17 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

17 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 17

 

நவி நந்துவைப் பற்றி வினவ ரிஷபோ, “இருக்கான்…” என்று மட்டும் கூறிவிட்டு செல்ல, அவனின் முதுகை தான் வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். அப்போது அவளின் கையில் ஏதோ காகிதம் போன்று தென்பட, அதைக் கண்டு திகைத்தவள், காகிதத்தைப் பிரித்தாள்.

 

அதில், “திங்க் ட்வைஸ் பிஃபோர் யூ ரியாக்ட்! (இரு முறை யோசித்தப்பின் எதிர்வினையாற்று!)” என்று எழுதியிருக்க, அதைக் கண்டவள் மேலும் சலித்துக் கொண்டாள்.

 

ப்ச், பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்போ அட்வைஸ் வேற!” என்று முணுமுணுத்தாள்.

 

என்ன தான் சலித்துக் கொண்டாலும், அவன் கூறுவதையும் முழுதாக மறுக்க முடியாமல், இனி முகபாவனைகளை மாற்றும் பொழுது கூட கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

அதன்பின்பும், அவளின் மனம் நந்துவை நினைத்தே கவலைப்பட, அப்போது அவளின் அறையின் கதவு திறக்கப்பட்டது.

 

கட்டிலில் அமர்ந்திருந்தவள், யாரென்று பார்க்க பார்வையை மட்டும் திருப்ப, அவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தவளைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்.

 

உள்ளே வந்தவளின் கூர்ப்பார்வையைக் கண்ட நவியால், நிச்சயம் இந்த பார்வை எதிரில் நிற்பவர்களின் இதயத்தை ஊடுருவும் ஆற்றல் பெற்றது என்பதை உணர முடிந்தது. அந்த ஊடுருவலைத் தடுப்பதற்காகவென்றே அந்த கண்ணாடியை அணிந்திருப்பாளோ என்ற சந்தேகமும் உண்டானது. அது மட்டுமா, அவள் நின்றிருந்த தோரணையே, இந்த வேலைக்கு அவள் புதிதல்ல என்பதை பறைசாற்றியது. மேலும், அவளின் நடையே அவளின் அபரிமிதமான தன்னம்பிக்கையை பிரதிபலித்தது.

 

அவளிடம் எவ்வளவு மாற்றங்கள் என்று நவி வியக்கும்போதே அவளருகே வந்தவள், நவியின் கணிப்புகளை எல்லாம் கண்டும்காணாமல், அவளின் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

 

அவள் ஜாஷா!

 

ஆம், ஜாஷா தான். கர்ப்பிணி பெண்ணாக சிலரின் கேலியையும், பலரின் பரிதாபத்தையும் சுமந்த அதே ஜாஷா தான், இப்போது மற்றவர்கள் நெருங்குவதற்கு கூட யோசிக்கும் அளவிற்கு இறுகியிருந்தாள். ஜாஷா இதில் எளிதாக பொருந்திப் போனதில், இது தான் அவளின் உண்மை குணமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நவியை அவள் அமர்ந்திருந்த கட்டிலிலேயே படுக்க வைத்தாள் ஜாஷா.

 

யோசனையில் இருந்த நவிக்கு, ஜாஷாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்த, “ஹே, என்ன பண்ற?” என்று வினவினாள் நவி.

 

ஜாஷாவோ நவி பேசுவதை எல்லாம் கவனிக்கவே இல்லை. அவள் கொண்டு வந்த பெட்டியிலிருந்து ஏதோ ஒரு மருந்து குப்பியை எடுத்து, அதை ஊசியைக் கொண்டு உறிஞ்சி எடுத்து, நவிக்கு செலுத்த முற்பட்டாள்.

 

அவள் ஊசியைத் தன்னருகே கொண்டு வருவதை கண்ட நவி, “என்ன இன்ஜக்சன் இது?” என்று வினவ, மீண்டும் ஜாஷாவிடம் பதில்லை.

