9 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

9 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 9

 

அந்த ராட்சத டிராகன் வெடித்து சிதறியதால் உண்டான புகை மூட்டத்தைக் கடந்து முன்பு நின்றிருந்த இடத்திற்கு வந்தவர்களை வரவேற்றது அந்த டிராகனின் சிதறிய பகுதிகள் தான். அதற்கு நடுவே தெரிந்த மனித கரத்தை கண்ட நவி அதை ரியானிடம் காட்ட, அவனுமே அதிர்ந்து தான் போனான்.

 

இருவருமே தாங்கள் மனதில் நினைப்பது உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்திலேயே அந்த கரத்தை நோக்கி நடந்தனர்.

 

அங்கு பெரிய இரும்பு துண்டிற்கு கீழ் அகப்பட்டிருந்தது அந்த கரம். ரியானும்  நவியும் மெல்ல அந்த  இரும்பு துண்டை நீக்க முயற்சித்தனர். பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அதை நீக்குவது கடினமானதாகவே இருந்தது. தங்களின் ஒட்டுமொத்த பலத்தையும் கொண்டு அதை ஒரே மூச்சில் தள்ளினர்.

 

அந்த இரும்பு துண்டை விலக்கியதும், இவர்கள் கண்டது, சற்று பள்ளமான இடத்தில், எப்போது வேண்டுமானாலும் மயக்க நிலைக்கு செல்ல கூடிய வகையில் படுத்திருந்த ரிஷபை தான்.

 

அந்த இடம் பள்ளமாக இருந்ததால், அவனின் உடல் அதற்குள் அமிழ்ந்து விட, அந்த இரும்பு துண்டால் அவனின் உடலில் பெரிதான காயங்கள் எதுவும் இல்லை. அவனின் கரம் கூட, நிலத்திற்கும் அந்த இரும்பு துண்டிற்கும் இடையில் வெளிவந்திருந்தது.

 

நவி, அவனை முழுதாக பார்வையாலேயே ஆராய்ந்தாள். சிறு சிறு காயங்களுடனும், இத்தனை நேரம் ஓய்வில்லாமல் உழைத்ததால் உண்டான மயக்கத்துடனும் காணப்பட்டான்.

 

அவனிற்கு ஆபத்தில்லை என்று உணர்ந்ததும் தான் நவியால் இயல்பாக இருக்க முடிந்தது. அவள் ரியானைப் பார்க்க, அவனும் அவளைப் போலவே அவனின் உடல்நிலையில் கவலை கொண்டு ஆராய்வது தெரிந்தது.

 

பின் சுயத்தை அடைந்த ரியான் நவியிடம், “இங்க இருக்குறது சேஃப் இல்ல நவி. இன்னும் அதே மாதிரி டிராகன்ஸ் இருக்கான்னு நமக்கு தெரியலஅண்ட் ரிஷப் கண்டிஷனும் நம்ம பார்க்கணும். சோ, ரிஷபை கூட்டிட்டு மத்தவங்க இருக்க இடத்துக்கு போவோம். அப்பறம் என்ன பண்றதுன்னு டிசைட் பண்ணுவோம்.” என்றான்.

 

நவிக்கும் அவன் சொல்வது சரியென்று பட்டதால், அதை ஆமோதித்தாள். இவர்கள் வந்ததும், தனக்கு இனி ஆபத்தில்லை என்று நினைத்தானோ, ரிஷப் மயக்கத்திற்கு சென்றுவிட்டான்.

 

இப்போது மற்ற இருவருக்கும் உண்டான சிக்கல், ரிஷபை எப்படி கூட்டிச் செல்வது என்பது தான்!

 

ரியான், ரொம்ப டிலே பண்ண வேண்டாம். ஆளுக்கு ஒரு பக்கமா தோள்ல தாங்கிட்டு போயிடுவோம்.” என்று நவி கூற, ரியானும் அதை செயல்படுத்த துவங்கினான். ஆனால், கூறியது போல், ரிஷபை தோளில் தாங்கிச் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை.

 

வழியில் ஆங்காங்கே நின்று சற்று இளைப்பாறிவிட்டே பயணத்தை தொடர்ந்தனர். இவ்வாறு தவணை முறையில் அந்த வெற்று நிலத்தைக் கடந்து ஒருவழியாக மற்றவர்கள் இருந்த பகுதியை அடைந்தனர்.

 

அங்கு இவர்களுக்காக காத்திருந்த மற்றவர்களோ மனதில் பயத்துடனும் குழப்பத்துடனும் இருந்தனர். இவர்கள் மூவரின் வரிவடிவத்தைக் கண்ட நொடி தான் சற்று நிம்மதியடைந்தனர்.

