்தபடி கதறினாள்.

 

அவளின் கதறலில் பதறிய ஜாஷா, கதவுகளை அடைத்துவிட்டு ஓரத்திலிருந்த மறைகாணியைப் பார்க்க, அதுவோ ஏற்கனவே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ரிஷபின் செயலை எண்ணி தன்னை நிதானமாக்கிக் கொண்டவள் மெல்ல நவியின் அருகே அமர்ந்தாள்.

 

அழுகையில் குலுங்கிய முதுகை ஆதரவாக தடவியவளிற்கு என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்று புரியவில்லை. அவளும் இத்தகைய நிலையைக் கடந்து வந்தவள் தானே!

 

சற்று நேரம் அழவிட்டவள், “ப்ச், நவி போதும் அழுதது! இப்படி அழுகுறதால மட்டும் நடந்தது திரும்ப மாறப்போறது இல்ல.” என்றாள் ஜாஷா அழுத்தத்துடன்.

 

நடந்த எதுவும் மாறப்போறது இல்லன்னு எனக்கும் தெரியும். ஆனா, என்னோட குற்றவுணர்வு குறையும் தான.” என்றவாறே தன் தலையை மட்டும் உயர்த்தியபடி ஜாஷாவைப் பார்த்தாள்.

 

இப்படி எத்தனை நாளைக்கு குற்றவுணர்வுல இருக்கப் போற நவி? இப்படி குற்றவுணர்வுல தவிக்கிறது இது தான் கடைசின்னு உன்னால கன்ஃபார்மா சொல்ல முடியுமா?” என்று ஜாஷா கேட்க, அவளின் குரலே சொன்னது, ‘இது தான் ஆரம்பம் என்று

 

அதுக்குன்னு உங்களை மாதிரி, ‘எனக்கு எந்த ஃபீலிங்குமே இல்ல, எதுவும் என்னை பாதிக்காதுன்னு நடிக்க சொல்றீங்களா?” என்று கத்தினாள் நவி.

 

அவளின் கேள்வியில் விரக்தி சிரிப்பை வெளியிட்டவள், “முதல் முறை உன்னை மாதிரி தான் நானும் கத்திட்டு இருந்தேன். என் கண்ணு முன்னாடி, நான் கண்டுபிடிச்ச மருந்தால, தான் யாருன்னே தெரியாம இறந்தாங்களே. அப்போ இதே மாதிரி தான் கத்துனேன், அழுதேன்! இனி இப்படி நடக்க நான் காரணமா இருக்கக்கூடாதுன்னு முடிவு கூட எடுத்தேன். ஆனா, நான் எடுக்குற முடிவெல்லாம் செலுப்படியாகுமா என்ன? இதோ இப்போ கூட தினமும் என் கையாலேயே அதை நிறைய பேருக்கு போட்டுட்டு தான் இருக்கேன்.” என்று சுவரை வெறித்துக் கொண்டு கூறினாள் ஜாஷா.

 

ஜாஷா கூறியதைக் கேட்டு அதிர்ந்த நவி, “அப்போ மெமரிஸை தற்காலிகமா மறக்க வைக்குற மருந்தைக் கண்டுபிடிச்சது…” என்று இழுக்க, “ம்ம்ம், நான் தான். அதுக்காக வருந்தாத நாளில்ல! முதல்ல அதைக் கண்டுபிடிச்சப்போ, என்னோட துறையில பெருசா சாதிச்ச மாதிரி இருந்துச்சு. ஆனா, தொடர்ந்து அதை உபயோகிக்குறப்போ ஏற்படுற பின்விளைவுகளால எத்தனையோ பேர் பாதிக்கப்படுறதை பார்த்தப்போ, உன்னை மாதிரி தான் நானும் நடந்தேன். ஏன், இதை விட எக்ஸ்ட்ரீமா சூசைட் கூட ட்ரை பண்ணேன்!” என்று ஜாஷா கூற, அவளையே அதிர்ந்து பார்த்திருந்தாள் நவி.

 

ஜாஷா, சற்று நேரத்திற்கு முன்னர் இதே அறையில் பார்த்தபோது எவ்வளவு ஆளுமையுடன் இருந்தாளோ, இப்போது அது எதுவும் இல்லாமல் சோர்ந்து போய், கூனி குறுகி அமர்ந்திருந்தாள். தன் தோல்விகளையும், கருப்பு பக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறாள் அல்லவா!