 

ஸ்டாப் ஜாஷா! நீ என்னன்னு சொல்ற வரைக்கும் அந்த இன்ஜக்சன் போட சம்மதிக்க மாட்டேன்.” என்று நவி கூற, அதைக் கேட்டு இதழ் வளைத்து சிரித்த ஜாஷா, “எனக்கு உன் பெர்மிஷன் ஒன்னும் தேவையில்ல.” என்று அலட்சியமாக கூறினாள்.

 

இத்தனை நேரம் ஜாஷாவின் உடல்மொழி மாற்றங்களைக் கண்டே அதிர்ச்சியில் இருந்த நவிக்கு அவளின் இந்த அலட்சிய பேச்சு மேலும் திகைப்பை கொடுத்தது உண்மை தான்.

 

ஹ்ம்ம், இவ இப்படி தான் பேசுவான்னு முன்னாடியே யோசிச்சுருக்கணுமோ!என்று  நவியின் மனசாட்சி  எடுத்துக்கூற, அப்போது அவளின் மூளையும் முன்னர் சேமித்த பதிவுகளை காட்சிகளாக ஓடவிட்டது.

 

அது, ஜாஷாவின் மீது இருக்கும் சந்தேகத்தை நோலன் ரிஷப் மற்றும் நவியிடம் கூறும் காட்சி.

 

ப்ச், அப்போவே நோலன் சொன்னதை நம்பியிருக்கணும். ப்ரெக்னன்ட் லேடின்னு பாவம் பார்த்தேன்ல என்னை சொல்லணும்!என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

 

மீண்டும் காட்சிகள் விரிய, இப்போது நோலன் ரியானை குற்றம்சாட்டும் காட்சி. இப்படி அவளின் மூளை நோலன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரிப்பீட் மோட்டில் பிளே செய்ய, ‘ச்சே, எந்த இடத்துலயும் நோலன் சொன்னதை நான் நம்பல..  இத்தனைக்கும் எல்லா சூழ்நிலைலயும் அவன் சரியா தான் சொல்லிருக்கான்!என்று நவி நினைக்க, அவளின் மூளை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் செயல்படும் உற்சாகத்தினாலோ, நோலனின் கூற்றை தவிர்த்ததிற்கான காரணத்தை அப்போதே அலசி ஆராய முற்பட்டது.

 

அப்படி ஆராய்ந்ததில், அதற்கான விடையாக பளிச்சென்று தெரிந்தது என்னவோ ரிஷபின் முகம் தான்.

 

மூளையின் ஆராய்ச்சி முடிவுகளைக் கண்ட நவி, “ப்ச், எல்லாத்துக்கும் இவன் தான் காரணம்! இவனைப் போய் நம்புன என்னை சொல்லணும்.” என்று முணுமுணுக்க, சரியாக அதே சமயம் அவளின் கைகளில் சுருக்கென்று வலி ஏற்பட்டது.

 

அத்தனை நேரம், தன் மூளை மற்றும் மனதுடன் உரையாடிக் கொண்டிருந்தவள், அவற்றிலிருந்து வெளியே வந்து என்னவென்று பார்க்க, அங்கு ஜாஷா தான் அந்த ஊசியை நவியின் கையில் செலுத்திக் கொண்டிருந்தாள்.

 

அய்யோ யோசிச்சுட்டு இருந்ததுல, இவளை மறந்துட்டேன்!என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், ஜாஷாவின் முயற்சியைத் தடுக்க, “இப்படி ஆடிட்டு இருந்தா, உனக்கு தான் வலிக்கும்.” என்று நவியைப் பார்க்காமலேயே கூறிய ஜாஷா, அவளின் வேலை முழுவதுமாக முடிந்ததும் தான் நவியின் கரத்தை விட்டாள்.

 

நவியோ, எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாத நிலையை எண்ணி மனம் குமைந்தாள்.

 

ஊசியை செலுத்திய இரண்டாம் நொடியிலேயே நவிக்கு தலை வலிப்பது போல இருந்தது. கைகளால் தலையை அழுத்தியவள், அருகிலிருந்த ஜாஷாவை உதவிக்கு அழைப்பதற்காக கண்களை திறக்க, அவளின் பார்வையோ மங்கிப் போயிருந்தது.

