14 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

14 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 14

 

ரிஷபும் நவியும் சிறிது நேர இலகு பேச்சிற்கு பின்னர், டேப்பின் வழியாக மறுகரையை அடைவதற்கான வழியைக் கண்டனர். அதைக் கண்டதும், இருவரும் தங்களிடமிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு டேப் காட்டிய வழியை நோக்கி நடந்தனர்.

 

அகலம் கம்மியா இருக்குனாலும், அதைக் கடக்குறது எப்படி?” என்று செல்லும் வழியில் நவி வினவ, “எனக்கும் தெரியல. ஆனா, சும்மா அங்க உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுறதுக்கு, இந்த முயற்சி பண்ணலாமே.” என்று அவள் புறம் திரும்பாமலேயே கூறிவிட்டு முன்னே சென்றுவிட்டான்.

 

எதே வெட்டிக்கதையா!என்று நவி தான் அவனை முறைத்துக் கொண்டே பின்தொடர்ந்தாள்.

 

பத்து நிமிட நடைக்குப் பின்னர், இருவரும் அந்த இடத்தை அடைந்தனர். டேப்பில் உள்ளது போலவே, ஆற்றின் அகலம் சற்று குறைந்து தான் இருந்தது. எனினும், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை அப்படியே கடந்துவிட முடியாது.

 

என்ன செய்வதென்று என்ற யோசனையுடன் இருவரும் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நவியின் கண்களுக்கு, சற்று தொலைவில் மரத்துண்டுகள் இருப்பது போல தெரிய, அதை ரிஷபிடம் கூறினாள்.

 

ம்ம்ம், வா போய் பார்க்கலாம்.” என்று நவியையும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றான் ரிஷப்.

 

அங்கு நவி கூறியது போல இரண்டு மரத்துண்டுகள் இருந்தன. ஆனால், மரங்களே இல்லாத அந்த இடத்தில் எப்படி மரத்துண்டுகள் வந்தன என்பது தான் அவர்களின் ஆச்சரியம்.

 

ரிஷப் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அந்த மரத்துடுகளை ஆற்றிற்கு அருகில் எப்படி எடுத்துச் செல்வது என்று யோசிக்க, நவி இன்னமும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் இப்போதைக்கு திரும்ப மாட்டாள் என்று சரியாக கணித்தவன், “நவி, நீ இப்படி மறுபடியும் மறுபடியும் சுத்தி பார்த்துட்டு இருக்குறதால, புதுசா மரம் முளைக்க போறது இல்ல. சோ, இதை எப்படி தூக்கிட்டு போறதுன்னு பேசலாமா?” என்று வினவ, அவளும் அவளின் தேடலில் இருந்து வெளியே வந்தாள்.

 

இருவரும் இணைந்து ஒரு மரத்துண்டை தூக்கிச் செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள், இருப்பதில் நீளமாக இருந்த மரத்துண்டை ஆளுக்கு ஒருபுறம் பிடித்து தூக்கினர்.

 

அதை தூக்கி இரு அடிகள் நடப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. இரு அடிகள் நடை, இரண்டு நிமிட ஓய்வு என்று அந்த ஐந்து நிமிட தொலைவினை எத்தனை மணி நேரங்களில் கடந்தனர் என்பது அவர்களுக்கே தெரியாது.

 

ஒருவழியாக, அந்த மரத்துண்டினை வெற்றிகரமாக ஆற்றிற்கு அருகில் கொண்டு வந்து வைத்தனர். அதற்கு மேல் நிற்க முடியாதவளாக, அதே இடத்தில் தொப்பென்று அமர்ந்து விட்டாள் நவி. ரிஷபும் கூட மிகவும் சோர்ந்திருந்ததால் அவளருகே கால்களை நீட்டி அமர்ந்தான்.

 

சில நிமிட மௌனமான ஓய்வுக்கு பின்னர், ஆற்றைக் கடப்பதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். தாங்கள் தூக்கிவந்த மரத்துண்டினை முதலில் செங்குத்தாக நிற்க வைத்து, அதற்கும் அந்த ஆற்றின் அகலத்திற்குமான அளவை குத்துமதிப்பாக கணக்கிட்டு, மரத்துண்டினை பாலமாக்க முயன்றான்.