 

ஆறுதலளிக்க வந்தவளிற்கு ஆறுதல் அளிக்கும் நிலையாகிப் போனது நவிக்கு. நவி ஜாஷாவின் கைகளைப் பிடித்துக் கொள்ள, மீண்டும் தொடர்ந்தாள் ஜாஷா.

 

இந்த உலகத்துல நீ நடக்குறது எதுவும் நடக்காது நவி. நமக்குன்னு என்ன ஸ்கிரிப்ட்ல இருக்கோ அதன்படி தான் நடக்கும். இப்போ பாரு, என்னைக்கோ சாக வேண்டிய நான் உன் முன்னாடி உட்கார்ந்து உனக்கு அட்வைஸ் பண்றேன். நீ டார்வினோடசர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ (தக்கனபிழைத்து வாழ்தல்) பத்தி கேள்விப்பட்டிருக்கியா? அது தான் இப்பவும் நடந்துட்டு இருக்கு! யாருக்கு எந்த சூழ்நிலையிலும் பிழைச்சுக்குற அளவுக்கு புத்தியோ, வசதியோ இருக்கோ அவங்க தான் இங்க வாழ முடியும். இப்போ நானும் அதை நம்பி தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இந்த சென்டிமெண்ட், அன்பு, லவ் எக்ஸ்டரா எக்ஸ்ட்ரா எல்லாம் கேக்குறதுக்கு வேணா நல்லா இருக்கும், ஆனா, அதெல்லாம் இப்போ இருக்க சூழல்ல எதுக்குமே உதவாது! இப்போ எங்க பார்த்தாலும் சண்டை, பொறாமைன்னு ரொம்பவே நெகட்டிவ்வா தான் இருக்காங்க. இருக்கோம்!” என்று கூறியவளின் கூற்றை நவியால் மறுக்க முடியவில்லை.

 

சாரி நவி, என்னோட பாஸ்ட்டை பத்தி பேசுனா நிறுத்தவே மாட்டேன். ரொம்ப போரடிச்சுட்டேனோ! சரி இப்போ சொல்லு, அப்படியென்ன குற்றவுணர்வு உனக்கு?” என்றாள் ஜாஷா.

 

அதான் ஏற்கனவே கெஸ் பண்ணயிருப்பீங்களே. அந்த கடைசி நொடியில, அவனை தள்ளிவிட்டுட்டாவது மேல வரணும்னு வெறி உண்டாச்சே.” என்ற நவி சிறிது இடைவெளி விட்டு, “அது நானே இல்ல ஜாஷா! எனக்குள்ள இப்படி ஒரு மிருகமான்னு எனக்கே ஷாக் தான். அவன் கீழ விழுகுறதைக் கூட பார்க்காம, அந்த இடத்தை விட்டு வெளிய வரணும்னு. ப்ச், இப்போ நினைச்சா கூட கில்டியா இருக்கு! என்னதான் விளையாட்டா இருந்தாலும், எனக்குள்ள தோன்றுன உணர்வு உண்மை தான. அப்போ இவ்ளோ வயலெண்ட்டா மாறிட்டு வரேனோன்னு தோணுது.” என்றாள்.

 

இதுக்கே ஃபீல் பண்ணா எப்படி? சரி, நீ இப்படி ஃபீல் பண்றியே, இதே மாதிரி, விடியோ கேம்ஸ்லயோ, வி.ஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) கேம்ஸ்லயோ ஈடுபடுற குழந்தைகள்லயிருந்து பெரியவங்க வரைக்கும் ஏன் அப்படி ஃபீல் பண்ணலன்னு யோசிச்சுருக்கியா?” என்று ஜாஷா வினவ, ‘ஆமாலஎன்று நவியும் சிந்திக்க துவங்கினாள்.

 

ஏன்னா, மக்கள் அதுக்கு அடிக்ட்டாகிட்டாங்க! அவங்களுக்குள்ள இரக்கம்ங்கிற குணமே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டு வருது. ஆனா, இது தான் கேமிங் இண்டஸ்ட்ரி வளர்றதுக்கும் காரணமா இருந்துருக்கு. ஸ்ட்ரஸ்ட்டா இருக்கும்போது இது மாதிரி விளையாட்டுக்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்குறது உண்மை தான். ஆனா, அளவுக்கு மீறி விளையாடினா அது நம்ம மனநிலையை தான் பாதிக்கும்.” என்று ஜாஷா நிறுத்த, நவியோமனநிலை மாற்றமாஎன்பது போல பார்த்தாள்.