 

கண்களை மீண்டும் மீண்டும் சிமிட்டிப் பார்த்தும் எந்த பலனும் இல்லாததால், சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்.

 

அவள் முழுவதுமாக நினைவிழக்காத நிலையில், அந்த அறைக்கு மற்றொரு நபர் உள்ளே நுழைவதை நன்றாகவே உணர முடிந்தது நவியினால்.

 

மயங்கிட்டாளா?” என்று அந்த புதிய நபர் வினவ, “எஸ்… “ என்றாள் ஜாஷா.

 

அதன்பின்பும் அவர்களின் உரையாடல் தொடர, நவி தான் அந்த புதிய நபர் ரிஷப் என்று அறிந்து கொண்டதும், அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே மயக்கத்தின் பிடிக்குள் சென்றாள்.

 

*****

 

நவி மயக்கத்திலிருந்து விழிக்க, அவள் கண்டது தன் கட்டிலருகே அமர்ந்திருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜாஷாவைத் தான். அவளைக் கண்டதும், சட்டென்று எழுந்து கட்டிலின் மறுமுனைக்கு சென்றாள்.

 

ஜாஷாவோ அவளைத் துளைக்கும் பார்வையுடன், “உனக்கு என்ன கேக்கணுமோ இப்போ கேளு. அண்ட் நமக்கு நிறைய நேரம் இல்ல.” என்று அந்த அறையின் மூலையிலிருந்த மறைகாணியையும் (சிசிடிவி கேமரா) பார்த்துக் கொண்டு கூறினாள்.

 

ஜாஷாவின் பார்வையை தொடர்ந்த நவியின் பார்வையும் அந்த மறைகாணியை கண்டுகொண்டது. அதை வைத்தே அந்த இடத்திலுள்ள கண்காணிப்பின் தீவிரத்தை உணர்ந்து கொண்டாள் நவி.

 

மிஸ். கிருஷ்ணவி, உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். ஏதாவது கேக்கணும்னா சீக்கிரமா கேளு.” என்றாள் ஜாஷா அழுத்தமாக.

 

அவளின் குரலில் தென்பட்ட அதிகாரத்தில் எரிச்சலடைந்த நவி, முதலில் எதுவும் கேட்க வேண்டாம் என்று தான் நினைத்தாள். ஆனால், அவள் சிக்கியிருக்கும் சூழ்நிலையை உணர்ந்தவள், கிடைத்திருக்கும் வாய்ப்பை தவறவிட  விரும்பவில்லை.

 

இங்க என்ன ஆராய்ச்சி நடக்குது?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக தன் சந்தேகத்தை வினவினாள் நவி.

 

ஜாஷாவோ இருபுறமும் தலையாட்டியபடி, “ரிஷப் என்னவோ, நீ இந்நேரம் இதுக்கான விடையை கண்டுபிடிச்சுருப்பன்னு சொன்னான். ஆனா, நீ என்கிட்ட கேக்குற.” என்று கேலியாக வினவ, நவிக்கு எரிச்சலின் அளவு அதிகமானது. அதனுடன் ஜாஷாவைப் பற்றிய பிம்பமும் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தது.

 

எனினும், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவள் எதுவும் பேசாமல், ஜாஷாவைப் பார்க்க, “லுக் உன்னோட மத்த சென்டிமெண்ட்ஸுக்கான இடம் இது இல்ல. நீ என்னைப் பார்க்குற பார்வையில என்னைப் பத்தி உன்னோட நினைப்பு என்னன்னு கூட எனக்கு புரியும். அண்ட் டோன்ட் கேர் அபவுட் இட்! ஆனா, நீ இப்படியே நடந்ததையே நினைச்சுட்டு கேர்லெசா இருந்தா, அது எங்களோட திட்டத்தை தான் பாதிக்கும். என்னால அதை அனுமதிக்க முடியாது. புரியுதா?” என்றாள் ஜாஷா.

 

அதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாதவளாக, “உங்களோட திட்டத்துக்கு என்னால பாதிப்பா? அப்போ அப்படி தான்கேர்லேசாஇருப்பேன். ஒருத்தரோட ஒப்புதலே இல்லாம, அநியாயமா அவங்க மேல ஆராய்ச்சி செய்யற உங்களுக்கு நான் உதவி பண்ணனுமா? முடியவே முடியாது.” என்றாள் நவி.

