கருவறை தா(ண்டி)ங்கிய சுமை - சிறுகதை Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

கருவறை தா(ண்டி)ங்கிய சுமை - சிறுகதை

 கருவறை தா(ண்டி)ங்கிய சுமை




பிரசவ அறை… எட்டு வருடங்களாக பிள்ளை வரம் வேண்டி, காத்திருந்தவள் அனுபவித்த வலிகளை எண்ணிப் பார்க்கையில், இந்த பிரசவ வலி அவளிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.


இத்தனை நாள் பட்ட அவமானங்களுக்கு மருந்தாய் வரப்போகும் தன் மகவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவளின் மனதில் வெகு காலங்களுக்குப் பின் உற்சாகம் ஊற்றெடுக்க, அதே மகிழ்ச்சியுடன் பிரசவத்திற்கு தயாரானாள்.


“கல்யாணமாகி இத்தன வருஷமாச்சு… இன்னுமா உண்டாகாம இருக்கா…?”


“எனக்கென்னமோ அவகிட்ட தான் குறை இருக்கும்னு தோணுது…”


“இங்க பாரு டி… இன்னும் ஆறு மாசம் தான் உனக்கு கெடு… அதுக்குள்ள புள்ள பெத்து தர முடியலைனா, உன்ன தொரத்தி விட்டுட்டு, என் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்…”


ஒன்றா இரண்டா… இவை போல எண்ணற்ற பேச்சுக்களை கேட்டு கேட்டு, அவளின் மூளையும் மழுங்கித் தான் போனது. ஒரு கட்டத்தில், தனக்கு குழந்தையே பிறக்காது என்று வலுவாக நம்பிவிட்டவளிற்கு உறுதுணையாக இருந்து, அவளிற்கு ஆறுதல் அளித்த ஒரே ஜீவன் அவளின் கணவன் மனோஜ்.


கணவன் மட்டும் துணையிருக்கவில்லை என்றால், அந்த வாழ்க்கையை நினைக்கவே பயமாக இருந்தது அகிலாவிற்கு.


“நல்லா புஷ் பண்ணு மா… குழந்தையோட தலை இன்னும் வெளிய தெரியல…” என்ற மருத்துவரின் குரலில் கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டவள், பல்லைக் கடித்துக் கொண்டு மருத்துவர் கூறியதை செய்ய, அன்னையை அதிக நேரம் காக்க விடாமல் ஜனித்திருந்தாள் அவள்.


ஆம் பிறந்தது பெண் குழந்தையே… குழந்தையை தாயிடம் காட்ட, தன் மகளை ஸ்பரிசித்தவள், பிறப்பின் பலனை அடைந்தது போல உணர்ந்தாள்.


அப்போது தான் அவளின் எண்ணம், குடும்பத்தினரிடம் செல்ல, பிறந்தது பெண் மகவு என்று தெரிந்தால் மாமியார் என்ன சொல்வார்களோ என்று பயந்தாள். பெண் என்பவள் எதற்கும் எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டும் என்ற மனநிலையில் தானே வளர்க்கப் படுகிறாள்…


அவளின் பயத்தை மெய்ப்பிப்பது போலவே அவளின் மாமியார் குழந்தையைக் கண்டதும், “என்னது இது பொம்பள பிள்ளையா…” என்று முகம் சுழிக்க, மனோஜ் அவரை முறைத்து விட்டு, தன் மகளை கைகளில் வாங்கி பூரித்தான்.


அவனும் அல்லவா இத்தனை வருடங்களாக இந்த நாளிற்காக ஏங்கினான். மனைவி அளவிற்கு இல்லாவிட்டாலும், அவனின் பணியிடத்தில், மறைமுகமான கிண்டலில் ஆரம்பித்து, நேரிலேயே  ‘நீ அதற்கெல்லாம் லாயக்கில்லை…’  என்பன போன்ற வார்த்தை பிரயோகங்கள் அவனையும் வதைத்துக் கொண்டே தான் இருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப் பிறந்த மகளை ஆசையுடன் தூக்கிக் கொண்டான்.


நாட்கள் ஓடின. அகிலாவும் மனோஜும் அவர்களின் பெண்ணுக்கு அபூர்வா என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தனர்.


அபூர்வாவின் வயது கூட கூட, அவளின் செயல்கள் வித்தியாசமாக இருந்தன. நன்றாக சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று வீறிட்டு அழ ஆரம்பிக்கும். சில நேரங்களில் எதற்கென்றே தெரியாமல், அருகில் உள்ளதை உடைப்பாள். இல்லையென்றால், அருகில் உள்ளவர்களை அடிப்பாள்.