 

உனக்கு சிம்பிளா சொல்றேன். பொதுவா குழந்தைகளுக்கு இரக்க குணம் அதிகம்னு சொல்வாங்க. ஆனா, 2020கள்ல நடந்த சம்பவம், ஒரு சின்ன பையனுக்கு முன்னாடி அடிபட்ட முயல் துடிச்சுட்டு இருந்துச்சாம். அதை வச்ச கண் எடுக்காம அவன் பார்த்துட்டு இருந்தானாம். இதைப் பார்த்த அவங்க அம்மா, ‘ஏன் அதை இப்படி பார்த்துட்டு இருக்க? அதுக்கு ஹெல்ப் பண்ணலாம்லன்னு சொன்னதுக்கு, ‘அது துடிச்சு சாகுறதை பார்க்க எனக்கு ஹேப்பியா இருக்கு!ன்னு சொன்னானாம் அந்த பையன். இது தான் தொடர்ந்து கேம்ஸ் விளையாடுறவங்களோட மனநிலை. இந்த குழந்தைங்க இப்போவே இப்படி வயலன்ட்டா யோசிச்சா, அடுத்த ஜெனரேஷன் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே முடியல!” என்று ஜாஷா கூற, நவிக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.

 

அவளும் தானே அப்படி விளையாடுபவர்களை  பார்த்திருக்கிறாள். தொடர்ந்து அதைப் பார்த்தால், கண் கெட்டுப்போகும் என்பதைத் தாண்டி அவள் யோசித்ததில்லை. இப்போது ஜாஷா சொல்வதைக் கேட்டதும், இதற்கு பின்னணியில் இத்தனை பெரிய ஆபத்து இருக்கிறதா என்று திகைத்து தான் போனாள்.

 

ஆனாலும், கேமிங் இண்டஸ்ட்ரி மட்டும் வளர்ந்துட்டே தான் இருந்துச்சு. இப்பவும் வளர்ந்துட்டே இருக்கு. இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோவைக் கூட கேமிங் இண்டஸ்ட்ரியோட வளர்ச்சினால தான் இப்போ சாத்தியமாக்க முயற்சிக்குறாங்க. முதல்ல ரிலாக்ஷேஷன்னு கார்ப்பரேட்ல கொண்டு வந்தாங்க. அப்பறம் அது படிப்படியா வளர்ந்து, இப்போ எல்லாரும் அதுலயே மூழ்கிப் போயிருக்காங்கங்கிறது தான் வருத்தமான விஷயம்! இதுல அப்பப்போடேர் கேம்னு உயிரைப் பறிக்கிற விளையாட்டுகளும்டார்க் வெப்மூலமா பரவிட்டு தான் இருக்கு.” என்று கூறி பெருமூச்சு விட்டவள் நவியைக் காண, அவளோ மந்திரித்துவிட்டது போல அமர்ந்திருந்தாள்.

 

அவளை உலுக்கிய ஜாஷா, “ஹே, என்னாச்சு?” என்று வினவ, “இல்ல, இதுக்கு பின்னாடி இவ்ளோ இருக்கு? இது தெரியாம மக்கள் சாதாரணமா இருக்காங்களேன்னு யோசிச்சேன்.” என்றாள் நவி.

 

ஒரு பிராடக்ட் வெளிய லான்ச்சாச்சுன்னா என்னன்னே தெரியாம, ஸ்டேட்ஸ் சிம்பலுக்காக அதை வாங்கி உபயோகப்படுத்துற மக்கள் இருக்க வரைக்கும், இது மாதிரி ஏமாத்திட்டு தான் இருப்பாங்க. மெடிக்கல் ஆரம்பிச்சு எல்லா ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் சரியான முறையில டெஸ்ட் பண்ணியா வெளிய வருது?” என்று ஜாஷா பேசும்போதே, அந்த அறையிலுள்ள விளக்குகள் அணைந்து எரிந்தன.

