4 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

4 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 4

 

ரிஷபைும் ரியானையும் தவிர மற்ற அனைவரும் அந்த ரகசிய அறைக்குள் வந்திருந்தனர். ஆனால், யாரும் மற்றவரிடம் பேசிக் கொள்ளவில்லை. அந்த அறைக்குள் மயான அமைதியே நிலவியது. ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு தாங்கள் கண்ட காட்சியை நினைத்து மனதிற்குள் பயந்து கொண்டு இருக்க, அவர்களின் பயத்தை வார்த்தை வடிவம் கொண்டு விவரிக்க கூட முடியவில்லை, யாரும் முனையவும் இல்லை.

 

எத்தனை நேரம் அப்படியே இருந்தனரோ, டோவினாவின் முனகல் சத்தத்தில் சிலர் சுயத்தை அடைந்தனர்.

 

டோவினாவை அந்த ட்ரோனிடமிருந்து காப்பாற்றிவிட்டாலும், துப்பாக்கி சூட்டினால், சிறிது காயமடைந்திருந்தாள். முதலில் அவளும் அதனை கவனிக்கவில்லை. அனைவரில் அவள் அல்லவா சாவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறாள்! முதலில் உணரப்படாத வலி, நேரம் ஆக ஆக அதிகரிக்க, அதன் பின்னர் தான் தன் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை கண்டாள்.

 

டோவினாவின் முனகலைக் கண்ட நவி தான் எடுத்து வைத்திருந்த முதலுதவி பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவளருகே வர, அதே சமயம் நோலனும் வந்திருந்தான். என்ன தான் அவளின் செய்கைகள் இருவருக்குமே பிடிக்கவில்லை என்றாலும், அவளின் வலியைக் கண்டவர்கள் அவளிற்கு உதவ முன் வந்தனர். ஆனால், அதை உணர வேண்டியவளோ உணர்ந்தாளா என்பது அவளிற்கு மட்டுமே வெளிச்சம்.

 

நோலன் அவளின் காயங்களை ஆராய்ந்து, “சின்ன காயம் தான்.” என்று சொல்லியபடி காயங்களில் களிம்பைத் தடவி அதன்மேல் பாண்ட்எயிட் ஒட்டினான். அனைத்து காயங்களுக்கும் சிகிச்சை அளித்த நோலன் நவியிடம் ஒரு தலையசைப்புடன் மீண்டும் தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.

 

டோவினா அவன் செய்த உதவிக்கு நன்றி கூறாமல் அப்போதும் வலித்த இடங்களை லேசாக தடவியபடி அமர்ந்திருக்க, நோலனும் அவளிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை.

 

நவி தான் டோவினாவை தனியே விட விருப்பம் இல்லாமல், அவள் அருகே அமர்ந்து கொண்டாள். டோவினா இம்முறை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நவி கொடுத்த தண்ணீரை வாங்கிப் பருகியவள், என்ன நினைத்தாலோ, “ரிஷப் உண்மைலேயே கிரேட்ல!” என்று கூற, முதலில் தன்னிடமா பேசினாள் என்று ஆச்சரியப்பட்ட நவி, தலையை மட்டும் அசைத்தாள்.

 

நான் கூட இன்னைக்கு அந்த ட்ரோன் கிட்ட மாட்டி இறந்துடுவேன்னு நினைச்சேன். ஆனா, ரிஷப் என்னைக் காப்பாத்திட்டாரு. ப்பா, சேன்ஸே இல்ல! என்ன டைமிங்?” என்று பேசிக் கொண்டே இருக்க, ‘எதுக்கு இவ இவ்ளோ எக்ஸ்ஸாஜெரேட் பண்ணி சொல்றா?என்றே தோன்றியது நவிக்கு.

 

எனக்கு என்னமோ அவரு போலீஸா இருக்கும்னு தோணுது. அவரோட பிஸிக் எல்லாம் பார்க்குறப்போ அப்படி தான் தெரியுது.” என்று கண்களில் அப்பட்டமான வழிசலுடன் அவள் கூற, நவியோ உடனே, “அவரு டாக்டர்!” என்று கூறினாள்.

 

அவ்வாறு கூறிய பின்னர் தான், தான் ஏன் அவளிற்கு பதிலளித்தோம் என்று யோசித்தாள்.

