நாள் : Jun-24-2021
நானும் என் பிரெண்டும் வேலைக்கு போறதுக்காக எப்பவும் போல (during BC - Before Covid) நைட் ட்ரெயின்ல பெங்களூரு நோக்கி பயணம் பண்ணிட்டு இருந்தோம்... நடுராத்திரில பெங்களூருவை கிட்டத்தட்ட நெருங்கிட்டப்போ, ஏதோவொரு ஸ்டேஷன்ல ட்ரெயின் நிக்க, நானும் என் பிரெண்டும் அதிசயமா கீழ இறங்குனோம்... எதுக்குன்னே தெரியல...🤷🤷🤷
கொஞ்ச நேரத்துல பார்த்தா ட்ரெயின் கிளம்பிடுச்சு... எங்க கோச் s13... ஆனா, அது லாஸ்ட்ல இருக்கு... எங்களால அங்க வரைக்கும் ரன்னிங்ல போய் ஏற முடியாதுன்னு, முன்னாடி இருந்த கோச்ல ஏறியாச்சு...
'ஹப்பா ட்ரெயின் வேகமெடுக்குறதுக்குள்ள ஒரு வழியா ஏறியாச்சு'ன்னு நிம்மதியா ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டா கடந்து போயிட்டு இருந்தோம். சரியா எங்களோட கோச்சுக்கு ஒரு கோச் முன்னாடி கோச்சுக்கு என்டர் ஆகுற சமயத்துல, அந்த கோச்ல இருந்து பின்னாடி இருந்த மத்த எல்லா கோச்சும் தடம்புரண்டுடுச்சு...🙄🙄🙄
'ஆத்தி சரியா எங்க கோச்ல ஏறியிருந்தா இந்நேரம்...'னு யோசிச்சுட்டு இருந்தப்போவே முழிப்பு வந்துடுச்சு...
அடேய் ப்ரைனு காலங்கார்த்தால வர கனவா இது..! ரொம்ப யோசிக்கிற நீ..!
இனி பெங்களூருக்கு ட்ரெயின்ல போகும்போதெல்லாம் இது தான நியாபகத்துக்கு வரும்...🤧😤🤧
Comments
Post a Comment
Please share your thoughts...