 

இப்போது நவிக்கும் அந்த சமிக்ஞை பழக்கமானதால், அவள் ஜாஷாவைப் பார்க்க, “ரொம்ப நேரம் பேசியாச்சு.” என்று எழுந்தவள், அவள் கொண்டு வந்த ஊசியின் மருந்தை நவியின் கைகளில் செலுத்துவதைப் போல பாவனை செய்தவள், மருந்தை வெளியேற்றி இருந்தாள்.

 

ரொம்ப யோசிச்சு மூளையைக் குழப்பிக்காத நவி. உன்னோட குற்றவுணர்வு தேவையில்லாதது. இப்போ இருக்க உலகத்துல அவங்கவங்க தான் அவங்கவங்களுக்கு பொறுப்பு.  சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்ஞாபகம் வச்சுக்கோ.” என்று கூறிவிட்டு ஜாஷா செல்ல, நவியும் ஜாஷா கூறியவற்றை எல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் மனம் குற்றவுணர்விலிருந்து யோசனைக்கு சென்றது!

 

*****

 

சில மணி நேரங்கள் அப்படியே கழிந்திருக்க, அந்த இடமே அமைதியாக இருந்தது. அந்த அறையின் மேலே இருந்த சிறிய துவாரம் வழியே உள்ளே வந்துக் கொண்டிருந்த வெளிச்சம் குறைந்ததால், இரவு நேரமாக இருக்கலாம் என்று யூகித்தாள் நவி.

 

அத்தனை நேராமா சிந்தனையில் இருந்தோம்!என்று நினைத்தவளைக் கலைத்தது கதவு திறக்கும் சத்தம். அங்கு வேலை செய்யும் தாதி ஒருவர் அவளை சாப்பிட அழைக்க, முதலில் மறுத்துவிடுவோமா என்று யோசித்தவள், பின்னர் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால் அதற்கான சக்தி வேண்டும் என்பதை உணர்ந்தவளாக வெளியே சென்றாள்.

 

அந்த தாழ்வாரத்தில் இவளுடன் மற்றவர்களும் நடந்து கொண்டிருந்தனர். ஆனால், வித்தியாசம் என்னவென்றால் யாரும் இவளைப் போல முழு சுயநினைவுடன் இல்லை. அங்கு வேலை செய்பவர்கள் சொல்வதை செய்து கிட்டத்தட்ட இயந்திர வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.

 

இதைக் கண்டவளிற்கு ஜாஷா கூறியவை நினைவிற்கு வர, ‘சிலரோட பேராசையால பலரோட வாழ்க்கை பாதிக்கப்படுதே!என்று கவலைப்பட மட்டுமே முடிந்தது. மேலும், ரிஷப் மட்டும் காப்பாற்றவில்லை என்றால் தன் நிலையும் இதுவே என்று புரியவும் செய்தது.

 

ஒரு பெருமூச்சுடன் அந்த உணவு கூடத்தினுள் சென்றாள். பாத்திரங்களின் சத்தம் மட்டுமே அங்கு மிகுதியாக கேட்டது. மனித குரல்களோ ஆங்காங்கே கேட்டதுஅதுவும் அங்கு வேலை செய்பவர்களின் குரல் தான். மற்றவர்களோ கொடுப்பதை உண்டுவிட்டு அவரவர்களின் அறைகளில் அடைந்து கொண்டனர். அவர்களின் செயல்களிலேயே இது அங்கு வழக்கமாக நடக்கும் நிகழ்வென்று புரிந்தது.

 

அவளும் தனக்கு தரப்பட்ட உணவை எடுத்துக் கொண்டு எங்கு அமர்வது என்று தேட, அவளின் வலப்பக்கத்தில் இரண்டு மேசைகள் தள்ளி, டோவினா அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவள் அமர்ந்திருந்ததிற்கு எதிர்புறம், ஜான் மற்றும் டேவிட் அமர்ந்திருந்தனர். நந்துவும் அங்கிருக்கிறானா என்று நவி தேட, அதன் பலனோ பூஜ்யம் தான்.

 

அப்போது தான் நவிக்கு நோலனின் நினைவும் வந்தது. இங்கு வந்ததிலிருந்து நந்துவையும் நோலனையும் தான் அவள் இன்னும் பார்க்கவில்லை. ஒரு பெருமூச்சுடன், டோவினா அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.

 

அன்று போல இப்போதும் தன்னிடம் காப்பாற்ற சொல்வாளா என்று டோவினாவை பார்த்திருக்க, அவளோ நவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், அமைதியாக உணவை உட்கொண்டிருந்தாள்.

