5 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

5 - புவியே காட்சிப்பிழையாய்

 


காட்சிப்பிழை 5

 

நவிக்கு மனதிற்குள் ஏதோ உறுத்த, அதை ரிஷபிடம் சொல்ல வருவதற்குள், ஜான் கயிற்றில் தொங்கிக்கொண்டே மறுபக்கம் சென்றுவிட்டான். அவன் மறுபக்கம் சென்றதும் மற்ற அனைவரும் ஆசுவாசப்பட்டனர். ஆனால், ஜானும் டேவிட்டும் அந்த கயிறை அறுப்பதைக் கண்டவர்கள் அதிர்ந்து தான் போயினர்.

 

வேலிக்கு அருகில் சென்ற ரிஷப், ஜான் மற்றும் டேவிட்டிடம், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று வினவ, “ஹ்ம்ம் பார்த்தா தெரியல? கட் பண்ணிட்டு இருக்கோம்.” என்று எகத்தாளமாகவே பதிலளித்தனர்.

 

அவர்களின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாத நவியோ, “பைத்தியமா நீங்க? இப்போ எதுக்கு கயிறை கட் பண்றீங்க? நாங்க எல்லாரும் எப்படி அந்த பக்கம் வரது?” என்று கோபமாக கேட்டாள்.

 

நீங்க எல்லாரும் எதுக்கு இந்த பக்கம் வரணும்?’ என்று கோணல் சிரிப்புடன் டேவிட் வினவினான்.

 

அனைவரும் அவனை அடித்துவிடும் மனநிலைக்கே வந்தனர். நவி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதவளாக இருபுறத்தையும் பிரிக்கும் வேலியை மறந்தவளாக அருகில் செல்ல, இறுதி நொடியில் ரிஷப் தான் அவளை அவன்புறம் இழுத்து காப்பாற்றினான்.

 

அப்போது தான் அவள் செய்ய நினைத்த செயலை நினைத்து ஒரு நொடி திகைத்தவள், ரிஷபை ஏறிட்டு, “தேங்க்ஸ்!” என்றாள். அவனோ நவியை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

 

இவன் எதுக்கு முறைக்குறான்?என்று யோசித்தவளை, அவளின் மனமோ, ‘இப்போ அது முக்கியமில்லை.’ என்று திசை திருப்பியது.

 

லுக், இந்த செட்டிங் எல்லாம் பார்த்தா, இது ஏதோ கேம் ஷோ மாதிரி இருக்கு. யார் முதல்ல இங்க இருந்து வெளிய போறாங்களோ அவங்க தான் வின்னர்னு இருந்தா, இப்போ உங்களை எல்லாம் கூட்டிட்டு போறது எங்களுக்கு நிச்சயமா பலனளிக்காது. சோ சாரி.” என்று கூறிவிட்டு அந்த கயிறை அறுத்துவிட்டனர்.

 

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? நீங்களா ஏதோ நினைச்சுட்டு இப்படி பண்ணியிருக்கீங்களே, வெளிய இன்னும் என்னென்ன ஆபத்துகள் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? ரிஷப் தான் அவரு இங்க சில இடங்கள் ஏற்கனவே பார்த்துருக்கேன்னு சொல்றாரே.” என்று கூறிக் கொண்டிருந்த ரியானை தடுத்த ஜான், “போதும் போதும் உங்க ரிஷப் புராணம்.  இவ்ளோ சொல்றீங்களே, அவன் நேத்தே நம்மகிட்ட என்னென்ன ஆபத்துகளை நாம சந்திக்க வேண்டியதிருக்கும்னு சொல்லியிருக்கலாமே. அந்த ஆயுதங்கள் இருந்த ரூமை திறக்க அக்சஸ் கார்ட், அங்க இருந்த டேப் இதை பத்தி ஓரளவாவது சொல்லியிருக்கலாம்ல. சரி அதையெல்லாம் விடுங்க, இந்த ஃபென்ஸ் தொட்டா ஷாக் அடிக்கும்னு ஏன் முன்னாடியே சொல்லல? சப்போஸ் இவன் வராம நாம இதைத் தொட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்!” என்று கூற, அங்கிருந்தவர்களில் யாரும் எதுவும் பேசவில்லை.

 

என்ன அமைதியாகிட்டீங்க? இப்போ நீங்க இப்படி நிக்குறதுக்கு கூட அவனோட அஜாக்கிரதை தான் காரணம். டேவிட் போனதுக்கு அப்பறம் நான் போறேன்னு சொன்னப்போவே, இல்லன்னு தடுத்துருந்தா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுருக்குமா? இனிமேலாவது, ஒருத்தனை நம்புறதுக்கு முன்னாடி அவன் கிட்ட அதுக்கான திறமை இருக்கான்னு பார்த்துட்டு நம்புங்க.” என்று அறிவுரை வேறு வழங்கினான் ஜான்.

