நாள் : Dec-29-2021
இந்த கனவு நடந்த காலம் எதுன்னு தெரியல... அநேகமா 200 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி போகணும் அதாவது நம்ம பூமியில இருக்க கண்டங்கள் எல்லாம் ஒண்ணா இருந்து (Pangea) பிரிய ஆரம்பிச்ச சமயம் (Beginning of Jurassic Era)
என்னடா இவ கனவு சொல்ல சொன்னா, வரலாறு சொல்லிட்டு இருக்கான்னு நீங்க யோசிக்கிறீங்கன்னு எனக்கும் புரியுது... ஆனா, என்ன பண்றது பார்கவி கனவுல இது தான வருது...
அதே மாதிரி, நீ எப்படி Pangea periodகு போனன்னு கேட்க கூடாது... ஏன்னா, இது தான் கனவாச்சே...😜😜😜 (என் ஃபேவரைட் டையலாக்... சொல்லி ரொம்ப நாளாச்சு...😇😇😇)
சரி வாங்க மறுபடியும் கனவுக்குள்ள போவோம்...
இப்போ இருக்க எல்லா கண்டங்களும் சேர்ந்த பெரிய நிலப்பரப்பை தான் Pangeaனு சொல்வாங்க... அந்த Pangea பிரிஞ்சு ரெண்டா இருந்த காலகட்டம் அது... (இந்த பிரிவு ஏற்படுறதுக்கு பல வருஷங்கள் ஆகுமாம்)
அப்பறம் இங்க இன்னொரு டவுட் வரலாம்... ஜூராசிக் பீரியட்ல மனுஷங்களே இல்லையே... நீ எப்படி இருந்துருப்பன்னு... அப்படி எந்த டவுட்ஸும் வரக்கூடாது... ஏன்னா, இது தான் கனவாச்சே...😜😜😜
நான் (கனவுல) இருந்த நிலப்பரப்புல இருந்தவங்களுக்கு இன்னொரு நிலப்பரப்பை பத்தி எதுவும் தெரியாது (vice-versa)
சுத்தி நீல நிற தண்ணிக்கு இடையில புள்ளியா தெறியுற நிலப்பரப்பை கண்ணால மட்டும் தான் பார்த்துருக்காங்க... மேலும், காலங்காலமா அவங்க சொல்லிட்டு வர கதையும், யாருக்கும் அந்த கடலைக் கடந்து இன்னொரு நிலப்பரப்பை அடையுற தைரியத்தை கொடுக்கல...
அப்படி என்ன கதைன்னா... அந்த கடல்ல, Kraken (இதை எப்படி தமிழ்ல சொல்றது... ராட்சத ஆக்டோபஸ்னு சொல்லுவோம்... இப்போ இது எதுக்கு என் கனவுல வருது... Pirates of Caribbean பார்த்த எஃபெக்ட்டா இருக்குமோ...🤔🤔🤔) இருக்குறதா காலங்காலமா சொல்லி வளர்த்துருக்காங்க... (அது வதந்தியா கூட இருக்கலாமோ...🤔🤔🤔)
அது மட்டுமில்லாம, ராட்சத சுறா மீனும் அதுக்கு துணையா இருக்குறதாவும் சொல்லியிருக்காங்க போல...
இந்த கதையெல்லாம் சொல்லி சொல்லி அங்க போக நினைக்குறவங்களையும் தடுத்து வைக்க, நம்ம சும்மா இருப்போமா...
பார்கவி இன் ரியல் வேணா இதுக்கெல்லாம் பயப்படலாம்... ஆனா, கனவுல தான் எதற்கும் துணிந்தவள் ஆச்சே...😜😜😜
எப்படியாவது அந்த நிலப்பரப்புக்கு போயே ஆகணும்னு வீறுகொண்டு கிளம்புன என்னை எங்க அம்மா எழுப்ப, இனி எங்க அந்த நிலப்பரப்புக்கு போக... எழுந்து பல்லு விலக்கத் தான் போனேன்...😶😶😶
என்னை மட்டும் எழுப்பாம இருந்துருந்தா இந்நேரம் அந்த Kraken மற்றும் Sharkகை கொன்ன வீர மங்கையா இருந்துருப்பேன்... ஹ்ம்ம் நமக்கு கடைசி வரைக்கும் லாப்டாப் தான்னு எழுதியிருந்தா என்ன பண்றது...😑😑😑
அப்பறம் மேல சொன்ன மாதிரி Kraken - Pirates of Caribbean படத்துலயும், Shark ரீசன்ட்டா ஏதோ ஒரு படத்துலயும் பார்த்தேன் தான்... ஆனா, படம் பார்த்து பல (வருஷங்கள்) நாட்கள் கழிச்சு எதுக்கு கனவுல வரணும்...🤔🤔🤔
அப்பறம் இந்த போஸ்ட் ஆரம்பிச்சப்போ Pangea 200 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடின்னு சொல்லியிருந்தேன்... நெட்ல பார்த்தப்போ ஃபியூச்சர்லயும் இது மாதிரி Pangea ஏற்படும்னு போட்டுருக்காங்க... இப்போ என்ன டவுட்னா, நான் போனது பாஸ்ட்டா இல்ல ஃபியூச்சரா...🤔🤔🤔
Comments
Post a Comment
Please share your thoughts...