 

ஹ்ம்ம், எவ்ளோ நேரம் தான் கத்திக்கிட்டே இருப்பா? அவளும் இதுக்கு பழகிட்டா போல!என்று நினைத்துக் கொண்டாள்.

 

அத்தனை நேரமில்லாத சத்தம் அந்த அறைக்கு வெளியே வருவதை உணர்ந்து நவி திரும்பிப் பார்க்க, அங்கு தன் குழுவுடன் வந்து கொண்டிருந்தான் ரிஷப். ஜாஷா மற்றும் ரியானும் அக்குழுவில் அடக்கம்.

 

அவள் அவர்களைப் பார்த்துவிட்டு திரும்பிவிட, ரிஷபின் கண்களோ நொடிக்கு ஒருமுறை நவியிடம் படிந்து மீண்டது. அவன் அந்த இடத்தை சுற்றிப் பார்ப்பது போல் இருந்ததால், யாருக்கும் எவ்வித சந்தேகமும் தோன்றவில்லை, ஜென்சியை தவிர! அவள் தான் ரிஷபின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறாளே.

 

முதல் முறை அவன் நவியைப் பார்த்தபோது எதார்த்தமாக எடுத்துக் கொண்டவள், அதன்பிறகு அவனின் கண்கள் அடிக்கடி அத்திசையில் சென்று வருவதைக் கண்டு சந்தேகப்பட்டாள். உணவு நேரம் முடிவதற்குள் சந்தேகத்தை உறுதி செய்தும் கொண்டாள். இவளின் சந்தேகம் ரிஷபின் திட்டத்திற்கு ஊறு விளைவிக்குமோ?

 

நவி, தன் உணவை முடித்துக் கொண்டு கை கழுவும் இடத்திற்கு செல்ல, அவளை ரிஷப் பின்தொடர்ந்தான். அவர்களுடன் ஜென்சியின் விழிகளும் சேர்ந்து கொண்டன.

 

தன் பின்னே நிற்பவனிடம் கவனத்தை செலுத்தாமல், நவி கைகளைக் கழுவிக் கொண்டிருக்க, ரிஷபோ பொறுமை இழந்தவனாக, “நைட் மீட் பண்ணலாம். ரெடியா இரு!” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

 

திடிரென்று பின்னலிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய நவி, அங்கு நின்று கொண்டிருந்த ரிஷபைக் கண்டு விழிக்கையிலேயே, அவன் கூற வந்ததை சொல்லி முடித்து சென்றிருந்தான்.

 

ச்சே இப்படியா பயமுறுத்துறது! ஆமா, என்னவோ சொன்னானே?என்று யோசித்தபடியே நவியும் வெளியே வந்தாள்.

 

அந்த அறையிலிருந்து முதலில் வெளிவந்த ரிஷபின் பதட்டமான முகமும், அவனிற்கு பின்னே வந்த நவியின் குழப்பமான முகமும் ஜென்சியை கலவரப்படுத்தியிருக்க, ‘உள்ள என்ன நடந்துருக்கும்!என்று சிந்திக்க ஆரம்பித்தாள் ஜென்சி.

 

இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனையில் அந்த முன்னிரவு நேரமும் கழிந்தது.

 

நவிக்கு உறக்கம் வரவில்லை என்றாலும், கட்டிலில் சாய்ந்து விட்டத்தை நோக்கி படுத்திருந்தாள். அவளின் மி.மு (மிஸ்டிரியோவிற்கு முன்) வாழ்க்கையையும், மி.பி (மிஸ்டிரியோவிற்கு பின்) வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது அவள் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே ஏதோ சத்தம் கேட்க, முதலில் பிரம்மை என்று நினைத்தாள். ஆனால், மீண்டும் ஏதோ இழுப்படும் சத்தம் கேட்க, கட்டிலிலிருந்து குனிந்து பார்த்தாள்.

 

சத்தம் கேட்டதே தவிர, கட்டிலின் கீழே இருட்டாக இருந்ததால் அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. சில நொடிகளில், அந்த இடத்தின் மையப் பகுதியை பெயர்த்து அதிலிருந்து தலையை மட்டும் நீட்டினான் ரிஷப்.