 

டேவிட்டிடம், “நம்மகிட்ட தான் பெரிய அறிவாளி மாதிரி பேசுவான். இதைக்கூட கண்டுபிடிக்க தெரியாத முட்டாள்!” என்று முணுமுணுத்தான் ஜான். அது அனைவரின் காதுகளிலும் ஸ்பஷ்டமாக விழுந்தது. ரிஷபிற்கு கேட்க வேண்டும் என்றல்லவா அவனை வைத்துக் கொண்டே கூறினான்!

 

நம்ம சண்டை போடாம ஒற்றுமையா இருந்தா, எல்லாருமே தப்பிக்கலாம்னு நினைச்சேன். அது முட்டாள்தனம் தான். உங்களையெல்லாம் இவ்ளோ தூரம் சேஃப்பா கூட்டிட்டு வந்தேன்ல, இது கூட முட்டாள்தனம் தான்! சுயநலமா யோசிச்சு நான் மட்டும் தப்பிக்காம, எல்லாரும் தப்பிக்கணும்னு நினைச்சேனே நான் முட்டாளே தான். இவ்ளோ தூரம் யோசிச்ச இந்த முட்டாளுக்கு, இங்க இருந்து எப்படி இவங்களை எல்லாம் தப்பிக்க வைக்கணும்னு தெரியும். நீங்க சேஃப்பா தப்பிச்சு வெளிய போய், இந்த சோ-கால்ட் கேம் ஷோவோட வின்னரா ஆக வாழ்த்துக்கள்!” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான் ரிஷப்.

 

அவர்களோ அதைக் கண்டுகொள்ளாமல், “போன்னா எப்படி போறது? உன்கிட்ட இருக்க டேப், அப்பறம் நீங்க எடுத்துட்டு வந்த சாப்பாட்டுல எங்க பங்கை கொடுத்தீங்கன்னா நாங்க போயிட்டே இருப்போம்.” என்று டேவிட் கூற, அதுவரை அமைதியாக இருந்த நோலனிற்கே கோபம் வந்தது.

 

எங்களை ஏமாத்துன உங்களுக்கு நாங்க எதுக்கு கொடுக்கணும்?” என்று அவன் எதிர்த்து பேச, சற்றும் யோசியாமல் அவன் கால்களுக்கு அருகேயுள்ள நிலத்தில் சுட்டான் ஜான்.

 

இந்த தோட்டா உன் கால்ல பட்டிருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்! இப்போ தர முடியுமா, முடியாதா?” என்று கேலியாக வினவ, ரிஷபோ எரிச்சலுடன் கொடுத்துவிடுமாறு கைகளை மட்டும் அசைத்தான்.

 

ரியான் அவர்கள் கேட்டதை மறுபுறம் தூக்கி வீச, அதை எடுத்துக் கொண்டவர்கள், “நீங்க எங்களுக்கு சாப்பாடு கொடுத்த மாதிரி, நாங்களும் உங்களுக்கு உதவி செய்ய வேணாமா?” என்று கூறியபடி, ஒற்றை கைத்துப்பாக்கியை இவர்களிடம் வீசிவிட்டு, “இதை வச்சு எல்லா ட்ரோன்ஸையும் அழிங்க. கைஸ்!” என்றவாறே அங்கிருந்து நகர்ந்தனர்.

 

அவர்கள் சென்றதை ஒருவித கோபத்துடன் பார்த்த ரிஷப், “சாரி, அவங்க சொன்ன மாதிரி நான் இன்னும் கேர்ஃபுல்லா இருந்துருக்கணும்.” என்று ரிஷப் வருத்தத்துடன் கூற, அவனிற்கு ஆதரவாக நவி, நந்து, ரியான், டோவினா, நோலன் மற்றும் ஜாஷா என்று அனைவரும் பேச, அந்த சீன நாட்டு கணவன் மனைவி மட்டும் விலகியே இருந்தனர்.

 

ஒரு பெருமூச்சுடன், “இப்போ அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.” என்று அடுத்தகட்ட திட்டங்களுக்கு தயாரானான் ரிஷப்.

 

*****

 

பலமாடி கட்டிடம்என்ற பெயருக்கு ஏற்றார் போல, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது அந்த கட்டிடம். அதன் முகப்பில் ‘AN’ என்ற ராட்சத அளவில் ஆங்கில எழுத்துகள் மின்னின. யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாத வகையில், ‘உலகின் மிக பாதுகாப்பான இடங்களில் ஒன்றுஎன்று சொல்லிவிடுமளவிற்கு உச்சகட்ட பாதுகாப்பு இருக்கும் இடத்திலுள்ள 33ஆம் மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர் இருவர்.