 

லூசா நீ! முதல்ல எங்களோட திட்டம் என்னன்னு தெரியுமா?” என்று பேசிய ஜாஷாவை இடையிட்ட நவி, “என்ன பெரிய திட்டமா இருக்கப் போகுது, அந்த ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்மாதிரி ஏதாவது கேடு விளைவிக்கிற ஆராய்ச்சியா இருக்கப் போகுது.” என்றாள் அலட்சியமாக.

 

முழுசா கேக்குற பழக்கமே இல்லயா உனக்கு. இன்ஃபேக்ட் உன்னைக் காப்பாத்த தான், இவ்ளோ ரிஸ்க் எடுக்குறோம்.” என்று ஜாஷா கூறியதும், பெரிதாக சிரித்த நவி, “இது தான் இந்த டீகேட்டோட மிகப்பெரிய காமெடி! எது என்னைக் காப்பாத்த தான் இந்த திட்டமா?” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருந்த அறையின் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது.

 

கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்த ரிஷப், “இங்க என்ன நடக்குது?” என்றான் கோபமாக.

 

அவனின் பின்னே யாரும் வருகிறார்களா என்று பார்த்த ஜாஷா, “நம்ம சொல்றதை காது கொடுத்து கேக்குறவங்ககிட்ட சொல்லி புரிய வைக்கலாம் ரிஷப். என்ன சொல்றோம்னு கேக்காமலே பேசுறவங்ககிட்ட என்னத்த பேச?” என்று ஜாஷா நவியைப் பற்றி ரிஷபிடம் கூறினாள்.

 

ஹ்ம்ம், அந்தசோ கால்டுதிட்டத்துல இவனும் கண்டிப்பா இருப்பான்.என்று ரிஷபையும் ஒரு பார்வை பார்த்து திரும்பிக் கொண்டாள் நவி.

 

இருவரையும் பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன், “நான் பார்த்துக்குறேன் ஜாஷா. நீ போ.” என்று கூற, ஜாஷாவோ தயங்கினாள்.

 

அவளின் தயக்கத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டவனாக, “நான் சமாளிச்சுக்குறேன். ரியானை மட்டும் கேர்ஃபுல்லா மானிட்டர் பண்ண சொல்லு.” என்று கூறி ஜாஷாவை அனுப்பினான்.

 

ஜாஷா சென்றதும், ஒருமுறை வெளியே பார்த்துவிட்டு வந்த ரிஷப் அறைக்குள் வந்ததும் கதவை அடைத்தான்.

 

நவி, ஜாஷா சொன்ன மாதிரி நாங்க உன்னைக் காப்பாத்த தான் நினைக்குறோம். உன்னை மட்டுமில்ல, இந்த உலகத்தையே காப்பாத்த நினைக்குறோம்.” என்று ரிஷப் கூற, அவனைஅப்படியாஎன்று பார்த்து வைத்தாள் நவி.

 

உஃப் நவி, என்ன சொன்னா நீ ஒத்துக்குவன்னு சொல்லு.” என்று ரிஷப் இறங்கி வர, நவியோ, “லுக் ரிஷப், நீங்க அடிச்சுவிட்ட பொய்யெல்லாம் நம்பிக்கிட்டு இருந்த பழைய நவி இல்ல. அண்ட் நீங்க என்னைக் காப்பாத்தவும் வேணாம்.” என்று முகம் திருப்பினாள்.

 

நவி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! இந்த இடம் நீ நினைக்குறதை விட ஆபத்தானது. உன்னால தனியா இங்கயிருந்து எஸ்கேப் ஆக முடியாது. அதுவும் உன் பிரெண்ட் அவங்ககிட்ட மாட்டிட்டு இருக்க இந்த நேரத்துல, அவனை வச்சே உன்னை கார்னர் பண்ணுவாங்க. சோ நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு! அதுக்கப்பறமும் நான் சொல்றது பொய்யுன்னு நீ நினைச்சா, வில் ஸ்டெப் அவே ஃப்ரம் யூ.” என்றான் ரிஷப்.