 

அவனைக் கண்டு அதிர்ந்தவள், “ரிஷப், நீங்க இங்கஎப்படி?” என்று திக்க, “பேச நேரமெல்லாம் இல்ல நவி. சீக்கிரம் கீழ வா!” என்றான்.

 

கீழன்னா இதுக்குள்ளயா?” என்று அந்த துளையைக் காட்டி வினவ, “ஆமா, கம் ஆன் சீக்கிரம்.” என்று அவளை அவசரப்படுத்தினான்.

 

நவியோ அவனின் அவசரத்தை உணர்ந்து கொண்டதால், கட்டிலிலிருந்து இறங்கி அந்த துளைக்குள் செல்ல முயன்றாள். அவள் நுழைவதற்கு ரிஷபும் உதவி செய்தான்.

 

ஒருவழியாக அங்கிருந்த ஏணியில் இறங்கியவளிற்கு, அவன் அவசரப்படுத்தியதற்கான காரணம் புரிந்தது. ஏனெனில், அவன் ஏணியை வைத்து ஏறிய இடம், ஒரு தாழ்வாரமத்தின் மையப்பகுதியாகும். எந்த நேரமும் யாரும் வந்துவிடலாம் என்பதற்காகவே அவன் அவசரப்படுத்தியிருப்பான் என்று புரிந்து கொண்டாள்.

 

நவி இறங்கியதும், அந்த ஏணியை அருகிலிருந்த அறையில் வைத்துவிட்டு வந்தான் ரிஷப். அதற்குள் அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் நவி.

 

அவளிருந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளிருந்த இடத்திலிருந்த தாழ்வாரத்தில் நீல நிற ஒளியைப் பரப்பும் விளக்குகள் இருந்ததென்றால், இங்கு பச்சையும் மஞ்சளும் கலந்த ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன விளக்குகள். மேலும், இந்த இடத்தில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்பது போல அமைதியாக இருந்தது.

 

இதை நினைத்து முடிக்கும் முன்னரே, யாருடைய காலடித் தடமோ அங்கு எதிரொலிக்க, இதயம் பயங்கரமாக துடித்தது நவிக்கு. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ரிஷபின் கரங்களோ அவளை அருகிலிருந்த அறைக்குள் இழுத்துக் கொண்டது.

 

ரிஷபின் கரங்களிற்குள் நின்றாலும், அவளின் இதயத்துடிப்பு இயல்பாகவில்லை. இப்போதைய துடிப்பிற்கான காரணம் வேறோ! நவியின் நினைவுகள் மிஸ்டிரியோவிற்கு சென்று மீண்டன.

 

அதற்குள் அந்த காலடி சத்தம் வெகுவாக குறைந்திருக்க, ரிஷப் நவியை சுற்றியிருந்த கைகளை அகற்றி, வெளியே எட்டிப்பார்த்தான். வெளியே யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, நவியை அழைத்தான்.


அத்தனை நேரம் மனதின் வழியே வேறு உலகத்திற்குள் சென்றவளை, இழுத்துப் பிடித்து நிறுத்தியது ரிஷபின் குரல்.

 

வா போலாம்.” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு அந்த தாழ்வாரத்தில் நடந்தான். சற்று நேரத்தில் தன் யோசனையிலிருந்து வெளிவந்தவள், அத்தகைய சிந்தனைக்காக தன்னையே மானசீகமாக திட்டிக்கொண்டாள்.

 

பின் ரிஷபிடம், “இப்போ எங்க போறோம்?” என்று வினவினாள்.

 

முதல்ல நந்துவைப் பார்க்க போறோம்.” என்று அவளைப் பார்க்காமல் பாதையிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள் நவி.

 

அவளைப் பார்க்காமலேயே, “எதுக்கு இப்படி பார்க்குற?” என்று ரிஷப் வினவ, “ஒன்னுமில்ல!” என்று கூறி வேறுபுறம் திரும்பி விட்டாள் நவி.

 

நண்பனைக் காண போகும் சந்தோஷமும், அவனின் நிலை குறித்த கவலையும் சரிவிகிதத்தில் இருந்தது நவிக்கு. ஒருவித படபடப்புடனே அந்த பயணத்தை மேற்கொண்டாள் நவி. ரிஷபிற்கும் அவளின் நிலை புரிந்ததால் எதுவும் கூறாமல் அமைதியாகவே நடந்தான்.