 

அவர்களின் வேலையே, ‘மிஸ்டிரியோவில் இருப்பவர்களை கண்காணிப்பது தான்.

 

இந்த க்ரூப் அந்த ஃபென்சை தாண்டிடுவா்களா?” என்று ஒருவன் வினவ, “அந்த ரிஷப் ரொம்ப திறமையானவனாம். சோ அவன் ஹெல்ப் இருந்தா எப்படியும் வெளிய வந்துடுவாங்க!” என்றான் மற்றொருவன்.

 

யார் இவர்கள்?மிஸ்டிரியோவிற்கும் இந்த AN ஆட்களுக்கும் என்ன சம்பந்தம்? ஜான் கூறியது போல, இது உண்மையிலேயே விளையாட்டு நிகழ்ச்சி தானோ!

 

*****

 

ரிஷப் தங்களிடம் மீதமிருந்த ஒரு டேப்பில் அந்த வேலிக்கான மின்சாரத்தை துண்டிப்பதற்கான அறைக்கு செல்லும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர்கள் இப்போது அந்த கட்டிடத்திலிருந்து வெளியே வந்த வழிக்கு எதிர்புறத்தில் இருந்ததால், மீண்டும் வந்த வழியிலேயே செல்ல வேண்டுமா, இல்லை இந்த இடத்திலிருந்து வேறு ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா என்பதை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தீவிரமாக அவன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட நவி, “என்னாச்சு ரிஷப்?” என்று வினவ, “இங்க இருந்து அந்த பவர் சப்ளைக்கான ரூமுக்கு இன்னொரு ஷார்ட் கட் இருக்கு. ஆனா, இதுவரை அந்த பாதைல நான் போனதில்லை. சோ அங்க என்னென்ன ஆபத்துகள் இருக்குன்னு தெரியாது. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றான்.

 

அப்போ எதுக்கு ரிஸ்க் எடுக்கணும், ரிஷப்? நாம வந்த வழியிலேயே போகலாமே?” என்று நவி பதிலுக்கு கேள்வியை கேட்க, “அதுவும் ரிஸ்க் தான் நவி. நாம வந்த வழியில நிறைய புல்லட்ஸ் சிதற விட்டுருக்கோம். அது மட்டுமில்லாம, அந்த கதவுல ஹோல் போட்டுருக்கோம். அதை டிராக் பண்ணி அந்த ட்ரோன்ஸ் அங்க சுத்திட்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கு.” என்றான்.

 

இப்போது என்ன செய்வது?என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெருமூச்சுடன், “நாம ஷார்ட் கட் வழியாவே உள்ள போவோம். இஃப் வீ ஆர் லக்கி, அந்த ட்ரோன்ஸ் கிட்ட மாட்டாம, சீக்கிரமா பவர் சப்ளையை கட் பண்ணிடலாம்.” என்றான் ரிஷப்.

 

இப்போது திரும்பவும் யார் உள்ளே செல்வது என்று கலந்துரையாடல் நிகழ, “நானும் ரியானுமே உள்ள போறோம். உனக்கு ஓகே தான ரியான்?” என்று ரிஷப் வினவ, அவனும் சம்மதித்தான்.

 

ஆனால் நோலனோ, “நீங்களே எத்தனை முறை போவீங்க? டையர்டா இல்லயா?” என்று மருத்துவனாக வினவினான்.

 

நவிக்குமே சென்ற முறை போல ரிஷபை தனியே விட்டு, பின் மன அமைதியின்றி தவிக்க விருப்பமில்லை.

 

நோலன் சொல்றது சரி தான். ரிஷபுக்கு தான் அந்த ரூம்ல பவர் சப்ளை கட் பண்றது பத்தி தெரியும். சோ, ரிஷப் கூட நான் போறேன். ரியான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று கூறினாள்.

 

அனைவருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவே அதை ஆமோதிக்க, டோவினா தான், “நானும் வருவேன்.” என்று அடம்பிடித்தாள்.

 

அதான, என்னடா இன்னும் எதுவும் சொல்லாம இருக்காளேன்னு நினைச்சுட்டு இருந்தேன்!” என்று நந்து நோலனிடம் புலம்பினான். ஏற்கனவே, நவியிடம் சொல்லி திட்டுவாங்கியதால், இம்முறை ஆளை மாற்றிக்கொண்டான். நோலனும் கேலியாக உதட்டைப் பிதுக்கிவிட்டு வேடிக்கை பார்த்தான்.