 

அவன் குரலிலிருந்த மன்றாடுதல் ஏனோ இத்தனை நேரம் வீம்பாக இருந்த நவியைக் கரைத்தது.

 

அவன் சொல்றதும் ஓகேவா தான இருக்கு. என்னத்த சொல்றான்னு கேட்டுட்டு அப்பறம் முடிவு பண்ணிப்போம்.என்று யோசித்தபடி அமைதியாக இருந்தவளை நோக்கிய ரிஷப், “தேங்க்ஸ் நவி!” என்றான்.

 

நான் இன்னும் ஓகே சொல்லவே இல்லையே.என்று கண்களைச் சுருக்கி அவனைப் பார்க்க, அவனோ கிடைத்த வாய்ப்பை தவறவிடாதவனாக பேச ஆரம்பித்தான்.

 

நவி, முதல்ல உனக்கு இங்க என்ன ரிசர்ச் பண்றாங்கன்னு தெரியணும். நடந்ததை வச்சு நீயா கெஸ் பண்ணியிருப்பன்னு நினைச்சேன். ஆனா, அந்த ஷாக்லயிருந்து வெளிய வர உனக்கு இவ்ளோ நேரம் எடுத்திருக்கு.” என்று நவியைக் காண, அவளோ இதற்கும் அவளிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல எதிரிலிருந்த சுவரை வெறித்திருந்தாள்.

 

பார்வை அவனிடமில்லை என்றாலும், அவன் கூறியதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

ஜாஷா கூட இப்படி தான சொன்னா! என்னால கண்டுபிடிக்க முடிஞ்சுருந்தும் கண்டுபிடிக்கலங்கிற மாதிரி. அப்படி என்ன ரிசர்ச்சா இருக்கும்?என்று யோசித்தவளின் மூளையில் சட்டென்று அந்த வார்த்தை மின்னி மறைந்தது.

 

ப்ரெயின் ஹாக்கிங்என்று நினைத்த மாத்திரத்தில் அதை முணுமுணுக்க, “எஸ், மனிதனோட மூளையைக் கட்டுப்படுத்துற ஆராய்ச்சி தான் இங்க நடக்குது.” என்றான் ரிஷப்.

 

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த நவி ரிஷபை பார்த்து, “மனுஷங்களோட மூளையைக் கட்டுப்படுத்துறது சாத்தியமா?” என்று வினவியவள், பின்னர் அவளே, “அந்த இடத்துல மூளையைக் கட்டுப்படுத்துறாங்கன்னு நீங்க சொன்னது கூட பொய்யின்னு நினைச்சேன். அந்த மாதிரி மெமரிஸை எங்க மூளைக்குள்ள ஃபீட் பண்ணியிருக்கீங்கன்னு தான் இவ்ளோ நேரம் நினைச்சுட்டு இருந்தேன்.” என்று அதிர்ச்சியாக கூறினாள்.

 

முழுசா கட்டுப்படுத்த முடியலைனாலும், கொஞ்ச நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியும். அந்தகொஞ்ச நேரம்ங்கிறதை சரியா யூகிச்சு கட்டுப்படுத்துனா, அவங்களை வச்சு என்ன வேணும்னாலும் செய்யலாம். பிளஸ் ஏதாவது ஒரு விஷயத்து மேல ரொம்ப அடிக்டிவ்வா இருந்தாங்கன்னா, அவங்க மூளையைக் கட்டுப்படுத்துறது சுலபம்.” என்றான் ரிஷப்.

 

மூளையைக் கட்டுப்படுத்துறது தான் உங்க ஆராய்ச்சின்னா, ஏன் அந்த மாதிரி இடத்துக்கு அனுப்பனும்?” என்று நவி வினவினாள்.