 

மூவரும் தொலைவில் வரும்போதே கண்டுவிட்டாலும், அப்போது ரிஷபின் நிலை தெரியாததால், அவர்கள் வரும்வரை காத்திருக்க, அவர்களின் நிதானமில்லாத நடையைக் கண்டு நந்து, “ஏன் இவ்ளோ ஸ்லோவா தள்ளாடிட்டே வராங்க?” என்று வினவினான்.

 

நோலனும் குழப்பத்துடன் முன்னே செல்ல, நந்துவும் அவனைத் தொடர்ந்தான். அருகில் சென்றபோது தான், நவியும் ரியானும் ரிஷபை தாங்க முடியாமல் தோளில் தாங்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

 

இருவரின் முகத்திலிருந்த சோர்வையும் கண்ட நோலன் வேகமாக சென்று ரிஷபை ஒருபுறம் பிடிக்க, நந்துவும் அவனிற்கு உதவியாக இருந்தான். உதவிக்கு ஆள் வந்ததும், நவியும் ரியானும் அங்கேயே மடிந்து அமர்ந்து ஆசுவாசப்பட்டனர்.

 

மூவரின் காயங்களும் சோர்வும், அவர்கள் எத்தகைய சண்டையை முடித்துக் கொண்டு வந்திருக்கின்றனர் என்பதை கட்டியம் கூறியது. சற்று நேரம் அவர்களை அப்படியே விட்ட நந்து , “ஜஸ்ட் கொஞ்ச தூரம் தான். எழுந்து நடங்க, உங்க காயத்துக்கு எல்லாம் மருந்து போடணும்.” என்று கூறிக் கொண்டிருக்க, அவர்களும் மெதுவாக எழுந்தனர்.

 

அந்தஜஸ்ட் கொஞ்சதூரத்திற்கே, நோலனும் நந்துவும் சோர்வுற, ‘எப்படி இத்தனை தொலைவு ரிஷபை கூட்டி வந்தார்கள் இவர்கள்!என்று ஆச்சரியமாக தான் இருந்தது இருவருக்கும்.

 

மூவரின் நிலை கண்ட மற்றவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்க, இத்தனை நேரம் ஒதுங்கியிருந்த சீன தம்பதியரும் கூட அவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர்.

 

நோலன் முதலில் மயங்கியிருந்த ரிஷபிற்கு சிகிச்சை அளித்தான். பின்னர் நவி மற்றும் ரியானிடம் வர, இருவரும் ரிஷபைப் பற்றியே வினவினர்.

 

சின்ன காயம் தான், அண்ட் மயக்கம் கூட ரெஸ்ட் இல்லாம வேலை பார்த்துட்டே இருந்ததால தான்.  லெட் ஹிம் டேக் ரெஸ்ட்!” என்ற நோலன், ரியானின் காயங்களில் களிம்பை பூச, ஜாஷா நவிக்கு பூசினாள்.  அப்போது நந்து அங்கு நடந்ததைப் பற்றி வினவ, நவியும் கூற ஆரம்பித்தாள்.

 

நல்ல வேளை ரியான் அந்த ட்ரோன்னை கட்டுப்படுத்துனீங்க. இல்லைன்னா நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு.” என்று நந்து ரியானைப் பாராட்டினான்.

 

நான் மட்டும் தனியா இதை பண்ணியிருக்க முடியாது நந்து. எனக்கு கிடைச்ச பார்ட்னர்ஸும் அந்த டிராகனை நல்லா திசை திருப்புனாங்க. அதுவும் அந்த ட்ரோன்னை சரியான நேரத்துல பிளாஸ்ட் பண்ணது ரிஷபோட உதவியால தான். ரிஷப் மட்டும் அந்த இடத்துல இருந்து டிராகனை கட்டுப்படுத்தலைன்னா கண்டிப்பா நம்ம பிளான் சக்ஸஸ் ஆகியிருக்காது. இந்த கிரெடிட் மூணு பேருக்குமே சேரணும்.” என்றான் ரியான்.

 

அவனை சிறு புன்னகையுடன் பார்த்தாள் நவி. நவியைப் பாராட்டுவது பொறுக்காத டோவினாவோ, “என்ன இருந்தாலும், ரிஷபோட பார்ட் தான் இதுல அதிகம்!” என்று ஆரம்பிக்க, அருகிலிருந்த நந்துவோ, “தெரியாம உங்களை பாராட்டிட்டேன் பா!” என்று அலுத்துக் கொள்வதைப் போல கூறியவன், டோவினாவின் பக்கம் திரும்பி, “கொசுத்தொல்லை தாங்கல!” என்றான்.