 

ரெண்டு பேரு போனா போதும் டோவினா. எல்லாரும் ஒட்டுமொத்தமா போய் அதுங்க கிட்ட மாட்டிக்கிற சூழ்நிலையை உருவாக்க வேணாம்.” என்று அழுத்தமாக கூறினான் ரிஷப்.

 

அதன்பிறகு நேரம் தாழ்த்தாமல், ஜான் தூக்கி வீசிய ஒற்றை கைத்துப்பாக்கியுடன் , ரிஷும் நவியும் உள்ளே செல்வதற்கான வழியை நோக்கி பயணித்தனர். சற்று தூரம் சென்றதும் கதவு ஒன்றைக் கண்டனர். டேப்பில் ஒருமுறை சரி பார்த்துவிட்டு, அது தான் உள்ளே செல்வதற்கான கதவு என்பதை அறிந்து கொண்டு, அதன் மேல் கைவைக்க, அவர்களின் வரவிற்காகவே காத்திருந்ததைப் போல திறந்து கொண்டது அந்த கதவு.

 

எச்சரிக்கையை பார்வையின் வழியே பரிமாறியபடி உள்ளே நுழைந்தனர் இருவரும். மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே, இங்கும் நீல நிற ஒளி தான், சற்று மங்கலாக ஒளிர்ந்தது. ரகசிய அறைக்கு செல்லும் வழியில் இருந்தது போல இங்கும் எல்லா இடங்களிலும் தூசி படர்ந்திருந்தது.

 

அதைக் கண்டவன், “இந்த இடத்துல ட்ரோன்ஸோட கண்காணிப்பு இல்லன்னு நினைக்குறேன்.” என்று அந்த தூசியைப் பார்த்தவாறே கூறினான் ரிஷப்.

 

நவியும் அதை ஆமோதிப்பவளாக தலையை மட்டும் அசைத்துவிட்டு சுற்றிலும் பார்த்தாள். திடீரென்று, “ஏன் குறிப்பா சில இடங்களை மட்டும் அந்த ட்ரோன்ஸ் கண்காணிக்கணும்?” என்று வினவினாள்.

 

எனக்கும் இதுக்கான பதில் சரியா தெரியல. மேபி அதுங்க கண்காணிக்கிற இடத்துல ஏதாவது முக்கியமானது இருக்கணும். இல்லன்னா, வெப்பன்ஸ், ஃபுட்னு இங்க வாழ தேவையான பொருட்கள் இருக்க இடங்களை மட்டும் அதுங்க கண்காணிக்கணும். ஆனா, இது தான் ரீசன்னு சொல்ல முடியல.” என்றான் ரிஷப்.

 

அப்போ அந்த ஜான் சொன்ன மாதிரி இது கேம் தானா. நம்மள கடத்திட்டு வந்து, எப்படி சர்வைவ் பண்றோம்னு டெஸ்ட் பண்றாங்களா?”  என்று நவி வினவ, “நோ ஐடியா!” என்று உதட்டைப் பிதுக்கினான்.

 

மேலும் எதுவும் பேசாமல், அந்த அறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தான். சிறிது நேரம் காத்திருந்து எந்த நடமாட்டமும் இல்லை என்று உறுதியான பின்னர் நவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

டேப்பில் ஒரு பார்வை, சுற்றிலும் மறுபார்வை என எச்சரிக்கையாக ரிஷப் முன்னேறி செல்ல, நவியோ அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தன் குழம்பிய மனதிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.

 

ஆம் குழம்பிய மனமே! ஜான் மற்றும் டேவிட் சற்று நேரத்திற்கு முன், ிஷபை குற்றம்சாட்டிய போது ஏழாத சந்தேகம் இப்போது சிறுபொரியாய் மனதிற்குள் உருவாக, தன்னுள் எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பமே அவளை வியாபித்திருந்தது.

 

ஒருமுறை அவளின் மனமோ, ‘அவன்கிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டா இந்த சந்தேகம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல?என்று கூற, சில நொடிகளிலேயே, ‘அவன்கிட்ட கேட்டா, அவனை ஹர்ட் பண்ற மாதிரி இருக்காதா?என்று மாற்றி பேசியது.

 

அப்போது யாரோ அவளை உலுக்குவது போலிருக்க, சுயத்தை அடைந்தவளின் முன்னே நின்றிருந்தான் ரிஷப்.

 

என்னாச்சு நவி? உன் பேரை சொல்லி மூணு முறை கூப்பிட்டுட்டேன்!” என்றான் அவளை ஆராய்ந்து கொண்டே.

 

அவள்ஒன்றுமில்லைஎன்று தலையசைப்பதற்குள்ளாகவே, “ஒன்னுமில்லன்னு சொல்லாத, நீ குழம்பியிருக்கன்னு உன் முகத்துலயே தெரியுது. என்னன்னு சொல்லு.” என்றான் ரிஷப்.