 

அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் பயணம் முடிவுக்கு வந்தது. அந்த அறை கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை அறை போலவே காட்சியளித்தது. அதன் மையப்பகுதியில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான் நந்து. அவனைக் சுற்றி பல இயந்திரங்கள் அவனின் நிலையைக் கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன.

 

அவனின் நிலை கண்டு பயந்த நவி, “என்னாச்சு நந்துவுக்கு?” என்றாள் நடுங்கிய குரலை மறைத்தவாறு.

 

ரிலாக்ஸ் நவி! நந்துவோட கண்டிஷன் முந்திக்கு இப்போ பரவால. ஹீ இஸ் ஸ்டேபில் நவ்.” என்றான் ரிஷப்.

 

அப்போ முன்னாடி எப்படி இருந்துச்சு ரிஷப்?” என்று பதட்டமாக கேட்டவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரிஷப் ஒரு பெருமூச்சுடன், “நந்துவுக்கு இருக்க பயம் பத்தி உனக்கு தெரியும்ல நவி. அப்படிப்பட்டவன் நோலனோட அந்த குழிக்குள்ள விழுந்தது, அவனோட மனசை ரொம்ப பாதிச்சுருக்கு. அதுக்கப்பறம் அவன் உயிரோட இருக்குறதையே நம்ப மறுத்தான். நாங்களும் எவ்வளவோ கவுன்சிலிங் கொடுத்து பார்த்தோம். ஆனா, ரெக்கவரி ரேட் ரொம்ப ஸ்லோவா இருந்துச்சு. இப்படி கவுன்சிலிங் கொடுத்துட்டு இருந்தப்போ தான் திடீர்னு சூசைட் பண்ண ட்ரை பண்ணியிருக்கான். அதுக்கப்பறம் அவனைக் கன்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்குன்னு மயக்கத்துலயே வச்சுருக்கோம். இப்போ தான் அவனும் ரிசர்ச்ல வேணும்னு நான் சொன்னதுனால, அவனோட மூளைக்கு சில ட்ரீட்மெண்ட் கொடுத்து கொஞ்சம் இயல்பாக்கியிருக்கோம்.” என்றான்.

 

அதைக் கேட்டவளிற்கு மேலும் வேதனையாக இருந்தது. அவளிற்கு தான் தெரியுமே, நந்துவின் பயம். மிஸ்டிரியோவில் அவன் நடந்து கொண்டதைப் பார்த்து, நவியே அதிசயித்து தான் போனாள். ஆனால், அதன் ஆயுள் குறைவு என்று அவள் நினைக்கவே இல்லை.

 

மெல்ல நந்துவினருகே சென்றவள், அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நந்து, சீக்கிரம் ரெக்வராகி வா.  எப்பவும் என்னை சுத்தியே சந்தோஷமா இருந்த உன்னைப் பார்த்துட்டு, இப்போ இப்படி பார்க்க முடியல. எனக்கு நல்லா தெரியும், என்னை விட்டுட்டு உன்னாலயும் இருக்க முடியாதுன்னு, சோ சீக்கிரம் வந்துடு.” என்று பேசியவளின் கண்களை கண்ணீர் மறைத்துக் கொண்டது.

 

அதனால் அவனின் கண்ணசைவை அவள் பார்க்காவிடினும், ரிஷப் பார்த்தான். “நவி, அவன் உனக்கு ரெஸ்பாண்ட் பண்றான். வேற ஏதாவது பேசு. சந்தோஷமான விஷயங்களை பேசு.” என்று அவளைத் தூண்ட, அவளும் இருவரின் சிறுவயது நிகழ்வுகளைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

 

நவியின் பேச்சு படுத்திருந்தவனை கவனிக்க வைத்ததோ, அங்கிருந்த மற்றொருவன் அவளின் பேச்சை நன்கு கவனித்தான். அவளின் சிறுவயது ஏக்கங்களை எல்லாம் அவளறியாமலேயே சொல்லிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த ரிஷபிற்கு தான் கஷ்டமாக இருந்தது.

