கேயாஸ் தியரி
இவ்வுலகில் நிறைய விஷயங்களை நாம் கணிக்கலாம்… எடுத்துக்காட்டிற்கு நேரம், இதயத்துடிப்பு… இப்படி பல விஷயங்களை கணிக்கலாம்… ஆனா கணிக்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன… உதாரணத்திற்கு வானிலை மாற்றம், காலநிலை மாற்றம்… இவற்றையெல்லாம் கணிக்க உதவுவது தான் கேயாஸ் தியரி… இது ஒரு கணிதம் சம்மந்தப்பட்ட தியரி…
பட்டர்ஃப்ளை எஃபக்ட்
ஒரு நிகழ்வின் ஆரம்ப கட்டத்தில் நடக்கும் சிறு மாற்றம் பிற்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது… இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். நம் வாழ்க்கை கூட, இந்த பட்டர்ஃப்ளை எஃபக்ட்டினால், புதுப்புது மாற்றங்களையும், விளைவுகளையும் உள்ளடிக்கியுள்ளது.
ஒரு பட்டாம்பூச்சி அதன் சிறகை படப்படவென்று அடிப்பதால் உண்டாகும் காற்றினால் பல மாதங்களுக்குப் பிறகு வேறொரு இடத்தில் புயல் உருவாக்கலாம்… இதனை வைத்தே இதற்கு பட்டர்ஃப்ளை எஃபக்ட் என்று பெயர் வந்தது.
நம்ம வாழ்க்கை நிகழ்வே எடுத்துகிட்டோம்னா, ஒரு நேர்முகத் தேர்வுக்கு போறீங்க… அங்க மூணு வருஷத்துக்கு பாண்ட் சைன் பண்ண சொல்றாங்க… அதை சைன் பண்ணி வேலைல சேருறதும், சைன் பண்ணாததும் உங்க கைல… நீங்க அத சைன் பண்ணிருந்தா உங்க வாழ்க்கை ஒருவிதமா இருந்திருக்கும், சைன் பண்ணாம இருந்திருந்தா உங்க வாழ்க்கை வேற விதமா இருந்திருக்கும்… இங்க அந்த கையெழுத்து தான் சின்ன மாற்றம்… அதுக்கு பிறகான உங்க வாழ்க்கை தான் அதோட விளைவு…
இதுவரைக்கும் உலக வரலாற்றுல இது மாதிரி நடந்தத இப்போ பார்க்கலாம்…
எல்லாருக்கும் ஹிட்லர் தெரியும்… இரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமானவர்… சின்ன வயசுல இருந்து ஓவியம் வரையுறதுல அவருக்கு ஆர்வம் அதிகம்.. ஜெர்மனியோட தலைமை பொறுப்பேற்குறதுக்கு முன்னாடி இரண்டு முறை வியன்னால இருக்க ஒரு கல்லூரில ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிச்சுருக்காரு… இரண்டு முறையும் அந்த கல்லூரி அவரோட விண்ணப்பத்த ஏத்துக்கல… அந்த கல்லூரி மட்டும் அவரோட விண்ணப்பித்த நிராகரிக்காம இருந்திருந்தா, ஹிட்லர் ஒரு ஓவியரா ஆகியிருப்பாரு… இரண்டாம் உலகப் போர் நடக்குறதுக்கான வாய்ப்புகளும் குறைவா இருந்திருக்கும்…
அடுத்து சொல்லப்போறவரும் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்… கிரிக்கெட் வீரர் தோனி… இவர பத்தின படத்துலயே இத காமிச்சுருப்பாங்க… சின்ன வயசுல தோனி ஒரு ஃபுட் பால் பிளேயர்… ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல விக்கெட்- கீப்பர் விளையாட முடியாத காரணத்துனால, ஸ்கூல் கிரிக்கெட் கோச் கோல்-கீப்பரான இவர விக்கெட்- கீப்பரா விளையாட சொல்வார்… அன்னைக்கு அந்த கோச் கண்ணுல இவரு விழாம போயிருந்தா, இன்னைக்கு இந்தியன் கிரிக்கெட் டீம்முக்கு தோனிங்கிற ஒரு பிளேயர் கிடைக்காமலேயே போயிருப்பாரு… நமக்கு ரெண்டு உலக கோப்பையும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவா இருந்திருக்கும்…
என் வாழ்க்கைல, நான் பார்த்து, ‘என்ன மனுஷன் யா இவரு..’னு (ரெண்டும் வேற வேற மாடுலேஷன்ல) வியந்த ரெண்டு பேரோட வாழ்க்கைல இந்த பட்டர்ஃப்ளை எஃபக்ட்டோட விளைவுகள பார்த்தோம்… இதே மாதிரி உங்க வாழ்க்கைல நீங்க பார்த்ததையோ, இல்ல உங்களுக்கு நடந்ததையோ கமெண்ட்ல பகிர்ந்துக்கோங்க….
Apdi ellan therila ma. Nyaagam illa
ReplyDeleteIt's ok sis...😁😁😁 Namma life la nadakura chinna visayam kooda butterfly effect dhn... Ipo neenga indha comment pakuradhu kooda butterfly effect dhn😊😊😊
Delete