 

அது வந்து…” என்று திணறியவள் பின்னர் ஒரு பெருமூச்சுடன், “நீங்க என்கிட்ட டேப் கொடுத்தப்போவே அந்த வேலி பத்தி சொல்லியிருக்கலாம்ல.” என்று தன் சந்தேகத்தை கேட்டேவிட்டாள்.

 

அதுவரை அவளின் தோளில் கைவைத்திருந்தவன், அவளின் கேள்வியில் சட்டென்று விலகினான். அவனின் விலகலே, தான் கேட்டது அவனை பாதித்துவிட்டது என்பதை அறிந்து கொண்டாள்.

 

ப்ளீஸ் டோன்ட் டேக் மீ ராங். நான் உங்களை தப்பா நினைச்சு கேட்கல. அதை சொல்லாததுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான்.என்று அவசரமாக கூற, அதை ரிஷபும் புரிந்து கொண்டான்.

 

நான் உன்கிட்ட டேப் கொடுத்தப்போ, அந்த ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் உன் பக்கத்துல தான் இருந்தாங்க. அவங்க இதுவரை யாருக்கிட்டயும் சரியா பேசல. அவங்க முகத்துல எப்பவும் பயம் இருந்துட்டே இருந்துச்சு. அந்த ஃபென்ஸ் விஷயத்தை சொன்னா, இன்னும் பயந்துருவாங்களோன்னு சொல்லல. ஆனா, நீ அந்த ஹைலைட் பண்ண இடத்தை பார்ப்பன்னு நினைச்சேன். ப்ச், அவங்க சொன்னதும் சரி தான். சப்போஸ் நான் வராம இருந்துருந்தா கண்டிப்பா ஏதாவது அசம்பாவிதம் நடந்துருக்கும்!” என்று ரிஷப் தன்பக்க விளக்கத்தை கொடுக்க, நவிக்கும் லேசான குற்றவுணர்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

 

என்மேலயும் தப்பு இருக்கு ரிஷப். நான் அந்த டேப்பை சரியா பார்த்துருந்துருக்கணும்.” என்று கூற, “நடந்தது நடந்துருச்சு, இனி அதைப் பத்தி நினைக்காம எப்படி வெளிய போறதுன்னு யோசிப்போம்.’ என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

இருவரும் நடந்து கொண்டிுக்கும்போதே, தூரத்தில் பாதை இரண்டு வழிகளாக பிரிவதை சுட்டிக்காட்டிய ரிஷப், நடுவில் இருந்த அறையைக் காட்டி, “அது தான் பவர் சப்ளை ரூம்.” என்றான்.

 

இவர்கள் அதை நோக்கி செல்லும்போதே, இரண்டு வழிகளிலிருந்தும் நீல நிற வெளிச்சம் தோன்ற, கூடவே ட்ரோனின் ரீங்கார சத்தமும் கேட்டது. அதிர்ந்து நின்ற நவியை இழுத்துக்கொண்டு சுவரோடு ஒட்டி நின்றான்.

 

இவர்கள் எதிர்பார்த்ததை போலவே இரு பக்கத்திலிருந்தும் இரு ட்ரோன்கள் நடுப்பகுதியில் சந்தித்துக் கொண்டு, மீண்டும் திரும்பிச் சென்றன. அவை நடுப்பகுதிக்கு  வரும்போது, அவற்றிலிருந்து கசிந்த நீல நிறம், இவர்கள் நின்றிருந்த தாழ்வாரத்தின் நடுப்பகுதி வரை வெளிச்சமாக்கியது. ரிஷப் மட்டும் நவியை இழுத்துக் கொண்டு, சுவருடன் ஒட்டி நிற்கவில்லை என்றால், இந்நேரம் இரு ஜோடிகளுக்கும் யுத்தம் அல்லவா நடைபெற்றிருக்கும்!

 

அவை திரும்பி சென்ற பின்பு தான் இருவரும் மூச்சை வெளியிட்டனர். “இப்போ என்ன பண்றது?” என்று நவி வினவ, தன் கையிலிருந்த ஒற்றை துப்பாக்கியை கண்டவன், “இதை வச்சு ரெண்டை சமாளிக்க முடியாது. அதுங்களை எப்படியாவது ஏமாத்திட்டு தான் உள்ள போகணும்…” என்றான்.