 

சில நிமிடங்கள் அப்படியே கழிய, “போதும் நவி, அவன் ரெஸ்ட்ல இருக்கட்டும். ஆனா, நீ பேசுனதுல அவன்கிட்ட நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுது. நீயும் இல்லன்னு நினைச்சு தான், நாங்க எவ்ளோ ட்ரை பண்ணியும் ரெஸ்பாண்ட் பண்ணலன்னு நினைக்குறேன். இனி சீக்கிரம் ரெக்வராகிடுவான்.” என்று கூறினான் ரிஷப்.

 

நவிக்கும் ரிஷபின் பேச்சு சற்று ஆறுதலளித்தது. ரிஷப் அங்கிருந்து கிளம்பலாம் என்று கூற, படுத்திருந்த நண்பனைப் பார்த்துவிட்டு ரிஷபுடன் வெளியேறினாள்.

 

மீண்டும் அதே தாழ்வாரத்தில் நடக்க ஆரம்பித்தனர். நவியின் மனம் முழுவதும் நந்துவின் நினைவே வியாபித்திருக்க, வழி மாறி செல்வது கூட அவளின் கருத்தில் பதியவில்லை.

 

அந்த தாழ்வாரத்தின் முடிவிலிருந்த இயங்கு ஏணிக்குள் (லிஃப்ட்) ரிஷப் நுழைய, நவியும் அவன் பின்னே சென்றாள். அவளின் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்து கொண்ட ரிஷப், “ஆர் யூ ஓகே, நவி?” என்று வினவ, அப்போது தான் சுயத்தை அடைந்தவள் அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்தாள்.

 

இதுக்குள்ள எப்படி வந்தோம்?என்று அவள் யோசிக்கும்போதே, “ரிலாக்ஸ் நவி, இப்படி சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்குறது நல்லதில்ல. குறிப்பா இப்போ நாம இருக்க சூழ்நிலையில.” என்று எடுத்துக் கூறினான்.

 

சாரி ரிஷப். நந்துவை அப்படி பார்த்தது மைண்ட் அப்செட்டாகிடுச்சு.” என்றாள் நவி.

 

அதன்பின்பு இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. அந்த இயங்கு ஏணியை விட்டு வெளியே வந்தவர்கள், மீண்டும் நடக்க ஆரம்பிக்க, நவி தான் அந்த மௌனத்தை களைத்தாள்.

 

இப்போ எங்க போயிட்டு இருக்கோம், ரிஷப்?” என்று கேட்க, “நீ தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்த விஷயத்தை தெரிஞ்சுக்க போறோம்.” என்று கூறிவிட்டு முன்னே நடக்க, அதுவரை இல்லாத பரபரப்பு நவியை தொற்றிக் கொண்டது.

 

இவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதை ஒரு ஜோடி விழிகள் கண்டதை இருவருமே உணரவில்லை.

 

அந்த கட்டிடத்தின் மேல்மாடியில் பாதியை விழுங்கிக் கொண்டு அமைந்திருந்த அறை அது. அதற்குள்ளே நுழைந்ததும், ஏதோ சொல்லத் தெரியாத உணர்வுகளுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர்ந்தாள் நவி.

 

தன்னை தாக்கும் உணர்வுகளோடு போராடிக் கொண்டே அந்த அறையை ஆராய்ந்தாள். அந்த அறையின் ஒருபக்க சுவரில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் அவளை ஈர்க்க, அதனருகே சென்று பார்த்தாள்.

 

அந்த புகைப்படங்களைப் பார்த்ததும், அவளிற்கு அந்த மிஸ்டிரியோவில் ஏற்பட்ட மாயை தான் நினைவிற்கு வந்தது.

 

இந்த போட்டோல இருக்குறவங்க தான, அந்த இல்யூஷன்ல பார்த்தோம்.” என்று ரிஷபிடம் வினவ, அவனோ கரகரப்பான குரலில், “ஆமா, உலகத்தோட தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டியல்ல இவங்களுக்குன்னு நிரந்தர இடத்தை பிடிச்சவங்க.” என்று கூறினான்.

 

ம்ம்ம் ஆமா, நானும் கேள்விப்பட்டிருக்கேன். மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணன்கரெக்ட்டா?” என்று வினவினாள்.

 

ஹ்ம்ம், இவங்களை ஆராய்ச்சியாளர்களா நீ கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா, உன் அப்பா அம்மாவா இவங்களை உனக்கு தெரியாது!” என்று சத்தமில்லாமல் அவளை அதிர வைத்தான் ரிஷப்.

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)