 

ஹ், உனக்கு எப்படி தெரியும்?” என்று சந்தேகத்துடன் டோவினா வினவ, “அவரு தான் சொன்னாரு.” என்றதோடு அமைதியானாள் நவி.

 

சிறிது நேரம், டோவினாவின் பார்வை தன்னை துளைத்ததை உணர்ந்தே இருந்தாள் நவி. ஆனால், அவளிடம் எதுவும் பேசவில்லை. எங்கு ஏதாவது பேசினால், அவள் மீண்டும் ரிஷப் புராணம் துவங்கிவிடுவாளோ என்று பயம் தான்!

 

ஆனால் மனதிற்குள், ‘அவ பேசுனா, நான் ஏன் டென்ஷன் ஆகுறேன்?என்ற கேள்விக்கான பதிலைத் தேடியபடி தான் இருந்தாள்.

 

*****

 

ஜன்னலுக்கு வெளியே வெளிச்சம் மங்கி, இருளின் ஆட்சி துவங்க ஆரம்பிக்க, அந்த ட்ரோன்னை இடம் மாற்றி வைக்க சென்ற இருவரையும் காணவில்லையே என்று நினைத்து பயந்து தான் போயினர் மற்றவர்கள். நவியோ, ‘இன்னும் ஏன் வரல? வழியில ஏதாவது ஆபத்துல மாட்டியிருப்பாங்களோ?என்று தன் எண்ணங்களில் அவனையே நிரப்பிக் கொண்டிருந்தாள்.  

 

ரிஷப் கூறிய, ‘சப்போஸ் நாங்க வரலைன்னா, அந்த டேப் யூஸ் பண்ணி நைட்டே எல்லாரும் இங்க இருந்து தப்பிச்சுடுங்க.என்ற வார்த்தைகள் வேறு அவ்வப்போது நினைவில் தோன்றி அவளை பயமுறுத்தியது.

 

சற்று நேரத்திலேயே, ஜான் எழுந்து, “எல்லாரும் கிளம்புங்க.” என்றதும் டேவிட்டை தவிர மற்ற அனைவரும் தங்கள் கண்டனத்தை பார்வையிலேயே தெரிவித்தனர், டோவினா உட்பட!

 

என்ன எல்லாரும் என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்க்குறீங்க? உங்க ஹீரோ தான் அவரு வரலைன்னா நம்மள போக சொன்னாருல.” என்றுஹீரோவை அழுத்திக் கூறினான்.

 

நவி எதுவும் பேசாமல் அமர்ந்தே இருக்க, இம்முறை ஜாஷா பேசினாள். “இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போமே.” என்று மெல்லிய குரலில் ஜாஷா கூற, “இவ்ளோ நேரம் வராதவங்க தான் இப்போ வர போறாங்களா?” என்று டேவிட் வினவினான்.

 

இவ்ளோ நேரம் வெயிட் பண்ண நாம, இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்றதுல என்ன ஆகிடப்போகுது? லுக், நம்ம எல்லாரையும் விட ரிஷபுக்கு தான் இந்த இடம் பத்தி ஓரளவு தெரியும். சோ ரிஷபுக்காக வெயிட் பண்ணலாம்.” என்று நோலன் கூறினான்.

 

இவர்களின் பேச்சில் கடுப்பான ஜான் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து, “அப்போ யாரும் எங்க கூட வரல ரைட். ஓகே நீங்க எல்லாம் அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டே இருங்க. நாங்க கிளம்புறோம்.” என்று அந்த ஆயுதங்கள் அடங்கிய பையை தூங்கிக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தனர்.

 

அப்போதும் யாரும் அந்த இடத்தை விட்டு அகலாததால், “நீங்க எல்லாரும் இங்கயே சாகத்தான் போறீங்க.” என்று திட்டிவிட்டு கதவில் கைவைக்க, “ஒரு நிமிஷம்…” என்று நவி கூறினாள்.

 

எதையோ தீவிரமாக யோசித்ததைப் போன்று இருந்தது அவளின் முகம். ஒரு பெருமூச்சுடன், “நாம கிளம்பலாம்.” என்று மற்றவர்களைப் பார்த்து கூறினாள். அவளின் கூற்றில் அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.