 

ஆனால், நினைத்ததைப் போல அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. மறுகரையில் யாராவது உதவிக்கு நின்றால் சற்று எளிதாக இருக்கும் என்று நினைக்கும்போதே அங்கு வந்தான் நந்து.

 

சில மணி நேரங்கள் கழித்து நண்பனைக் கண்டதால் எழுந்த உற்சாகத்தில், “நந்து, நீ எப்படி இங்க?” என்று நவி கத்த, “அந்த வெள்ளை காராச்சேவு நீங்க இந்த பக்கம் வந்ததா சொன்னா. அதான் உங்களைப் பார்க்க நான் வந்தேன்.” என்றான்.

 

நீயா தனியாவா வந்த?” என்று ஆச்சரியத்துடன் நவி வினவ, நந்துவும் பெருமையாக சட்டையின் கழுத்துப்பட்டையை தூக்கிவிட்டுக் கொண்டான்.

 

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ரிஷப், “போதும் ரெண்டு பேரும் நலம் விசாரிச்சது. இங்க நான் இதை வச்சு கஷ்டப்படுறேனேன்னு எண்ணம் இருக்கா?” என்று கடுப்பாக வினவ, அதற்கு மேல் அவனைக் கடுப்பேற்ற வேண்டாம் என்று எண்ணியவர்கள் அவனின் உதவிக்கு சென்றனர்.

 

நவியும் ரிஷபும் அந்த மரத்துண்டு மறுகரையை அடையுமாறு சாய்க்க, நந்து அதை பிடித்துக் கொண்டான்.

 

மூவரின் உழைப்பால் அந்த மரத்துண்டு இரு கரைக்கும் இடையே பாலமாக மாறியது. நந்து ஒருபுறம் அந்த மரத்துண்டை பிடித்துக்கொள்ள, ரிஷப் மறுபுறம் பிடித்துக்கொண்டான். நவி அதில் மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள்.

 

என்ன தான் இருபுறமும் பிடித்துக்கொண்டாலும், அதில் நடப்பது அந்தரத்தில் நடப்பது போலவே இருந்தது நவிக்கு. கூடுதலாக மரத்துண்டின் அடிப்பாகத்தை வேகமாக உரசி செல்லும் தண்ணீரின் இரைச்சலினாலும் நவியின் மனம் அடித்துக்கொண்டது உண்மை தான்.

 

இரண்டடி எடுத்து வைத்ததும் சிறிது நம்பிக்கை எழ, அடுத்தடுத்த அடிகளை சற்று வேகமாக எடுத்து வைக்க, அவளின் வேகத்தினால் அந்த மரத்துண்டு அசைய ஆரம்பித்தது.

 

அதன் அசைவில் நவியும் பதற, “நவி ரிலாக்ஸ். ஒன்னும் அவசரமில்ல. மெதுவாவே போ.” என்று ரிஷப் கூற அவளும் பெருமூச்சு விட்டுக்கொண்டு மெதுவாக அதைக் கடந்தாள். மறுபுறம் சென்றதும், நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் சந்தித்ததைப் நண்பர்கள் இருவரும் கட்டிக்கொண்டனர்.

 

உஃப், இவங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சு.” என்று முணுமுணுத்தான் ரிஷப்.

 

இது ரிஷபின் முறை. நவிக்கு இருபுறமும் பிடிக்க ஆள் இருந்தும் அவள் தடுமாறினாள். இப்போது ரிஷபிற்கோ அவன் புறம் பிடிப்பதற்கும் ஆளில்லை. ஒரு நொடி யோசித்தவன், மறுகரையில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த இருவரிடமும் அருகில் ஏதாவது நீளமான மரக்கிளைகள் தென்படுகிறதா என்று பார்க்க சொன்னான்.

 

மறுகரையில் ஆங்காங்கே பெரிய மரங்கள் இருந்ததால், நவி மற்றும் நந்து சில நொடிகளிலேயே நீளமாகவும் அதே சமயம் வலுவாகவும் இருந்த மரக்கிளைகளை எடுத்து வைத்துக்கொண்டனர்.

 

ஓகே கைஸ். நான் இந்த பாலத்துல எவ்ளோ தூரம் நடக்க முடியும்னு தெரியல. ஒருவேளை நான் விழுந்துட்டா அந்த மரக்கிளையை உள்ள போட்டு என்னை இழுக்க முயற்சிங்க. அந்தளவுக்கு போகாதுன்னு நம்புவோம்.” என்று கூறி மெதுவாக அந்த மரபாலத்தின் மீது ஏறினான்.

