Barkkavi's Stories Skip to main content

Posts

Showing posts from May, 2023
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

7 - புவியே காட்சிப்பிழையாய்

காட்சிப்பிழை 7 அனைவரும் அந்த வேலியைக் கடந்து வந்ததும் ரியான் ரிஷபிடம், “இப்போ திரும்ப அந்த சீக்ரெட் ரூமுக்கு போகப் போறோமா?” என்று வினவ, “இல்ல அது இங்கயிருந்து ரொம்ப தூரம்.” என்ற ரிஷப் ஜானை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஜானால அவ்ளோ தூரம் தாக்கு பிடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். நாங்க அந்த பவர் சப்ளை ஆஃப் பண்ண போனப்போ, அந்த சீக்ரெட் ரூம் மாதிரியே ட்ரோன்ஸ் கண்காணிக்காத ஒரு இடத்தை பார்த்தோம். இப்போ நாம அங்கயே  போலாம்.” என்றான். நவிக்கும் ரிஷப் எந்த இடத்தைப் பற்றி பேசுகிறான் என்பது புரிந்தது. மிகவும் கவனத்துடனே, முன்பு சென்ற அதே வழியில் சென்று அந்த அறையை அடைந்தனர்.  அத்தனை நேரம் வலியைப் பொறுத்துக் கொண்ட ஜானால், இப்போது சுத்தமாக முடியவில்லை. அவன் கீழே சரிய, அவனிற்கான அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு தயாரானான் நோலன். அவனிற்கு உதவியாக ஜாஷாவும் நந்துவும் இருந்தனர். ரிஷபுடன் ரியான், நவி மற்றும் டோவினா தங்களின் அடுத்தக்கட்ட திட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அவர்கள் யாருடனும் சேராமல் தனியே இருந்தனர் அந்த சீன தம்பதியர். ரியான் ரிஷபிடம், “அந்த டிராகனை இதுக்கு முன்னாடி நீங்க பார்த்தது இல்ல...

6 - புவியே காட்சிப்பிழையாய்

  காட்சிப்பிழை 6   ஒருவழியாக அனைவரும் அந்த வேலியைக் கடந்து மற்ற பக்கத்திற்கு வந்து சிறிது ஆசுவாசப்பட்டுக் கொண்டனர் . ஒருவருக்கொருவர் அந்த தற்காலிக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்க , ரிஷபின் முகம் தீவிர நிலையிலிருந்து சற்றும் மாறவே இல்லை . அடுத்தடுத்து இருக்கும் ஆபத்துகள் அவனிற்கு அல்லவா தெரியும் !   நவியும் தன் மகிழ்ச்சியை நந்துவிடம் பகிர்ந்து கொண்டாலும் ஓர விழியில் ரிஷபைக் காணத் தவறவில்லை .   ரிஷபின் இறுக்கத்தைக் கண்ட நவி அவனருகே சென்று , “ என்னாச்சு ரிஷப் ? ஏன் இவ்ளோ சீரியஸா இருக்கீங்க ?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே யாரோ ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது .   நிசப்தமான அந்த இரவு நேரத்தில் கேட்ட அந்த அலறல் ஒலி தைரியமானவர்களைக் கூட பயப்படுத்தும் என்கையில் சில மணி நேரங்களாக திக் திக் நிமிடங்களைக் கடந்து சற்றே மகிழ்ச்சியாக இருந்த அந்த குழுவினரை பயப்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம் !   அந்த ஒலியை முதலில் கேட...