 

ஒருத்தரோட மூளையைக் கட்டுப்படுத்தணும்னா, உங்களை மாதிரியே அவரைக் கடத்தி வந்து ப்ராசஸ் பண்ணலாம். ஆனா, இங்க நடக்கப்போறது பெரிய லெவல்ல. அதாவது ஒரு நாட்டுல இருக்க மக்களை கட்டுப்படுத்துறது மாதிரி. சொல்லப்போனா, பையோ வாருக்கு அப்பறம் இது தான் அடுத்தக்கட்டமா அமையப்போகுது.சைக்காலஜிக்கல்’” என்றான் ரிஷப்.

 

வாரா!” என்று திகைத்த நவி, சிறிது நேரத்திலேயே சுயத்தை அடைந்து, “ஆனா, அத்தனை பேரோட மூளையைக் கட்டுப்படுத்துறது எப்படி சாத்தியம்?” என்று தான் சந்தேகத்தை வினவினாள்.

 

மூளையைக் கட்டுப்படுத்த நாங்க ஏற்கனவேநானோ ரோபோட்ஸ்உருவாக்கியிருக்கோம். அது அவங்களோட மூளைக்குள்ள போனதும், அவங்களோட எமோஷன், டெசிஷன், பிஹெவியர்ன்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ணி ஒரு அல்காரித்தம் மாதிரி ஜெனரேட் பண்ணும். வெவ்வேற சூழ்நிலைகள்ல அவங்களோட ஆக்டிவிட்டீஸை கண்காணிச்சா, ஒரு விஷயத்துக்கு அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கெஸ் பண்ண முடியும். சோ இந்த தகவல்களை எல்லாம் மானிட்டர் பண்ணி சூப்பர் சர்வருக்கு அனுப்பி வைக்கும் அந்த நானோ ரோபோட்ஸ். இதை வச்சு அவங்களை எப்படி உபயோகிக்கலாம்னு அந்த சூப்பர் சர்வர் அக்சஸ் உள்ளவங்க தீர்மானிப்பாங்க. சப்போஸ் உன்னோட மூளையைக் கட்டுப்படுத்தணும்னு நினைச்சா, உன்னோட மூளைக்குள்ள இருக்க நானோ ரோபோட்ஸுக்கு தகவல் சொல்லிட்டா, உன் மூளைல இருந்து போன்ற சிக்னலுக்கு பதிலா, அந்த ரோபோட்ஸே வேற சிக்னல் அனுப்பிடும். உதாரணத்துக்கு, சூடான பாத்திரத்தை தொட்டதும், உன் மூளை அதுக்கு ரியாக்ட் பண்ற விதமா, கையை எடுக்க சொல்லும். அந்தகையை எடுங்கிற சிக்னலுக்கு பதிலா, அந்த பாத்திரத்தை தொடர்ந்து பிடிச்சுட்டே இருங்கிற சிக்னல் வந்துச்சுன்னா, எவ்ளோ சுட்டாலும் அந்த பாத்திரத்துலயிருந்து உன் கையை எடுக்க மாட்ட. இங்கபாத்திரத்தை பிடிங்கிற சிக்னலை மாத்தி விடுற வேலையை ரோபோட்ஸ் பார்த்துக்கும்.” என்று விளக்கினான்.

 

இதைக் கேட்டவள், அதிர்ச்சியில் வாய் பிளக்க, “நான் இப்போ சொன்னது சின்ன எக்ஸாம்பில் தான். நம்ம உலகத்தோட சூப்பர் பவர் நாடுகள்கிட்ட எத்தனையோ அணுஆயுதங்கள் இருக்குன்னு உனக்கு தெரியும்னு நினைக்குறேன்.  அதை மேனேஜ் பண்றவரோட மூளையை ஒரே ஒரு நிமிஷம் கட்டுப்படுத்துனா போதும், அடுத்த நிமிஷத்துலயிருந்து எத்தனையோ நாடுகளோட அழிவுகளை பார்க்கலாம்.” என்றான்.

 

ரிஷப் கூறியதை நினைத்துப் பார்த்தவளிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. “இது தப்பு தான ரிஷப். சர்வதேச சட்டத்திட்டங்களுக்குள்ள இது வராது தான.” என்றாள் நவி.