 

*****

 

அதே நீள தாழ்வாரம்அதே நீல நிற விளக்குகள் ஆங்காங்கு பளிச்சென்று மின்னி இருட்டை வெளிச்சமாக்க முயன்று கொண்டிருந்தன. நிஷப்தமாக இருந்த இடத்தில் இவர்களின் காலடி சத்தமே, அந்த இடத்தில் மனித நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.

 

முதலில் ஆயுதங்களை ஏந்தியபடி ஜானும் டேவிட்டும் செல்ல, அவர்களைக் பின்பற்றி மற்றவர்கள் சென்றனர். யாரும் ஒருவருக்கொருவர் வாய் திறந்து பேசிக் கொள்ளவில்லை.

 

நவியும் அவர்களுள் ஒருத்தியாய் சென்று கொண்டிருந்தாள். அவளின் மனதிலோ பெரும் குழப்பம். அவள் செய்து கொண்டிருப்பது சரியா தவறா என்று கூட அவளிற்கு தெரியவில்லை. தன் கணிப்பு பொய்யாகிப் போனால்! அதை நினைக்க அவள் விரும்பவில்லை. அவளின் மனம் சற்று நேரத்திற்கு முன் நடந்த காட்சிகளுக்கு மீண்டும் அவளை இழுத்துக் சென்றது.

 

ஒரு நிமிஷம்….” என்று நவி கூற, ஜானோ அலட்சியத்துடனே திரும்பினான். ஆனால், அவள் மற்றவர்களிடம் கிளம்ப சொல்வாள் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தன்னுடன் வருகிறார்களா என்று அனைவரின் முகத்தை பார்த்தபோது கூட, நவியின் முகத்தை அவன் காணவில்லையே! ரிஷபை விட்டு செல்ல அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று உறுதியாக நம்பியவனாகிற்றே!

 

அவனின் நம்பிக்கையை உடைத்துவிட்டு அனைவரையும் கிளம்ப சொல்ல, மற்றவர்களை விட ஜான் மற்றும் டேவிட்டிற்கு தான் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி.

 

நந்து கூட நவியிடம் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று கூற , நவியோ கையிலிருந்த டேப்பை ஒருமுறை பார்த்துவிட்டு, “இனி இங்கயே காத்திருந்து பிரயோஜனம் இல்ல நந்து. லெட்ஸ் கோ.” என்றாள்.

 

அவளின் எண்ணமோ அந்த டேப்பிலிருந்த மேப்பில், மின்னி மறைந்து கொண்டிருந்த இடத்திலேயே இருந்தது. அது இவர்கள் இருக்கும் கட்டிடத்தின் வெளிப்பகுதி ஆகும். இவர்களின் அறையிலிருந்து அவ்விடத்திற்கு செல்வதற்கான வழியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

 

ரிஷபிடம்டேக் கேர்என்று அவள் கூறியபோது அவனிடமிருந்த இரு டேப்களில் ஒன்றை நவியிடம் கொடுத்திருந்தான். அப்போது இருந்த சூழலில் அதைப் பார்க்க தோன்றாததால், கைகளில் வைத்துக் கொண்டாள். ஆனால், எதேச்சையாக அவளின் கைப்பட்டு அதை உயிர்ப்பித்த போது தான் வெளியே செல்வதற்கான மார்க்கமும், குறிப்பிட்டு அந்த இடம் மின்னி மறைவதையும் கண்டாள்.

 

இது மூலமா ஏதாவது சொல்ல வரானோ?என்ற எண்ணியதாலேயே அனைவரையும் கிளம்புமாறு கூறினாள்.

 

அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவளை சுயத்திற்கு அழைத்து வந்தது அந்தசைரன்சத்தம். நீல நிற ஒளியில் அமைதியாக இருந்த இடம், சற்று நேரத்திலேயே அந்த இரைச்சலிலும், மின்னி மறைந்து கொண்டிருந்த சிவப்பு நிற வெளிச்சத்திலும் அல்லோலகல்லோலப்பட்டது.

 

இனி தாமதித்தால் ஆபத்து என்று அங்கிருந்த அனைவரும் உணர்ந்ததால், பூமிக்கு வலிக்குமோ என்ற வண்ணம் அடிமேல் அடி வைத்து நடந்தவர்கள் இப்போது தலைதெறிக்க ஓடினர்.

