சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
பான்கர்ஹ் கோட்டை (Bangarh fort) இந்தியாவில் அமானுஷ்ய இடம் என்று சொன்னால் முதலில் நினைவிற்கு வருவது பான்கர்ஹ் கோட்டை. இக்கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் உள்ளது. தலைநகர் ஜெய்ப்புரில் இருந்து சுமார் 52 கிலோமீட்டரில் அமைந்துள்ள இக்கோட்டை பல அமானுஷ்ய ஆய்வாளர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் இடமாய் கருதப் படுகிறது. மேலும் இதைப் பற்றிய வட்டாரக் கதைகளினால், இதில் ஆர்வமுடையவர்கள் பலர் இக்கோட்டையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மாலை நேர சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இக்கோட்டைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று Archeological survey of India கூறுகின்றது. பின்கதை: இக்கோட்டை 17ஆம் நூற்றாண்டில், மான் சிங் என்பவரால் அவரது மகன் மாதவ் சிங்கிற்காக கட்டப்பட்டது. அவர்களின் வம்சாவளி இளவரசியான ரத்தினாவதி பேரழகி என்று போற்றப்படுபவள். அவளின் 18ஆம் அகவையில், அவளின் அழகிற்காகவே சுற்றுப்புற ராஜ்ஜியத்தில் இருந்து பலர் அவளை மணம் முடிக்க கோரிக்கை விடுத்தனர் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய அழகியான ரத்தினாவதியின் அழகில் மயங்கி அவளை அடைய விரும்பினான் மந்திரவாதி ஒருவன். ஒரு நாள் அவள் சந...