 

அந்ததிக் திக்நிமிடங்களிலும் சற்று நிதானமாக யோசித்த ரிஷப், மீண்டும் இரு ட்ரோன்களும் சந்தித்து திரும்பும் நிமிடங்களுக்காக காத்திருந்தான். அந்த நொடியினில் மனதிற்குள் எண்ண ஆரம்பித்தான். அந்த ட்ரோன்கள் ஒருமுறை நடுபகுதியிலிருந்து கிளம்பி மீண்டும் திரும்புவதற்கு எவ்வளவு நொடிகள் ஆகும் என்று தோராயமாக கணக்கிட்டவன், தன் கணக்கை இரண்டு முறை சரிபார்த்தும் கொண்டான்.

 

நவி, அந்த ட்ரோன்ஸ் மிட்பாயின்ட்ல இருந்து போய் திரும்ப வரதுக்கு அப்ராக்ஸிமேட்டா நாலு நிமிஷம் ஆகுது. சோ போறதுக்கு ரெண்டு நிமிக்ஷம் வரதுக்கு ரெண்டு நிமிஷம்னு வச்சுக்கிட்டா, அதுங்க இங்கயிருந்து கிளம்புனதுக்கு அப்பறம் வர ரெண்டாவது நிமிஷம் தான் நமக்கு சேஃப் டைம். அதுக்குள்ள நாம இங்கயிருந்து அந்த ரூமுக்குள்ள போயிருக்கணும்.” என்றான்.

 

அவன் கூறுவதை சிறு திகிலுடனே கேட்டவள், “ஆனா, அந்த ரூமோட கதவு திறந்துருக்கான்னு நமக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

 

நானும் அதை தான் யோசிக்கிறேன். ஃபர்ஸ்ட் டைம் நான் மட்டும் போய் அந்த ரூமோட கதவை திறக்க முயற்சிக்கிறேன். நெக்ஸ்ட் டைம் அந்த ட்ரோன்ஸ் வந்துட்டு போனதுக்கு அப்பறம் நீ வா.” என்றான்.

 

மனதிற்குள் லேசான பயம் எழுந்தாலும், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தவளாக தன் பயத்தை ஓரம்கட்டிவிட்டு, அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு தயாரானாள்.

 

ரிஷப் திட்டமிட்டதைப் போலவே, அந்த ட்ரோன்கள் கிளம்பியதும் மெதுவாக வெளிச்சம் இல்லாத இடத்திலேயே நடந்து சென்றவன், இரண்டாம் நிமிடம் துவங்கும் நொடியில், வேகமாக அந்த அறையின் முன் சென்றுவிட்டான். ஒருமுறை பார்வையை சுழற்றி, அந்த ட்ரோன்களின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டவன், அந்த கதவை திறக்க முயற்சித்தான்.

 

அவனின் நல்ல நேரமோ, அவன் கைவைத்ததும் அந்த கதவு திறந்து கொண்டது. அதை ஆராய நேரமில்லாமல், அந்த ட்ரோன்கள் திரும்பி வரும் அபாயம் இருப்பதால் உடனே அறைக்குள் சென்றுவிட்டான்.

 

நவிக்கோ, ரிஷப் அறைக்குள் செல்லும்வரை படபடவென்று தான் இருந்தது. அவன் சென்ற இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அந்த ட்ரோன்கள் மீண்டும் நடுப்பகுதியை அடைய,  கதவை விரைவில் திறந்து ரிஷப் உள்ளே சென்றதை நினைத்து பெருமூச்சு விட்டாள்.

 

இது நவியின் முறை என்பதால், தனக்கு தானே ஊக்குவித்தவளாக, ரிஷப் சென்றதைப் போலவே முதல் நிமிடத்தில் பதுங்கி சென்றவள், அடுத்த நிமிடத்தில் வேகமாக அந்த அறைக்கு செல்ல முயல, அந்த நடுப்பகுதியில் ஏதோ தடுக்கி விட கீழே விழுந்துவிட்டாள்.

 

அப்போது அவளின் அட்ரீனலின் வேகமாக சுரந்து அவளை எழுந்து ஓட சொல்ல, அவளால் எழக்கூட முடியவில்லை. இனி அவ்வளவு தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, நொடி நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு, ரிஷப் அவளை உள்ளே இழுப்பதற்கும், அந்த ட்ரோன்கள் இவர்கள் இருக்கும் பகுதியை நோக்கிய தங்களின் பயணத்திற்காக திரும்புவதற்கும் சரியாக இருந்தது.

 

சரியான கணத்தில் இருவரும் அறைக்குள் சென்றதினாலும், இவர்களின் சத்தம், ட்ரோன்களின் ரீங்கார சத்தத்தை விட குறைவாக இருந்ததினாலும் அந்த ட்ரோன்களால் இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

நவி தான் நடந்தது கனவா நிஜமா என்று பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தாள். அவளின் முதுகை ஆறுதலாக தடவி, “ரிலாக்ஸ் நவி!” என்று முணுமுணுத்தான்  ரிஷப்.