இவளின் செயல்களைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அகிலாவின் காதுபடவே, “அந்த பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை போல இருக்கு… பாவம் அவ எட்டு வருஷம் கழிச்சு பிள்ளை பெத்துருக்கா… அதுவும் சரியா இல்லனா அவ மனசு எவ்ளோ பாடுபடும்…” என்று அவளிற்கு ஆறுதல் கூறுகிறேன் என்னும் சாக்கில் அவளின் ரணத்தை கீறிவிட்டு  வேடிக்கை பார்ப்பர்.


அவளின் கடந்த காலத்தில் இவர்களின் பேச்சுக்களை எண்ணி வருந்தியிருக்கிறாள். ஆனால் இப்போதோ அவர்களின் பேச்சுக்களை காதுகளைத் தாண்டி உள்ளே செல்ல அவள் அனுமதிக்கவில்லை. அவளிற்கு தான் மகளை பார்த்துக் கொள்ளும் பெரிய வேலை இருக்கிறதே…


ஆனால் அவர்கள் கூறியதை அவள் உணரும் காலமும் வந்தது. அபூர்வாவிற்கு இரண்டு வயதானாலும் அவளிற்கு பேச்சு வரவில்லை. அதை அவள் கணவனிடம் கூற, “இப்போ எல்லாம் ரொம்ப குழந்தைங்க லேட்டா தான் பேச ஆரம்பிக்குறாங்க… கொஞ்ச நாள் போகட்டும்… அவளே பேசுவா…” என்று மகளைக் கொஞ்சினான்.


ஆனால் நாளாக நாளாக அபூர்வாவின் செய்கைகைகள் இருவருக்குமே சிறிது பயத்தை கொடுத்தது. அவளின் பெயரை சொல்லி அழைத்தால் கூட அதற்கு எதிர்வினை ஆற்றுவதற்கு அவளிற்கு சிறிது அவகாசம் தேவைப் படுகிறது. சில நேரங்கள் அமைதியாக, சாதாரண குழந்தைக்குரிய கலகலப்பு கூட இல்லாமல் இருப்பவள், பல நேரங்களில் பிடிவாதத்தின் மறுபிம்பமாக இருந்தாள்.


இதையெல்லாம் மனோஜிடம் சொல்லி புலம்பினாள் அகிலா. அடுத்த நாளே அபூர்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அபூர்வாவிற்கு பல சோதனைகள் நடத்தப்பட்டன. பின் சில மணி நேரங்கள் கழித்து, சோதனைகளின் ஆய்வறிக்கையை பார்வையிட்ட மருத்துவர்,  “உங்க பொண்ணுக்கு நுண்ணறிவுஈவு (IQ) அளவு கம்மியா இருக்கு… சாதாரண குழந்தைகளுக்கு 90 – 110ன்னு இருக்க நுண்ணறிவுஈவு, உங்க பொண்ணுக்கு 70க்கும் கம்மியா இருக்கு… அதாவது உங்க பொண்ணுக்கு மனவளர்ச்சி குறைபாடு இருக்கு…” என்று கூற, பெற்றோர் இருவருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.


மேலும் அந்த மருத்துவர் தொடர்ந்தார், “இதுக்கு முன்னாடி உங்க பொண்ணோட நடவடிக்கைகள் வித்தியாசமா தெரியலையா…” என்று கேட்க,  இருவரும் அவர்கள் கவனித்த விஷயங்களைக் கூறினர்.


“சில குழந்தைகள் தாமதமா பேசுவாங்க… அப்படி நினைச்சு தான் நாங்க விட்டுட்டோம்…” என்று குற்றவுணர்ச்சியுடன் கூறினர்.


“இது தாங்க தவறான செயல்… நீங்களா ஒன்ன கற்பனை பண்ணிட்டு நீங்களா முடிவெடுத்துடுறீங்க… ஹ்ம்ம் என்ன சொல்றது இப்போ இருக்க மக்களோட மனநிலை அப்படி… இணையத்தில் இருக்க எல்லாத்தையும் முயற்சி செய்றாங்க… அதை மருத்துவர் கிட்ட உறுதிபடுத்திக்கணும்னு கூட யாரும் யோசிக்க மாட்டிக்கிறாங்க… மருத்துவத்துறை இவ்வளவு முன்னேறியிருந்தாலும் இந்த குறைபாட்டிற்கான சரியான மருத்துவம் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. உங்க குழந்தைக்கு சில சிகிச்சைகளை நாங்க பண்ண ஆரம்பிக்கிறோம்… ஆனா அதற்கான முடிவுகள் தெரிய தாமதமாகலாம்… ஏன்னா இது மூளை சம்மந்தப்பட்டது…” என்று கூறியவர், மேலும் சில சிகிச்சை முறைகளையும் கூறினார்.