 

அப்போதே அது லேசாக ஆட ஆரம்பித்தது. அவன் ஆடியதில் மறுபுறமிருந்த இருவரும் பதறினர்.

 

ரிஷப் அவனின் பதட்டத்தை வெளிகாட்டவில்லை என்றாலும் அவன் மனதிலும் சிறிது பதட்டம் இருக்கத்தான் செய்தது.  அவனின் ஒவ்வொரு அடிக்கும் அந்த மரத்துண்டு ஆட, அதன் ஆட்டம் நின்றபிறகு தான் அடுத்த அடியை மிகவும் பொறுமையாகவே எடுத்து வைத்தான்.

 

இன்னும் மூன்றடி எடுத்து வைத்தால் மறுகரையை அடைந்துவிடலாம் என்று மூவரும் மகிழும் வேளையில், திடீரென்று நீரின் அளவு அதிகரித்து போலிருந்தது. அதைக் கண்டவர்கள் என்னவென்று யோசிக்கும் முன்னரே, ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த நீர், அவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் அந்த மரத்துண்டின் மீது மோதி அதை தள்ளிவிட்டு சென்றது.

 

அந்த நிகழ்வினால் மரத்துண்டின் மீது நின்றிருந்த ரிஷப் அந்த ஆற்றில் விழுந்து அதன் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டான்.

 

அந்த காட்சியைக் கண்டவர்களில் முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்தது நவி தான். இப்போது அவர்களின் உதவி ரிஷபிற்கு தேவை என்பதை உணர்ந்தவள், நந்து என்று கத்திவிட்டு அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல், அவர்கள் சற்றுமுன் எடுத்து வைத்திருந்த மரக்கிளைகளை கையில் எடுத்துக் கொண்டு ரிஷபை நோக்கி ஓடினாள்.

 

ரிஷபும் தண்ணீரின் போக்கிற்கு ஏற்ப செல்லாமல் இருக்க, நீருக்குள் இருந்த சில தாவரங்களில் தன் கால்களை சுற்றிக் கொண்டு அதே இடத்தில் நிற்க போராடினான். ஆனால், வெகு நேரம் அவனால் இதே போல தாக்கு பிடிக்க முடியாது என்றே அவனிற்கு தோன்றியது.

 

அவனின் சிந்தனையை கலைப்பது போல, “ரிஷப்…” என்ற கூவலுடன் அவனிருந்த இடத்தின் அருகே வந்தாள் நவி.

 

அவளையும் அவளின் கையிலிருந்த மரக்கிளையையும் பார்த்தவன், கண்ணசைத்து ஆமோதிக்க, நவியும் அதை தூக்கிப் போட்டாள்.

 

முதல் முறை வீசும்போது, நீரின் வேகத்தில் தள்ளாடிய ரிஷபினால் அதை பிடிக்க முடியவில்லை. இரண்டாம் முறை நவி அவனிருக்கும் இடத்தை தாண்டி வீசியதால் அவனால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.

 

நவியின் பதட்டத்தை உணர்ந்தவன் அந்நிலையிலும், “நவி ரிலாக்ஸ். பதட்டமா இருந்தா எதையும் ஹேண்டில் பண்ண முடியாது.” என்று திக்கியபடி கூறினான்.

 

அவன் கூறுவது சரியென்று உணர்ந்தவள், கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டு, மீண்டும் தூக்கி வீசினாள். இம்முறை அதை சரியாக பற்றிக்கொண்டான் ரிஷப்.

 

ஆனால், தனி நபராக அவனை இழுப்பதற்கு நவியால் முடியவில்லை. இருப்பினும் முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் பின்னிலிருந்து யாரோ அந்த மரக்கிளையை இழுப்பது போல தோன்ற, பின்னே திரும்பிப் பார்த்தாள். அங்கு நந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.