 

அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, டோவினா நந்துவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

இவர்களுக்கு ஓய்வு தேவை என்பதால், அந்த இரவை அதே இடத்திலேயே கழிக்க திட்டமிட்டனர் அனைவரும். அதனால், அங்கிருந்த மரங்களில் ஆளுக்கொரு மரத்தில் சாய்ந்து ஓய்வெடுத்தனர்.

 

****

 

நடுநிசியில், நவிக்கு யாரோ ஏதோ பேசுவது போல சத்தம் கேட்க, சட்டென்று விழித்துக் கொண்டாள். அங்கு காற்றின் மெல்லிய ஒலியைத் தவிர வேறெந்த  சத்தமும் கேட்கவில்லை. இவளைத் தவிர அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள், எங்கிருந்து சத்தம் வந்திருக்கும் என்று குழம்பினாள்.

 

அப்போது மெல்லிய முனகல் சத்தம் அவளின் இடப்பக்கத்திலிருந்து வர, வேகமாக திரும்பினாள். ரிஷப் தான் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டவள், வலியில் ரிஷப் தான் முனகியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மெல்ல எழுந்து அவனருகே சென்றாள்.

 

அவள் கணித்ததைப் போலவே வலியில் தான் முனகிக் கொண்டிருந்தான். அவன் என்ன முணுமுணுக்கிறான் என்பது சரிவர புரியவில்லை என்றாலும், அவன் கூறியதில் அவளிற்கு புரிந்த தண்ணீரை எடுத்து வந்து அவனைப் பருகச் செய்தாள்.

 

அதன்பின்பு, அவன் உறக்கத்திற்கு செல்ல நவியும் தன் இடம் நோக்கி திரும்பினாள். அப்போது மீண்டும் அவனின் குரல் ஒலித்தது. இம்முறை அவன் கூறுவது நவிக்கு தெளிவாக கேட்டது.

 

நான்நான் தப்புபண்ணிட்டேன்என்னோட சுயநலத்தால தான் இதுநடந்துருக்குதாங்க முடியல…” என்று ரிஷப் உளற, நவியோ குழம்பிப் போனாள்.

 

என்ன தப்பு? என்ன சுயநலம்?என்று அவள் சிந்திக்க, சட்டென்று அவளிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, கண்களை இறுக்கி மூடி சமாளித்தாள். சில நொடிகள் ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு சமன்படுத்திக் கொண்டவள், கண்களை திறந்து பார்க்கும்போது அவளின் இடத்திலேயே இருந்தாள். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அப்போது தான் விழிப்பது போல இருந்தாள்.

 

குழப்பத்திற்கு மேல் குழப்பமாக இருக்க, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் நவி.

 

எல்லாமே கனவா! எதுக்கு இப்படி ஒரு கனவு வரணும்? அதுல கூட ரிஷப் ஏதோ சொன்னானே. நான் கூட ஷாக்கானேனே!என்று யோசித்தவளால் எவ்வளவு முயற்சித்தும் ரிஷப் கூறியதை மீண்டும் நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை.

 

அவளின் யோசனையைத் தடுப்பது போல, மீண்டும் முனகல் சத்தம் கேட்டது, இம்முறை வலபுறமிருந்து!

 

அங்கு நவியின் கனவில் வந்தது போலவே நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. மாற்றம் என்னவென்றால் இப்போது முணுமுணுப்பது ரியான்.

 

நவியோ நிஜம் எது கனவு எது என்று பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு குழப்பத்தில் தவித்தாள். முதலில் ரியானிடம் செல்ல வேண்டாம் என்று தான் நினைத்தாள். இதுவும் கனவாக இருக்குமோ என்ற எண்ணம் அவளுள் எழுந்ததே அதற்கு காரணம். இருப்பினும், அவன் முனகுவதைப் பொறுக்க முடியாமல், அருகே செல்ல, ரியானும் கனவில் வந்த ரிஷபை போலவே தண்ணீர் கேட்க, நவியும் கனவில் நடந்ததைப் போலவே ரியானை தண்ணீர் பருகச் செய்தாள்.

 

அப்போது அங்கு வந்த நோலன், “தூங்கலையா நவி?” என்று வினவ, “அப்போ இது என் கனவில்லையா!” என்று மனதிற்குள் நினைப்பதை விட்டு வெளியே கூறிவிட்டாள்.