 

ஜாஷாவினால் மற்றவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை என்றாலும், தான் வயிற்றில் சுமந்திருந்த சிசுவிற்காக தன்னால் இயன்ற அளவிற்கு வேகமாக சென்றாள். அவளிற்கு துணையாக நவியும் சற்று மெதுவாக சென்றாள்.

 

என்ன தான் ஆபத்தை உணர்ந்து ஓடினாலும், சரியான பாதையிலேயே சென்றது அவர்களின் அதிர்ஷ்டம் போலும்!

 

முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே சென்ற பாதையின் முடிவை ஒருவழியாக கண்டுகொண்டனர். அதன் முடிவில் பெரிய இரும்புக் கதவு இருந்தது. அதை நோக்கி ஓடும்போதே ஜானும் டேவிட்டும் அக்கதவை நோக்கி சுட, அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த நவி, “ஹே இப்படி சுட்டா அந்த சத்தத்துல அந்த ட்ரோன்ஸ் இங்க வரும்.” என்று கூறுவதை அவர்கள் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.

 

நவியோ இவர்களிடம் பேசுவது தேவையற்ற வேலை என்பதை புரிந்து கொண்டு, பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

சற்று நேரத்திலேயே அந்த இரைச்சல் நின்று போக, சிவப்பு நிற வெளிச்சமும் நீல நிறத்திற்கு மாறியது. அதைக் கண்டதும் தான் அனைவரும் சிறிது ஆசுவாசப்பட்டனர்.

 

ஜானும் டேவிட்டும் மாறி மாறி சுட்டாலும் அந்த இரும்பு கதவில் சிறிது துளைகள் தவிர வேறு சேதாரம் இல்லை. மேலும் தோட்டாக்களை இழக்க விரும்பாமல், தங்களிடம் இருந்த குண்டுகளை பயன்படுத்தலாம் என்று நினைத்தனர்.

 

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் மெலிதாக கேட்க டோவினா தான் அதை முதலில் கேட்டுவிட்டு மற்றவர்களிடம் கூறினாள். சற்று அடங்கியிருந்த பரபரப்பு மீண்டும் அவர்களை தொற்றிக்கொண்டது.

 

இப்போது என்ன செய்வதென்றே அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. ஜானும் டேவிட்டும் தங்கள் கையிலிருந்த குண்டுகளையும் நவியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

வருவது ட்ரோன்னாக இருந்தால், இதற்கு முன் கேட்ட துப்பாக்கி சத்தத்தினால் தான் இந்த இடத்தை தேடி வந்திருக்கும் என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தே இருந்தனர். ஜானும் டேவிட்டும் கூட அதற்காக தான் இப்போது குண்டுகளை வீசவா வேண்டாமா என்று குழம்பியிருந்தனர்.

 

மேலும், இந்த குண்டுகளால் அந்த கதவு சேதமடையாமல் போனால், அந்த ட்ரோன்னிடம் மாட்டிக்கொண்டு விடுவோம் என்றும் சிந்தித்தனர்.

 

அனைவரும் ஸ்தம்பித்து நிற்கையில், அந்த சத்தம் மட்டும் இவர்களை நெருங்கிக் கொண்டே இருந்தது. ‘இனி அவ்வளவு தான். அந்த ட்ரோன்னிடம் அகப்பட்டு எல்லாரும் சாகிப்போகிறோம்என்று அவர்கள் எண்ணிய வேளையில், அந்த காலடி சத்தம் கேட்க, நவியோ விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

 

ரிஷப்என்று முணுமுணுத்துக் கொண்டே முன்னே செல்ல, அந்த பக்கத்திலிருந்து நவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவாறு வந்தான் ரிஷப். அவனுடன் ரியானும் வந்தான்.

 

இருவரின் வரவில் ஜானையும் டேவிட்டையும் தவிர மற்றவர்கள் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால் வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சிக்கான தடம் சிறிதும் இல்லை என்பதை நவி கண்டுகொண்டாள்.