 

சாரி நவி, இப்போ தான் அந்த ஷாக்லயிருந்து வெளிய வர முடிஞ்சுது. முன்னாடியே நானும் வந்து ஹெல்ப் பண்ணியிருக்கணும்.” என்று அவன் கூற, “அது பரவால நந்து. இப்போ நாம் இன்னும் கொஞ்சம் வேகமா இழுக்கணும். ஆன் தி கவுண்ட் ஆஃப் த்ரீ.” என்றவள் கூறியதைப் போலவேஒன்’ ‘டூ’ ‘த்ரீஎன்று சொன்னதும் தங்களின் ஒட்டுமொத்த சக்தியையும் பிரயோகித்து ரிஷபை இழுக்க, அவனும் கரையின் எல்லையை எட்டி இருந்தான்.

 

தங்களின் முயற்சி வெற்றியடைந்ததை எண்ணி இழுத்த மூச்சை வெளியே விட்டு கொண்டாடினர் நவியும் நந்துவும்.

 

அங்கு ரிஷபோ இத்தனை போராட்டங்களுக்கு பிறகு மிகவும் சோர்வாக படுத்திருக்க, அருகில் வந்த நவியோ மயங்கிவிட்டானோ என்று பார்த்தாள்.

 

ரிஷப், ஆர் யூ ஓகே?” என்று வினவ, அவனும் சோர்வுடன் எழ முயற்சித்தான்.

 

நீரின் வேகத்தில் சென்றுவிடக்கூடாது என்று அந்த தாவரங்களில் கால்களை நுழைத்துக் கொண்டதாலும், நவி மற்றும் நந்து அவனை இழுக்கும்போது, அதிலிருந்து கால்களை வெளியே எடுக்க போதிய அவகாசம் இல்லாமல், அப்படியே அந்த தாவரங்களோடு சேர்த்து கால்களை இழுத்ததாலும் ரிஷபின் கால்கள் காயப்பட்டிருந்தன.

 

அவனால் சரிவர நடக்க முடியாமல் தடுமாறி கீழே அமர்ந்துவிட்டான். அவன் தடுமாறும் போதே அவனைப் பிடித்துக் கொண்ட நந்து அவனுடன் அமர, நவி ரிஷபின் கால்களை ஆராய்ந்தாள்.

 

என்னாச்சு ரிஷப்? கால்ல இவ்ளோ காயம் எப்படி ஏற்படுச்சு? தண்ணிக்குள்ள எதுலயாவது இடிச்சுகிட்டிங்களா?” என்று நவி வினவ, ரிஷபும் நடந்தவற்றை அவளிடம் கூறினான்.

 

சாரி ரிஷப், வெளிய இழுக்குறப்போ உங்ககிட்டயும் கேட்டுருக்கணும். ஏதோ டென்ஷன்ல அப்படியே இழுத்துட்டோம்.” என்று நவி வருந்த, “கூல் நவி, ஒன்னும் பிரச்சனை இல்ல. என்ன இப்போ உடனே நடக்க முடியுமான்னு தெரியல. இதே இடத்துல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.” என்று ரிஷப் கூற, நவியும் அரைமனதாக சம்மதித்தாள்.

 

நந்து, ரிஷபை மெதுவாக அழைத்துச் சென்று ஒரு மரத்தில் சாய்த்தவாறு அமர வைத்தான். ரிஷபும் சில நொடிகளிலேயே கண்ணயர்ந்தான்.

 

அவனையே வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்த நவியிடம் வந்த நந்து, “நவி, நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என்று வற்புறுத்தி அவளையும் தூங்கச் சொன்னவன், அவளருகே அமர்ந்து சற்று நேரத்திலேயே அவனும் தூங்கிப் போனான்.

 

இம்மூவரும் அடுத்து எழுந்ததென்னவோ, துப்பாக்கி சுடும் சத்தத்திலும் அதைத் தொடர்ந்து வந்த அலறல் சத்தத்திலும் தான்.

 

*****

 

அந்த சத்தத்தில் மூவருமே பதறிக்கொண்டு எழுந்தமர்ந்தனர். சில நொடிகள் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று கூர்ந்து கவனித்தவர்கள், அதை புரிந்து கொண்டதும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துவிட்டு வேகமாக எழுந்தனர்.

 

சற்று நேர ஓய்வினால் முழுதாக சரியாகாவிட்டாலும், ஓரளவிற்கு ரிஷபினால் நடக்க முடிந்தது.

 

ஒருபுறம் நந்து அவனைத் தாங்கிக் கொள்ள, நவி அவர்களிடமிருந்த பைகளை தூக்கிக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தாள். மூவரும் மற்றவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்றனர்.