 

என்ன ஆச்சு நவி? ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெசா இருக்க?” என்று மருத்துவனாக நோலன் வினவ, தன் கனவைக் கூறி அவனையும் குழப்ப வேண்டாம் என்று எண்ணிய நவி, “நத்திங், கொஞ்சம் டையர்டா இருக்கு!” என்று சமாளித்தான்.

 

ஓகே நீ போய் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்குறேன்.” என்று நோலன் கூறவும், அவனிற்கு தலையசைப்பை பதிலாக தந்தவள், அங்கிருந்து சென்றாள். குழப்பத்துடன் செல்லும் அவளையே வெறித்தான் நோலன்.

 

*****

 

அடுத்த நாள், அவர்களுக்கு சூரிய உதயத்தைக் காணும் பாக்கியம் கிட்டியது. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை நாம் சாதாரணமாக கடந்திருப்போம். ஆனால், அந்நிகழ்வை என்றோ ஒரு நாள் காண முடியாவிட்டாலும் அதற்காக வருந்துவோம்.

 

இதே மனநிலையில் தான் அங்கிருந்தவர்கள் இருந்தனர். சூரிய உதயம் என்பது, அவர்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் மிக சாதாரண நிகழ்வு தான். ஆனால், எப்போதிலிருந்து இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டனரோ, அப்போதிலிருந்தே அந்நிகழ்வை காண்பதற்கு உயிரோடு இருப்போமா என்பதே அங்கிருப்பவர்களின் பயமாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

 

அவர்கள் காண்பதற்கு தவித்த சூரிய உதயம், அவர்களுக்கு புத்துணர்ச்சியூட்ட, காயமடைந்தவர்கள் கூட தங்களுக்கு கிடைத்த ஓய்வின் காரணமாக தெளிவாக இருந்தனர்.

 

குட் மார்னிங் நவி!” என்று அருகில் வந்த நந்துவைப் பார்த்தவள் அவனின் உற்சாகத்தை கண்டு இனிதாக அதிர்ந்தாள். எப்போதும் எழுவதற்கு சோம்பும் நந்துவா இவ்வளவு உற்சாகத்துடன் தன்னை எழுப்புகிறான் என்பதே அவளின் அதிர்ச்சிக்கான காரணம்.

 

நொடிகள் கடந்தும் அவளிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராததால், நந்து நவியின் முன்னே கையசைத்து, “ஹே அப்படி ஸ்டான்னாகுற அளவுக்கு  என்ன யோசனை? நல்லா ரெஸ்ட் எடுத்தியா?” என்று வினவினான்.

 

ரெஸ்ட்என்ற வார்த்தையைக் கேட்டதும், “ஹ்ம்ம், இப்போ தான் படுத்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள விடிஞ்சுருச்சு!” என்று முணுமுணுத்தாள்.

 

ஹாஹா, நவியா இது! நீ என்ன என்னை மாதிரி மாறிட்ட?” என்று கேலி செய்தான் நந்து.

 

நந்துவிடம் மேலும் பேசிக் கொண்டிருந்தவளின் கவனம், ரியானிடம் பேசிக் கொண்டிருந்த ரிஷபின் பக்கம் சென்றது. அவனின் முகம் நேற்றை விட தெளிவாக இருந்ததைக் கண்டவளிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

 

ஏனெனில், இங்கு இருக்கும் சூழலை ஓரளவிற்கு அறிந்தவன் ரிஷபே. அவன் அடிபட்டு படுத்திருந்தது, நவிக்கு சிறிதளவில் பயத்தை தோற்றுவித்தது என்னவோ உண்மை தான். முன்தின கனவும் அதனால் உண்டான குழப்பமும் அவளின் பயத்தின் முக்கிய காரணிகளாக இருந்தன.

 

நவி ரிஷபிடம் சென்று அவனின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க, “இப்போ ஓகே தான் நவி.” என்று சாதாரணமாக பதிலளித்தான் ரிஷப்.

 

நவி தனக்கு வந்த கனவைப் பற்றி கூறலாம் என்று எண்ணிய வேளையில் ரியான் அங்கு வந்தான்.

 

இப்போ நாம எந்த வழியா போகப் போறோம், ப்ரோ?” என்று ரிஷபிடம் ரியான் வினவ, ரியானிடமிருந்து டேப்பை வாங்கிய ரிஷப், அங்கிருந்த இரு பாதைகளை சுட்டிக் காட்டினான்.