 

அருகில் வந்த ரிஷப், “இன்னும் நீங்க இந்த பில்டிங் விட்டு வெளியே போகலையா?” என்றவாறே நவியைப் பார்த்தான்.

 

அவளோ மனதிற்குள், ‘வந்ததும் வராததுமா கேள்வியைக் கேக்க ஆரம்பிச்சுட்டான்!என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

 

நீங்க போன வேலை என்னாச்சு? ஏன் இவ்ளோ லேட்? வர வழியில அதுங்க கிட்ட மாட்டிக்கிட்டீங்களா?” என்று சரமாரியாக கேள்விகள் வந்தது நவியிடமிருந்து அல்ல, டோவினாவிடமிருந்து!

 

அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்க்க, அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரிஷபையே விழிகள் வெளியே தெறித்து விடுமளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

நந்து நவியிடம், “இப்போ எதுக்கு இவ இப்படி பேசுறா? அந்த அட்டாக்ல தலையில அடிப்பட்டிருக்குமோ!” என்று முணுமுணுக்க, அதையே நவியும் நினைத்தாலும், நந்துவிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாற்றவர்களை விட நவிக்கு தான் மனதில் ஏதோ உறுத்தல். இது தான் மீயுடைமை உணர்வின் ஆரம்பமோ!

 

ரிஷபுமே டோவினாவை அதிசயம் போல பார்த்துவிட்டு, “அப்பறம் சொல்றேன்.” என்ற முணுமுணுப்புடன் முன்னே சென்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து தன் விழிகளை பயணிக்க செய்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நவியும் ரிஷபை தொடர்ந்தாள்.

 

அங்கு சிதறியிருந்த தோட்டாக்களைக் கண்ட ரிஷப் ஜானையும் டேவிட்டையும் பார்த்து, “திரும்பவும் ஷூட் பண்ணீங்களா?” என்று வினவ, அவர்களோ அலட்சியத்துடனே நின்றனர்.

 

தலையை இருபக்கமும் அசைத்துவிட்டு, அவர்கள் ஆயுதங்கள் அடங்கிய பையிலிருந்து ஒரு துப்பாக்கி போன்றே ஒரு இயந்திரத்தை எடுத்தான். அதைப் பார்க்க நவீன ரக வெல்டிங் இயந்திரத்தைப் போன்று இருந்தது.

 

அதனை கதவில் வைத்து அழுத்த, அந்த இரும்பு கொஞ்சம் கொஞ்சமாக உருகத் துவங்கியது. ஒரு ஆள் வெளியே செல்வதற்கு ஏற்றவாறு கதவில் துளையை ஏற்படுத்தினான் ரிஷப்.

 

பின்னர் திரும்பி ஜானையும் டேவிட்டையும் கண்டவன், “கைல துப்பாக்கி இருக்குன்றது்காக சுட்டுட்டே இருக்கணும்னு அவசியம் இல்ல. நம்ம கிட்ட என்னென்ன ஆயுதங்கள் இருக்கு, அதை எப்படியெல்லாம் பயன்படுத்தணும்னு முதல்ல தெரிஞ்சுக்கனும்.” என்றான்.

 

பிறகு மற்றவர்களைப் பார்த்து, “சீக்கிரம் வெளிய போங்க. அந்த ட்ரோன்ஸ் வரதுக்குள்ள இந்த பில்டிங் விட்டு வெளிய போகணும்.” என்றான்.

 

சில பல முன் அனுபவங்களால், ுதலில் டோவினாவை போக சொல்ல அவளோ அதை மறுத்துவிட்டு, “முதல்ல நீங்க போங்க.” என்று ஜாஷாவிடம் கூறினாள்.

 

அவளின் பேச்சு ஜாஷாவிடம் இருந்தாலும், பார்வையோ ரிஷபிடம் இருந்தது. ரிஷப் அவளைக் கண்டுகொள்ளாவிட்டாலும் மற்றவர்களின் பார்வை அவளின் மீதே இருந்தது.

 

நோலனும் ரியானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, நந்து மீண்டும் நவியிடம், “ஹ்ம்ம் இது சரியில்லையே!” என்று கூறினான். ஏற்கனவே டோவினாவின் பார்வை நவியை எரிச்சல்படுத்தியிருக்க, அதை நந்துலைவ் கமென்டரிபோல சொல்லிக் கொண்டிருந்தது மேலும் எரிச்சலை உண்டாக்கியது.