“அப்பறம் நீங்க நாளை மாலையும் வர வேண்டியதிருக்கும். இந்த மாதிரியான மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளை வளர்க்குறது சாதாரண விஷயம் இல்ல… அதனால நாங்களே அவங்க பெற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவோம்… “ என்றும் கூறினார்.


மூவரும் வீட்டிற்கு வர, வெளியே நின்றிருந்த அகிலாவின் மாமியார், “என்ன என்ன” என்று கேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டார்.


மனோஜ் மருத்துவமனையில் நடந்தைக் கூற, “ஐயோ… சீக்கு வந்த பிள்ளைய பெத்து குடுத்துருக்காளே… இதை நான் எங்கன்னு  போய் சொல்லுவேன்…” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.


ஏற்கனவே, மருத்துவமனையில் கேட்ட செய்திகள்  அகிலாவின் மனதை தாக்கியிருக்க, மாமியாரின் புலம்பல்கள் ஒருவித எரிச்சலை அவளுள் தோற்றுவித்தது.


எதுவும் பேசாமல், உறங்கியிருந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு, அவர்களின் அறைக்குச் சென்று விட்டாள். மனோஜ் தான் அவனின் அன்னையை சத்தம் போட்டு அடக்கிவிட்டு அறைக்கு வந்தான். அங்கு அகிலாவோ, மகளின் சிகையை கோதியவாறு, அவளின் யோசனையில் மூழ்கியிருந்தாள்.


அகிலாவின் மனநிலை தான் மனோஜிற்கும் என்பதால், அவனும் அமைதியாக படுத்துவிட்டான்.


அடுத்த நாள் காலை, இருவருக்கும் அலைபேசி அழைப்பில் தான் விடிந்தது.


“என்னமா அகிலா, உன் பொண்ணுக்கு மனவளர்ச்சி கம்மியாமே…” – இப்படி உற்றார் உறவினர் பலரின் பரிதாப அழைப்புகளிலும், சிலரின் கிண்டல் பேச்சுகளிலும் அன்றைய காலை நேரம் சென்றது. 


இதற்கான காரணம், அவனின் அன்னை தான் என்பதை அறிந்த மனோஜ், அவரை முறைக்க, “நான் என்ன இல்லாததையா சொன்னேன்…” என்று கூறியவர், அவரின் மூத்த மகன் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்.


அகிலாவின் மனமோ இவற்றால் இறுகிக் கிடைந்தது. மனோஜ் தான் அவளை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துக் சென்றான். 


அவர்களை வரவேற்ற ஆலோசகர், அபூர்வாவை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு, அங்கிருந்த விளையாட்டு பொருட்களை கொடுத்து அவளை விளையாட விட்டார். பின் இவர்களிடம் திரும்பியவர் மனவளர்ச்சி குறைபாடு எதனால் வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பதையெல்லாம் கூறினார்.


“இந்த குறைபாட்டிற்கான மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கலன்னு சொல்லியிருப்பாங்க… என்னை பொறுத்தவரைக்கும் இப்போ இவங்களுக்கான சிகிச்சைகளை விட, இவங்கள நீங்க எப்படி கையாள்றீங்கங்கிறது தான் முக்கியம்… இவங்க எப்போ எந்த மனநிலையில் இருக்காங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமில்ல… அதுக்கு நம்ம அவங்க உலகத்துக்குள்ள போகணும்… இவங்களால சீக்கிரமா எந்த வேலையும் செய்ய முடியாது… சாப்பிடுறது, படிக்கிறது, எழுதுறதுன்னு எல்லாமே இவங்களா செய்யுறதுக்கு ரொம்ப நாளாகும்… அதுவரைக்கும் பொறுமையா இவங்கள கவனிச்சுக்கிட்டு, இவங்களுக்கு சரிசமமா நம்ம நடந்துகிட்டோம்னா, இவங்களையும் நிச்சயமா ஒரு சாதனையாளராக்கலாம்… ம்ம்ம்… எல்லாருக்கும் சொல்றதை தான் உங்களுக்கும் சொல்றேன்… இவங்க கடவுளோட குழந்தைங்க… இவங்ள உங்களுக்கு குடுத்துருக்காருன்னா நீங்க அவங்கள நல்லா பார்த்துப்பீங்கன்னு தான்… இது கடவுள் உங்களுக்கு வைக்குற பரிட்சையா நினைச்சுக்கோங்க… இதுல நீங்க பாசாகுறது, உங்க பொண்ண நீங்க வளர்க்குற விதத்துல இருக்கு… இந்த குறைபாடு இருக்க பல சாதனையாளர்களை இந்த உலகம் பார்த்துருக்கு… அவங்க வரிசையில் உங்க பொண்ணும் கண்டிப்பா வருவா… அதுக்கு உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்…”  என்றார்.