 

சிறிது நேரத்தில் இயல்பிற்கு திரும்பியவள், ரிஷபிடம் நன்றியுரைக்க, அதை சிறு சிரிப்புடன் ஏற்றுக்கொண்டான்.

 

பின் தாங்கள் வந்த வேலையில் கவனம் செலுத்தினர் இருவரும்.இதற்கு முன்னரே ரிஷப் இங்கு வந்திருந்ததால், அவனிற்கு அங்கிருக்கும் இயந்திரங்கள் அத்துபடி. ஆயினும், அவன் எதற்கோ தயங்கி நிற்க, நவி என்னவென்று வினவினாள்.

 

பவர் சப்ளை கட் பண்றது பெரிய விஷயம் இல்லஆனா, சப்ளை கட்டானதும் கொஞ்ச நேரத்துலயே அது அந்த ட்ரோன்ஸுக்கு தெரிஞ்சுடும். அதுங்க இந்த ரூமுக்கு வரதுக்குள்ள நாம இங்கயிருந்து தப்பிச்சாகனும்…” என்றான்.

 

உஃப், இப்போ என்ன பண்றது?” என்று வினவிய நவி தன் பார்வையை சுழற்ற, அந்த அறையின் ஓரத்தில் எதையோ கண்டு அதனருகே சென்றாள்.

 

அது பார்ப்பதற்கு சற்று பெரிய டார்ச் லைட் போன்று இருந்தது. அவளின் பின்னே ரிஷபும் வர, இருவரும் அதை கையில் எடுத்து பார்த்தனர்.

 

சில நொடிகள் அதை உற்று பார்த்து நவி, “ரிஷப், இது லேசர் தான?” என்று வினவ, அவனும், “ஆமா பார்த்தா அப்படி தான் தெரியுது. ஆனா, இங்க எப்படி வந்துச்சுன்னு தெரியல. இதுக்கு முன்னாடி இங்க வந்தப்போ இது இங்க இல்லையே!” என்று யோசித்தான். அதனருகே சிதறிக்கிடந்த கண்ணாடிகளையும் கண்டான்.

 

நவியோ இதை வைத்து அந்த ட்ரோன்களை கட்டுப்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தன் சிந்தனையை ரிஷபிடமும் பகிர்ந்து கொண்டாள்.

 

அது பாசிபில் தான். இதுல இருந்து வர லேசர் அந்த ட்ரோன்சோட கேமரா லென்ஸை தாக்கி வெடிக்க செய்யும். இப்போ ஆயுதங்கள் இல்லாத நிலையில இது நமக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்று அதை எடுத்துக் கொண்டான். அங்கிருந்த கண்ணாடிகளை எடுத்து நவிக்கும் ஒன்றை கொடுத்தான்.

 

சோ இனி நம்ம பிளான் என்ன?” என்று நவி வினவ, “ஹ்ம்ம், இந்த லேசர் வச்சுக்கிட்டு ரெண்டு ட்ரோன்ஸை ஒரே நேரத்துல சமாளிக்க முடியாது. சோ ஒரு ட்ரோனை நம்ம பக்கம் வர மாதிரி செய்யணும்.” என்று கூற அவன் அந்த மின்சார துண்டிப்பை பற்றி தான் பேசுகிறான் என்பது நவிக்கு புரிந்தது.

 

ஆனா, ஒரு ட்ரோன் மட்டும் தான் உள்ள வரும்னு கேரண்ட்டி இல்லல.” என்று நவி கூற, “ஹ்ம்ம், லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்!” என்று தன் திட்டத்தை செயல்படுத்த துவங்கினான்.

 

அதன்படி தன்னிடமிருந்த துப்பாக்கியை நவியிடம் கொடுத்து, அவளை சற்று தள்ளி நிற்க சொல்லிவிட்டு, ரிஷப் அந்த வேலிக்கான மின்சாரத்தை துண்டித்தான். பிறகு அந்த கதவுக்கு எதிர்புறத்தில் அந்த கிளர்கதிர் ஒளிமி (லேசர்) இயந்திரத்துடன் தயாராக இருந்தான்.

 

நொடிகள் கழிய, இருவரின் இதயத்துடிப்பு எகிற, அங்கு நிலவிய மைதியை கலைத்தது அந்த ரீங்கார சத்தம். கதவின் கீழ்புறத்திலுள்ள சிறு இடைவெளியில் தெரிந்த நீல நிற ஒளியை வைத்து அந்த ட்ரோன் வெளியே இருக்கிறது என்பதை அறிந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

ரிஷப் அந்த இயந்திரத்தை இயக்க தயாராக இருக்க, அந்த கதவு மெதுவாக திறந்தது. அந்த நொடியில் அந்த இயந்திரத்திலிருந்த கதிர்களை அவன் விடுவிக்க, அந்த கதிர்கள் உள்ளே வந்த ட்ரோனின் புகைப்பட வில்லையை (கேமரா லென்ஸ்) தாக்கின.