 

இது மத்த கண்டுபிடிப்புகள் மாதிரி வெளியுலகத்துக்கு தெரியப்போறதே இல்ல. இன்ஃபேக்ட் இது ரிலீஸாகப் போறதே வெர்சுவல் ரியாலிட்டி கேம்ஸ் மூலமா தான்.” என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான்.

 

வாட்? வெர்சுவல் ரியாலிட்டி கேம்ஸ் மூலமாவா! அப்போ நமக்கு நடந்ததும் வெர்சுவல் ரியாலிட்டி தானா. அந்த இடமெல்லாம் உண்மை இல்லயா?” என்று நவி வினவ, ரிஷப் அதை ஆமோதித்தான்.

 

இந்த கேம் விளையாட இதுக்கு முன்னாடி இருந்த மாதிரி பெரிய கண்ணாடியெல்லாம் தேவையில்ல. சின்ன லென்ஸ் போதும். இப்படி தான் இதை விளம்பரப்படுத்த போறாங்க!” என்றான்.

 

சோ அந்த லென்ஸ் வழியா தான் நானோ ரோபோட்ஸ் அவங்க மூளைக்குள்ள போகுமா?” என்று நவி சரியாக வினவினாள். மேலும், “எதுக்கு கேமிங் ஆப்ஷனை சூஸ் பண்ணியிருக்காங்க?” என்றாள்.

 

முன்னாடி சொன்ன மாதிரி, ஒருத்தர் ஏதோ ஒண்ணு மேல அடிக்ட்டாகி இருந்தா, அவங்க மூளையை சுலபமா கட்டுப்படுத்தலாம். புகை, போதை இது மாதிரி அடிக்ஷனா இருந்தா, வேற மாதிரி பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு. அதான் கேமிங் அடிக்ஷனை சூஸ் பண்ணியிருக்காங்க. இன்னைக்கு தேதில, உலகத்துல இருக்க முக்கால்வாசி பேரு இது மாதிரி விளையாட்டுகள்ல ஆர்வம் காட்டிட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு அடிக்ட்டா இல்லைனாலும், ஒருமுறை இதை விளையாடினா கூட போதும், அந்த நானோ ரோபோட்ஸ் அதுங்களோட வேலையை செய்ய ஆரம்பிச்சுடும்.” என்றான்.

 

நீங்க சொல்ற மாதிரி, ஆப்போசிட் நாடுகளுக்கு இது எவ்ளோ பெரிய ஆபத்தை விளைவிக்கும்.” என்று கவலையுடன் நவி கூற, “அவங்களும் இதை உருவாக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க நவி. யாருக்கு இந்த முயற்சில முதல்ல வெற்றி கிடைக்குதோ அவங்க தான் இந்த உலகத்தோட அடுத்த சூப்பர் பவர்! இதுக்காகவே ரெண்டு மாகணங்களுக்கும் இடையே பயங்கர போட்டி நடக்குது. இந்த முயற்சில அரசாங்கம் மட்டுமில்ல, பல தீவிரவாத அமைப்புகள், மாஃபியா குழுக்கள், டார்க் வெப்னு ஏகப்பட்டவை போட்டிக்கு இருக்கு. இதைக் கண்டுபிடிச்சு கொடுக்குறவங்களுக்கு அவங்க வாழ்நாள்ல நினைச்சுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பணம், பொருள்னு எல்லாமே தர்றதா டார்க் வெப்ல விளம்பரப்படுத்த கூட செஞ்சுருக்காங்க.” என்றான்.

 

பொதுமக்களோட உயிர் அவ்ளோ சாதாரணமா போயிடுச்சா!” என்று நவி புலம்ப, “உயிரை எடுக்கிறது அவங்க நோக்கம் இல்லன்னு நினைக்குறேன் நவி. இதை வச்சு மத்த நாடுகளையும், மாகாணத்தையும் பயம்காட்டத் தான் நினைப்பாங்க. அணுஆயுதங்கள் இருக்குறதால மட்டும், அடுத்த உலகப்போர் நடந்துச்சா என்ன? இதுவும் அதே மாதிரி தான். ‘நீ எனக்கு எதிரா ஏதாவது தப்பு செஞ்சா, என்கிட்ட இருக்க ஆயுதத்தை நான் உபயோகிப்பேன்னு காட்டிக்கிறதுக்கு தான் பார்ப்பாங்க.  அவங்களுக்கே தெரியும், இப்போ இதை ஆரம்பிச்சு வச்சுட்டா, அடுத்தடுத்து பழி வாங்கன்னு எல்லா நாடுகளும் கிளம்பும்.” என்றான்.