 

அந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் பார்த்தது, கழுத்திலிருந்தும் வயிற்றிலிருந்தும் குருதி வழிந்துகொண்டு கீழே  விழுந்திருந்த டோவினாவையும், கையில் துப்பாக்கியுடன் ரியானை குறிபார்த்துக் கொண்டிருந்த நோலனையும் தான்.

 

ரியானோ, “நோலன், என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பிஹேவ் பண்ற?” என்று கத்திக் கொண்டிருக்க, “நான் இல்லநான் இல்ல..” என்று புலம்பிக் கொண்டிருந்தான் நோலன்.

 

அப்போது ரிஷப், “என்ன நடக்குது இங்க?” என்று வினவ, மற்ற இருவரும் அப்போது தான் வந்தவர்களை கவனித்தனர்.

 

ரிஷப்,  நீங்க எப்படி இங்க வந்தீங்க?” என்று ரியான் வினவ, “இப்போ அது முக்கியமில்ல ரியான். இங்க என்ன நடந்துச்சு?” என்று கடுமையான குரலில் வினவினான் ரிஷப்.

 

இவர்களின் உரையாடலில் பங்குகொள்ள விரும்பாத நவி டோவினாவை சென்று பார்த்தாள்.

 

சில மணி நேரங்களுக்கு முன்னர் தன்னை முறைத்துக் கொண்டிருந்த பெண் இப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடியவில்லை.

 

என்ன தான் எப்போதும் அவளை கேலி செய்தாலும், அவள் எமனுடன் போராடிக் கொண்டிருக்கும் காட்சியை நந்துவாலும் பார்க்க முடியவில்லை.

 

அவளின் கழுத்திலிருந்து கசியும் இரத்தத்தை நிறுத்த அவ்விடத்தில் தன் கரம்கொண்டு அழுத்தினாள் நவி. அதில் மூடியிருந்த இமைகளைப் பிரித்த டோவினாவின் கண்களிலிருந்து சில துளி கண்ணீர் கசிய, அவள் எத்தகைய வலியில் இருக்கிறாள் என்பதை நவியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், விடாமல் கசிந்து கொண்டே இருக்கும் இரத்தம் அவளின் இறைப்பை உறுதிப்படுத்த, அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் கலங்கினாள் நவி.

 

இவன் தான் ரிஷப். இவனுக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல. துப்பாக்கி எடுத்து யோசிக்க முன்னாடியே டோவினாவோட கழுத்துலயும், வயித்துலயும் சுட்டுட்டான். ஏன்னு கேட்டா என்னையும் சுட்டுடுவேன்னு மிரட்டுறான்.” என்று ரியான் ரிஷபிடம் கூறினான்.

 

ரிஷபின் கண்கள் நோலனை நோக்க அவன் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. மேலும் ரிஷபின் கண்கள், அவனருகே இருந்த ஆயுதங்கள் அடங்கிய பையை கண்டு கொண்டது.

 

நோலன், என்ன பண்ணி வச்சுருக்கீங்க?” என்று ரிஷப் வினவ, “இல்ல நான் எதுவும் பண்ணல. ரியான் தான் அவளை சுட்டான்.” என்று கத்தினான்.

 

இருவரும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதைக் கண்ட ரிஷபிற்கு என்ன முடிவெடுப்பது என்றே தெரியவில்லை. சாட்சி சொல்ல யாரும் இல்லை என்று யோசித்த ரிஷபிற்கு சட்டென்று டோவினாவின் நினைவு எழ அவளைப் பார்த்தான்.

 

அவளின் நிலையைக் கண்டவனிற்கு அவளிடம் விசாரிக்க மனம் வரவில்லை. இத்தனை வேதனைகளை அனுபவிப்பவளை பார்த்து இரக்கம் தான் எழுந்தது.

 

ஆனால், அவன் பார்வையைக் கண்ட டோவினாவே பெரும் முயற்சியுடன், ஏதோ சொல்ல, கழுத்தில் குண்டடி பட்டதால், அவளின் வாயசைவு மட்டுமே புலப்பட்டது மற்றவர்களுக்கு.

 

அவள் அந்த பெயரை உச்சரித்ததுமே அவளின் உயிர் உடலை விட்டு பிரிய, அதைக் கேட்டவர்கள் அந்த பெயருக்கு உரியவரை முறைத்தனர்.

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)