 

இந்த தாக்குதலால் அந்த ட்ரோனிற்கு தன் இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. சற்று நேரத்திலேயே அந்த வில்லை தீப்பற்ற ஆரம்பிக்க, அந்த ட்ரோன் அதே இடத்திலேயே வெடித்தது.

 

அதைக் கண்டவர்கள் தங்கள் திட்டம் வெற்றி பெற்றதை உணர்ந்து ஒரு பார்வை பரிமாற்றலுடன், அடுத்த ட்ரோனிற்காக காத்திருக்க துவங்கினர்.

 

ஆனால், வெகுநேரம் ஆகியும் அந்த ட்ரோன் வராததால், ரிஷப் மெல்ல வெளியே எட்டிப்பார்க்க, அங்கு மற்றொரு ட்ரோன் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.

 

நவியிடமும் அதைக் காண்பித்தவன் மனதில் ஏதோ தவறாக பட, உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறலாம் என்று கூறிவிட்டு முன்னேறி செல்ல, நவியும் அவனைப் பின்தொடர்ந்தான்.

 

அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியே செல்ல காத்திருந்ததைப் போல, இத்தனை நேரம் தன்னையே அணைத்து வைத்துக்கொண்டிருந்த அந்த மற்றொரு ட்ரோன், அவர்களைப் பின்தொடர்ந்தது.

 

சில நொடிகளிலேயே தங்களின் பின்னே ஏதோ இருப்பதை உணர்ந்த ரிஷப் தன் கையிலிருந்த இயந்திரத்தை தாயாராக வைத்துக்கொண்டு சடுதியில் திரும்பி அந்த ட்ரோனின் மேல் கதிர்களை செலுத்தினான்.

 

அந்த ட்ரோன் இதை எதிர்பார்க்கவில்லை போலும்! முதலில் சற்று தடுமாறி பின்னர் ரிஷபிற்கு எதிராக தாக்கியது. முன்னதை போல இல்லாமல், இந்த ட்ரோன்னை சமாளிப்பது சற்று கடினமானதாகவே இருந்தது ரிஷபிற்கு.

 

நவியோ இவர்களின் சண்டையை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.  பின் என்ன நினைத்தாலோ, அந்த ட்ரோனின் நடுப்பகுதியை குறிவைத்து சுட, அதன் கட்டுப்பாடை இழந்த ட்ரோன் கீழே விழுந்தது.

 

ஒருவழியாக இரண்டு ட்ரோன்களையும் அழித்துவிட்டு, தங்களுக்காக காத்திருப்பவர்களை நோக்கி ஓடினர். வழியில் வேறு எவ்வித தடையும் இல்லாததால் வேகமாகவே வெளியே சென்றனர்.

 

அவர்களின் வரவிற்காக  வெளியே காத்திருந்தவர்கள் சற்று பதட்டத்துடனே இருக்க, உள்ளே சென்ற அதே கதவின் வழியே வெளியேறினர் ரிஷபும் நவியும்.

 

அவர்களின் மேனியிலிருந்த காயங்களைக் கண்ட மற்றவர்கள் அதைக் குறித்து வினவ முயற்சிக்க, ரிஷபோ, “அதெல்லாம் அப்பறம் பேசலாம். முதல்ல அந்த வேலியை தாண்டலாம்.” என்று நிற்காமல் வேலியை நோக்கி ஓட, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

 

ஒரு பெருமூச்சுடன் ரிஷப் அந்த வேலியில் கைவைக்க, மற்றவர்களோ என்ன ஆகுமோ என்று இமைக்க மறந்து பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பின் படியே எந்தவித மின் அதிர்வும் ஏற்படவில்லை.

 

ரிஷப் தன் கைகளில் சற்று அழுத்தமான துணியை கட்டிக்கொண்டு அந்த வேலியை கீழ்நோக்கி இழுத்தான். இவனின் முயற்சி கண்டு ரியான் மற்றும் நோலனும் உதவி செய்ய, இரண்டே நிமிடங்களில் மற்றவர்கள் தாண்டுவதற்கு ஏதுவாக அந்த வேலியை மாற்றினர்.

 

அதன்பிறகு அனைவரும் மற்ற பக்கம் தாண்டி சென்றதும் தான் சிறிது ஆசுவாசப்பட்டுக் கொண்டனர்.

 

அவர்களின் நிம்மதியை அழிக்கவென்று அவர்களுக்காக காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி..!

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)