நாள் : Aug-20-2021
இது ஒரு periodic கனவு. சோ எல்லாரும் பழைய மன்னர் காலத்தை இமேஜின் பண்ணிக்கவும்...😁😁😁
என் கனவுல, ஒரு அழகான நாடு (அழகான நாட்டுக்கு என்னென்ன வர்ணனைகள் தேவையோ, அதை மானே தேனே மாதிரி இங்க இன்செர்ட் பண்ணிக்கவும்...😜😜😜)
அந்த நாட்டோட இளவரசி தான் நானு... (நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்...😜😂🤣)
(மேற்கண்ட படம் கற்பனைக்கே...😜😜😜)
எனக்கே அந்த இளவரசி அட்டயர்ல பார்க்கும்போது கொஞ்சம் ஷையா தான் இருந்துச்சு...🙈🙈🙈
ஆனா, கொஞ்சம் நேரம் கூட அதை நினைச்சு சந்தோஷப்பட விடாம, அங்க இருந்த யாரோ வந்து இளவரசியை கொல்ல திட்டம் போட்டிருக்காங்கன்னு சொல்ல, 'ரைட்டு, இங்கேயும் ரன்னிங் சேஸிங் தான் போல'ன்னு என்னையே சமாதானப்படுத்திக்கிட்டேன்...😏😏😏
அப்போ ஆரம்பிச்ச ஓட்டம் முடிவுக்கே வரல... 'யாருய்யா இவ்ளோ பெருசா அரண்மனை கட்டினாங்க... வெளிய போறதுக்கே பல மைல் கடக்கணும் போல...'ன்னு மைண்ட் வாயிஸ்ல பேசிட்டே போனா, அங்க இன்னொருத்தன் கூட கோர்த்துவிட்டுட்டு முதல்ல வந்த ஆள் போயிட்டான்..!
(பிகு... கனவுல என் முகம் தவிர யாருடைய முகமும் தெளிவாக தெரியாத காரணத்தினால், யாரு அவன்னு தெரியல...😑😑😑)
அதுக்கு அப்பறம் திரும்பவும் ஒரு ரன்னிங் செஷன்... 'ஏண்டா உங்க ஊர்ல இளவரசியை இப்படி தான் ரன்னிங்லேயே கூட்டிட்டு போவீங்களா..?'ன்னு திரும்பவும் மை மைண்ட் வாய்ஸ் தான்..!
என்னோட மைண்ட் வாய்ஸ் அவ்ளோ சத்தமாவா கேட்டதுங்கிற மாதிரி, திடீர்னு ஒரு இடத்துல நின்னுட்டான். அப்பாடின்னு நிம்மதியா மூச்சு விடுறதுக்குள்ள, என்னை இழுத்துட்டு ஒரு ரூமுக்குள்ள போனான்.
அந்த ரூமுக்குள்ள, ரூமா இருக்கும்னு பார்த்தா எங்குட்டு எங்குட்டோ ஸ்டெப்ஸ் போகுது...! 'ஏண்டா ஸ்டெப்ஸுக்கு எல்லாம் கதவு போட்டு மூடி வச்சுருக்கீங்களே...' ன்னு நான் மைண்ட் வாய்ஸ்லயே சோக ட்யூன் போட, அடுத்து அவன் அதுல ஏற சொன்னதும் தலை சுத்த ஆரம்பிச்சுருச்சு...😐😐😐
சரியா அந்த நேரத்துல எங்க அம்மா என்னை எழுப்ப, 'போங்கடா உங்க நாடும் இளவரசியும்...'ன்னு கனவுல இருந்து வெளிய வந்துட்டேனாம்...🤦🤦🤦
Post Dream Scenario
Me to my brain : உனக்கு இந்த ரன்னிங் சேஸிங் இல்லாம கனவு உருவாக்க தெரியாதா..? இளவரசியா இருந்தா கூட அதே ரன்னிங் சேஸிங்கா...😤😤😤
Comments
Post a Comment
Please share your thoughts...