 

ப்ச், கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.” என்று அடிக்குரலில் நந்துவிடம் கூறியவள், ஜாஷா வெளியே செல்வதற்கு உதவ சென்றாள்.

 

இவ ஏன் கத்திட்டு போறா?என்று புரியாமல் நின்று கொண்டிருந்தான் நந்து.

 

ஒருவழியாக அனைவரும் அந்த கதவு வழியாக வெளியே வர, எதிலிருந்தோ தப்பித்த உணர்வு அனைவரிடத்திலும் வந்து போனது. காரிருளிலும், ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த விளக்குகளால் ஒளிர்ந்தது அந்த இடம்.

 

ஒளியின் உபயத்தால் அந்த இடத்தை கண்களாலேயே வலம் வந்தனர் அனைவரும். பல ஏக்கர் இடத்தின் நடுவே சில ஏக்கரில் உயரமாய் எழுப்பப்பட்டிருந்தது அந்த கட்டிடம். அந்த கட்டிடத்தை சுற்றி வெற்று இடமே காட்சியளிக்க, அதை சுற்றி அந்த கட்டிடத்தின் உயரத்திற்கு வேலி போல அமைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல ஜான் அந்த வேலியை தொடுவதற்காக தன் கரங்களை நீட்ட, அவன் தொடப்போகும் சமயம் அவன் கைகளைப் பற்றிய ரிஷப், “அதுல ஹை வோல்டேஜ் கரண்ட் பாஸ் ஆகிட்டு இருக்கு…” என்று எச்சரித்தான்.

 

அவன் கூறியதைக் கேட்ட மற்றவர்களும் மிரட்சியுடன் அந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்த நவி, “எப்படி இந்த வேலியைக் கடக்கப் போறோம்?” என்று வினவினாள்.

 

இந்த வேலிக்கான கரண்ட் சப்ளையை தற்காலிகமாக கட் பண்ணி இந்த வேலியை தாண்டலாம். ஆனா, இப்போ இருக்க சூழ்நிலைல அது ரொம்ப ரிஸ்க். நானும் ரியானும் வர வழியில அந்த கரண்ட் சப்ளை இருக்க ரூமை பார்க்க போனோம். ஆனா, அங்க ட்ரோன்ஸோட நடமாட்டம் அதிகமா இருக்கு. நாங்களும் அந்த ட்ரோன்ஸ் வேற இடத்துக்கு போற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு இருந்தோம். ஆனா, அதுங்க அந்த இடத்தையே பாதுகாக்குற மாதிரி சுத்திட்டு இருந்துச்சுங்க. இனிமேலும் லேட் பண்ண வேணாம்னு தான் வந்துட்டோம்.” என்று ரிஷப் சொல்லி முடித்ததும் அனைவரும் ஒருவித ஏமாற்ற மனநிலையில் இருந்தனர்.

 

அவர்கள் ஏமாற்றத்தைக் கண்ட ரிஷப், “இன்னொரு வழி இருக்கு.” என்று ரிஷப் கூற அனைவரும் ஆர்வமாக அவனைக் கவனித்தனர்.

 

இந்த வேலி, ஒரு இடத்துல மட்டும் கொஞ்சம் குறைவான ஹயிட்ல இருக்கும். அங்க போனா நாம தப்பிக்க வழி இருக்கு.” என்று ரிஷப் கூற அனைவரும் அந்த இடத்திற்கு நேரம் தாழ்த்தாமல் கிளம்பினர்.

 

செல்லும் வழியில், நந்து அந்த வேலியில் அமர்ந்திருந்த பறவையைக் கண்டான். அதற்கு எதுவும் ஆகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்துடன் அதைப் பற்றி ரிஷபிடம் வினவினான்.