“இந்த ஆலோசனைகளை எங்களுக்கு சொல்றத விட எங்கள சுத்தியிருக்குறவங்களுக்கு தான் நீங்க கொடுக்கணும்…” என்றாள் அகிலா. அவள் இதைக் கூற வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் அவளை அறியாமலேயே இதை கூறியிருந்தாள்.


அதைக் கேட்ட அந்த மருத்துவர் லேசாக சிரித்துவிட்டு, “உங்கள சுத்தியிருக்குறவங்க சொல்றத நீங்க மனசு வரைக்கும் எடுத்துட்டு வந்தா, அப்பறம் உங்களால நிம்மதியா வாழவே முடியாது… உங்க வாழ்க்கை உங்க கைல… உங்கள விமர்சிக்கிற யாரும் உங்களுக்கான வாழ்க்கையை வாழப் போறதில்லை… உங்களுக்கு பிடிக்கலையா ஒதுங்கிடுங்க… அப்போ தான் உங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும்…” என்று கூறினார்.


அவர்களின் ஆலோசனை நேரம் அத்துடன் முடிய, அகிலாவும் மனோஜும் அபூர்வாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர்.


அகிலா அந்த மருத்துவர் கூறியதையே அசைபோட்டுக் கொண்டிருந்தாள். மனோஜ் அவளிடம் காரணத்தை வினவ, “எனக்கு அந்த டாக்டர் சொன்னது புரியதுங்க… ஆனா நம்ம வச்சிருக்குறது பெண் குழந்தை… அவங்களுக்கு ஏதாவதுன்னா வெளிய சொல்ற குழந்தைகளுக்கே, இந்த சமுதாயத்துல பலவித ஆபத்துக்கள் இருக்குறப்போ, நம்ம அபூர்வா….” என்று மேலும் கூற முடியாமல், அவனின் தோள் சாய்ந்தாள்.


“ம்ம்ம் நம்ம அபூர்வாவை பார்த்துக்குறது கொஞ்சம் சிரமம் தான்… ஆனா அந்த டாக்டர் சொன்ன மாதிரி, இது நமக்கு ஒரு பரிட்சைன்னு நினைச்சுப்போம்… அந்த கடவுள் நம்மளுக்கு வச்ச பரிட்சை… முடிஞ்ச அளவுக்கு நாம அபூர்வாவ இந்த உலகத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக் காட்டுவோம்… நம்ம பொண்ணுக்குள்ளேயும் ஒரு திறமை கண்டிப்பா இருக்கும்… அதை இந்த உலகத்துக்கு தெரியுற மாதிரி எடுத்துக்காட்ட அவளுக்கு நாம துணையாயிருப்போம்… என்ன இதெல்லாம் நடக்குறதுக்கு ரொம்ப காலமாகலாம்… அதுவரைக்கும் நாம தான் அவள பார்த்துக்கணும்… பத்து மாசம் வயித்துல சுமந்து பாதுகாத்த நீ, இனியும் பார்த்துக்க மாட்டீயா என்ன… உங்க ரெண்டு பேரையும் நான் என் உயிரிருக்க வரை பார்த்துப்பேன்… நம்ம அபூர்வாவை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குற ஒருத்தன் வந்ததும், அவன் கைல அவள பத்திரமா ஒப்படைச்சுடலாம்…  நம்ம காலத்துக்கு அப்பறம் அவன் பார்த்துப்பான்” என்று பல கனவுகளுடன் கூறினான் மனோஜ்.


“நீங்க சொல்றது உண்மை தாங்க… இந்த உலகம் என்னை மலடின்னு சொல்லி கிண்டல் செய்யுறத தடுக்க வந்தவ என் பொண்ணு… பத்து மாசம் என்ன, நான் உயிரோட இருக்க வரைக்கும் என் நெஞ்சுல சுமப்பேன் என் பொண்ண… யாரு என்ன சொன்னா என்ன… இனி இந்த உலகத்துல அவளுக்கு கிடைக்கப்போற அங்கீகாரம் தான் நம்மளோட இலக்கு…” என்று கூறியவள், தன் மகளை வாஞ்சையுடன் தடவினாள்.


பத்து மாதங்கள் சிசுவை சுமக்கும் மற்ற அன்னைகளுக்கு குழந்தை சுமையில்லை எனில், கருவறை தாண்டி தன் காலமுள்ளவரை நெஞ்சில் சுமக்கப் போகும் அகிலாவிற்கும் அபூர்வா சுமையில்லை…


Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)