 

அடுத்த சில நொடிகள் அமைதியில் கழிய, நவிக்கு அப்போது தான் ரிஷப் கூறிய, ‘உன்னைக் காப்பாத்த தான் நினைக்குறோம்என்ற வரி நினைவிற்கு வந்தது. முன்னர் என்றால், ரிஷபின் மேல் உண்டான நம்பிக்கையற்ற நிலையினால் அதை தவிர்த்த நவிக்கு, இப்போது ரிஷபிடம் பேசிய பின்னர், இதற்கான காரணத்தையும் அறிய வேண்டும் என்று நினைத்தாள்.

 

ரிஷப், ‘என்னைக் காப்பாத்தன்னு சொன்னீங்களேஅது…” என்று நவி இழுக்க, “ஆமா நவி உன்னைக் காப்பாத்த தான் நாங்க எல்லாரும் கஷ்டப்பட்டோம். நீ மறந்துருக்க மாட்டேன்னு நினைக்குறேன். அந்த இடத்துல, ஜான், நோலன், நந்துன்னு எல்லாரோட மூளையையும் கட்டுப்படுத்துனாங்க. ஆனா, அவங்க யாராலயும் அங்கயிருந்து தப்பிக்க முடியல. இன்ஃபேக்ட், அந்த இடத்துல இருந்து இதுவரைக்கும் யாரும் வெளிய வந்தது இல்ல.. உன்னைத்தவிர! நீயும் அந்த இடத்துலயே இறந்திருந்தா, இங்க வந்ததும் உன்னைக் கொன்றுப்பாங்க.” என்று ரிஷப் கூற, நவி குழம்பினாள்.

 

என்னை எதுக்கு கொல்லணும்?” என்று நவி வினவ, “ஏன்னா, நாங்க உனக்கு உதவி செஞ்சுருக்கலைன்னா, நீ அந்த இடத்துல இருந்து உயிரோட வெளிய வந்துருக்க மாட்ட. சோ, அவங்களை பொறுத்தவரை ரிசர்ச் வெற்றிகரமா முடிஞ்சுருக்கும். அதுக்கு மேல நீ அவங்களுக்கு தேவைப்பட்டுருக்கவும் மாட்ட!” என்று விளக்கினான் ரிஷப்.

 

இந்த காரணத்தை முதலில் கூறியிருந்தால், எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பாளோ. ஆனால், இப்போது ரிஷப் கூறியவற்றை எல்லாம் கேட்ட பிறகு, அவளின் மனது அடித்துக் கொண்டது.

 

இதை யோசிக்கும்போதே மீண்டும் அந்த சந்தேகம் ஏற்பட்டது. “ஏன் என்னை மட்டும் காப்பாத்த நினைச்சீங்க ரிஷப்?” என்று நவி கேட்கும்போதே அந்த அறையிலுள்ள விளக்குகள் அணைந்து எரிந்தன.

 

அதைப் பார்த்ததும், “யாரோ இங்க வராங்க நவி. நீ மயக்கத்துல இருக்க மாதிரியே இரு. கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் மயக்கத்துல இருந்து முழிக்கிற மாதிரி எழுந்துக்கோ.” என்று கூறியவன் அங்கிருந்த மறைகாணியைக் காட்டினான்.

 

நவியும் புரிந்து கொண்டதாக தலையசைத்து கட்டிலில் படுக்க, “நவி, என்னையும் ஜாஷாவையும் தவிர யாருக்கிட்டயும் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணாத. பி கேர்ஃபுல்!” என்று ரிஷப் எச்சரிக்க, நவியும் சரியென்றாள்.

 

அடுத்த நொடி, அவளின் அறை கதவு தட்டப்பட, நவி கண்களை மூடிக் கொண்டாள்.

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)