 

நாம நிலத்துல நின்னுட்டு அந்த வேலியை தொட்டா தான் நமக்கு ஷாக் அடிக்கும். அந்த பறவைக்கும் நிலத்துக்கு தொடர்பே இல்ல. அதான் அதுக்கு ஷாக் அடிக்கல. இது எலெக்ட்ரிக் ஃபென்ஸ்ன்னு கால்நடை வச்சுருக்குறவங்க பயன்படுத்துற டெக்னிக். தங்களோட கால்நடைகள் வெளிய போயிடக்கூடாது, அதே சமயம் வெளிய இருந்து மத்த விலங்குகள் தங்களோட கால்நடைகளை தாக்கிடக்கூடாதுன்னு இந்த முறையை பயன்படுத்தியிருக்காங்க. ஒரே டிஃப்ரென்ஸ் என்னன்னா, அவங்க யூஸ் பண்ணது ரொம்பவே குறைவான வோல்டேஜ்ஆனா, இங்க இருக்குறது ஹெவி வோல்டேஜ். ஒன்ஸ் தொட்டா, உடனே கன்ஃபார்ம் டெத் தான்.” என்று விளக்கினான் ரிஷப்.

 

அதை அனைவருமே ஆச்சரியத்துடன் கேட்டனர். அப்போது நோலன் ரிஷபிடம், “இதையெல்லாம் எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று வினவினான்.

 

எல்லாம் அனுபவம் தான். போன முறை, அந்த பில்டிங் விட்டு வெளிய வந்ததும் ஒரு ஆர்வத்துல ஒருத்தர் அந்த வேலில கைவைக்க, உடனே ஷாக்கடிச்சு இறந்துட்டாரு. அதுக்கப்பறம் சில நாட்கள் அந்த பில்டிங்கை சுத்துனப்போ தான், இதோட பவர் சப்ளை நிறுத்துறதுக்கான இடத்தை கண்டுபிடிச்சோம். அதை நிறுத்திட்டு வெளிய போனோம்.” என்று கூறி முடித்தான்.

 

அப்போது நவிக்கு மனதில் தோன்றியது எல்லாம், ‘ஒரு வேளை ரிஷப் வரதுக்கு முன்னாடி அந்த கதவுக்கு வெளிய வந்துருந்தா, இந்த ஜானும் டேவிட்டும் கண்டிப்பா அந்த வேலியைத் தொட்டிருப்பாங்க. உஃப், நல்ல வேளை!என்பது தான்.

 

பின்னரும் ஏதோ தோன்ற, தன் பைக்குள் வைத்திருந்த டேப்பை எடுத்தவள், அதில் மின்னிக் கொண்டிருந்த இடத்தை அழுத்த, அதில் அந்த வேலியில் எத்தனை வோல்ட் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பது முதல் அந்த இடத்தைப் பற்றி அனைத்தும் தெளிவாக தெரிந்தது.

 

ஷிட், இதைப் பார்க்கணும்னு தான் ஹைலைட் பண்ணி கொுத்தானா?என்று தன்னையே நொந்து கொண்டாள்.

 

அதற்குள் ரிஷப் கூறிய இடம் வந்திருந்தது. உயரம் குறைவு என்றதும் மற்றவர்கள் தாண்டி சென்று விடும் உயரம் என்று நினைத்திருக்க, அதுவோ மற்ற இடத்திலிருந்து  சிறிதளவே வேறுபட்டிருந்தது.

 

இப்போது என்ன செய்வது என்று பார்த்திருக்க, ரிஷப் அருகிலிருந்த மரத்தை கவனித்தான். அதே போல அந்த வேலிக்கு வெளியே ஒரு மரம் இருந்ததை பார்த்தான். வேகவேகமாக திட்டத்தை யோசித்தவன், சில நொடிகள் அதன் சாதக பாதகங்களை கணக்கிட்டான்.

 

பின்னர் தன் குழுவிடம் திரும்பி, “இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் கயிறு கட்டிடலாம். இங்கயிருந்து ஒவ்வொருத்தரா இந்த கயித்துல தொங்கிட்டே வெளிய போயிடலாம். அண்ட் நம்ம உடல் தரையை தொடாததுனால அந்த வேலி மேல கால் பட்டாலும் ஷாக்கடிக்காது. ஆனா, ரொம்ப கவனமா அந்த வேலியை கடக்க வேண்டியதிருக்கும்.” என்று கூறினான்.

 

வேறு வழியில்லாததால் அனைவரும் சம்மதிக்க, ரிஷபோ ஜாஷாவை பார்த்தான். ஜாஷாவும்  ஒரு பெருமூச்சுடன், “என்னால முடியும்!” என்று கூற, அவர்களின் திட்டத்தை செயல்படுத்த துவங்கினான்.

 

அவர்களிடமிருந்த கயிறுகளை எடுத்தவன், அவற்றை ஒன்றாக இணைத்து, அதன் ஒருமுனையில் கூர்மையான கொக்கியை இணைத்தான். ஒருமுறை அனைத்து இணைப்புகளையும் சரி பார்த்தவன், அனைவரில் வலியவனான ஜானிடம் அதைத் தூக்கி அந்த மரத்தின் மீது எரியும் பொறுப்பை ஒப்படைத்தான். ஜான் அந்த கயிறையும் அந்த மரத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, கயிறை எரிய ஆயத்தமாக, அனைவரும் அவர்களின் திட்டம் வெற்றியடைய வேண்டிக் கொண்டனர்.

 

அனைவரின் வேண்டுதலின் படி, ஜான் அந்த கயிறை வெற்றிகரமாக அந்த மரத்தில் சொருகியிருந்தான். ரிஷப் அதன் வலிமையை சோதித்துவிட்டு, “யாரு முதல்ல போகப் போறீங்க?” என்று வினவ, அனைவரும் சிறிது தயங்கினர்.

 

அவர்களின் தயக்கத்திலிருந்த பயத்தை அறிந்தவனாக ரிஷபே முதலில் செல்ல ஆயத்தமானான். அப்போது அவனைத் தடுத்த டேவிட், முதலில் தான் செல்வதாக கூறினான். ரிஷபும் அதற்கு சம்மதிக்க, தன் பையை முதுகில் போட்டுக்கொண்டு, அந்த கயிற்றில் தொங்கிக்கொண்டே மறுபக்கம் செல்ல ஆரம்பித்தான்.

 

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், அவன் அந்த வேலியைத் தாண்டும்போது  அவனுடன் சேர்ந்து அவனின் பையின் பாரம் தாங்காமல் அந்த கயிறு லேசாக கீழே இறங்க, அனைவரும் பதறிவிட்டனர். ஆனாலும், டேவிட் சமாளித்துக் கொண்டவனாக, மெதுவாக அங்கிருந்து விலகி சென்று கீழே விழுந்தான். அவன் மறுபக்கம் சென்று சேர்ந்ததும் தான் அனைவரும் இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர்.

 

இப்போது ரிஷப் யோசனையாக, “யாரும் பையை தூக்கிட்டு போகாதீங்க. பையை இங்க இருந்து கூட மறுபக்கம் தூக்கி போட்டுடலாம்.” என்று கூறிவிட்டு, மறுபக்கம் சென்ற டேவிட்டிடம், மரத்திலிருந்த அந்த கயிறை இறுக்கிக் கட்டுமாறு கூறினான்.

 

டேவிட்டும் அப்படியே செய்ய, இம்முறை ரியான் தான் செல்வதாக முன்வந்தான். ஆனால், அவனை தள்ளிவிட்டு முதலில் தான் செல்வதாக வம்பு செய்தான் ஜான். திரும்பவும் சண்டை வேண்டாம் என்று எண்ணிய ரிஷப் ஜானையே செல்லுமாறு கூறினான்.

 

ஆனால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த நவிக்கு தான் மனதில் ஏதோ உறுத்தியது. அவள் தான் சற்று முன்னர், ஜான் மற்றும் டேவிட் செய்த கண்ஜாடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

 

அவள் தடுப்பதற்குள், ஜான் தன்னிடமிருந்த பையை மறுபுறம் டேவிட்டிடம் தூக்கி வீசிவிட்டு கயிற்றில் தொங்கிக்கொண்டே செல்ல ஆரம்பித்தான். இம்முறை எந்தவித தடங்கலும் இல்லாமல் அவன் மறுபக்கம் சென்றுவிட, மற்றவர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

ஆனால்  அவர்களின் நிம்மதியெல்லாம் குலைக்கும் வண்ணம், மறுபுறமிருந்த இருவரும் கோணல் சிரிப்புடன் அந்த கயிறை தங்களிடம் இருந்த கத்தியின் மூலம் அறுக்கத் துவங்க, மற்ற அனைவரும் அவர்களையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)