 

இதோ இந்த ஏரி பாதையில தான் நாங்க போனோம். மார்பு வரை இருக்க தண்ணியில நடந்து தான் போகணும். ஏரிக்குள்ள சில விஷ பூச்சிக்களும் இருக்கலாம். ரொம்ப பாய்சனஸ் இல்ல. ஆனா, இப்போ நம்மில் சிலருக்கு இருக்க காயத்துனால தண்ணியில நடந்து போறது அவ்ளோ சுலபமில்ல.” என்றான்.

 

ரியானும் நவியும் அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்திருக்க, “நம்ம இப்போ டிராகனை அழிக்க போன வழியிலேயே போறது தான் சரின்னு படுது.” என்றான் ரிஷப்.

 

அந்த வழியில இருக்க ஆபத்து தான் நமக்கு தெரியாதே.” என்று நவி கூற, “மேபி, இந்த டிராகனை ஆபத்துன்னு நினைச்சு தான் போன முறை ஏரி வழியா கூட்டிட்டு போனாங்கன்னு நினைக்கிறேன். என்னோட அஸ்ஸம்ப்ஷன், அந்த வெற்று நில வழியில வேற எந்த ஆபத்தும் இருக்க சான்ஸ் இல்ல.” என்றான்.

 

ரியானும், “ஓகே ப்ரோ, இங்கயே சாப்பிட்டுட்டு கிளம்ப ஆரம்பிக்கலாம்.” என்று கூறி சென்றுவிட, நவிக்கு மனதில் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று தோன்றியது.

 

என்னாச்சு நவி? என்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என்று அவளின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டு வினவினான் ரிஷப்.

 

ரிஷப் வினவியதும் நவிக்கு தன் கனவு ஞாபகம் வர, அதைப் பற்றி சொல்ல முயற்சிக்கும்போது அங்கு வந்தான் நோலன். அவனின் வரவால், மீண்டும் அதை ஒத்தி வைத்தாள் நவி.

 

சாரி கைஸ், ஏதாவது சீரியஸா பேசிட்டு இருந்தீங்களா? நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் நோலன்.

 

நோ நோ, சொல்லுங்க நோலன் என்ன விஷயம்?” என்றான் ரிஷப். இப்படி ரிஷப் கேட்டதும் ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தான் நோலன்.

 

நான் இப்போ சொல்லபோறது எனக்கே சரியா தெரியாத விஷயம். ஒரு சந்தேகத்துல தான் சொல்றேன்.” என்றவாறே ஆரம்பித்தான். முதலில் சற்று அலட்சியமாக இருந்த நவி கூட இப்போது நோலனின் பேச்சில் கவனமானாள்.

 

நான் இப்போ சொல்லப் போறது ஜாஷாவைப் பத்தி தான். எனக்கென்னமோ அவங்க ஃபேக்கா இருக்காங்கன்னு தோணுது.” என்று நோலன் கூற, நவியும் ரிஷபும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

ஏன் இப்படி சொல்றீங்க?” என்று நவி வினவினாள். அவள் மனமோ அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று அடித்துக் கூறியது. ஏனெனில் இத்தனை நாட்கள் தனக்கு துணையாக இருந்த பெண்ணல்லவா!

 

முன்னாடியே அவங்க ஆக்டிவிட்டீஸ் சிலது நோட்டீஸ் பண்ணியிருக்கேன். அப்போ அதை பெருசா எடுத்துக்கல. ஆனா, நேத்து நீங்க அந்த டிராகன் இருக்க இடத்துக்கு போயிருந்தபோ, இங்க ஜாஷாக்கும் டோவினாக்கும் சண்டை ஏற்பட்டுச்சு. யாரை சண்டைக்கு இழுக்கலாம்னு இருக்குறது தான் டோவினாவோட பிஹேவியர்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, நேத்து டோவினாவை சண்டைக்கு இழுத்தது என்னவோ ஜாஷா தான். வேற யாரும் இதைப் பார்க்கல. நான் பார்த்தது கூட அவங்களுக்கு தெரியுமான்னு தெரியல. அவங்களோட அந்த பிஹேவியர் பார்த்து எனக்கு செம ஷாக்! அதான் அவங்க ஃபேக்கா இருப்பாங்கலோன்னு தோணுது.” என்றான் நோலன்.

 

ரிஷப் மற்றும் நவிக்கு தான் முன்தினம் நடந்த சண்டை பற்றியே தெரியாதே, அதனால் என்ன சொல்வது என்று மௌனமாக இருந்தனர்.

 

நவிக்கு நோலன் சொல்வதை நம்ப முடியவில்லை. “அந்த டோவினா அவங்களை இன்சல்ட் பண்றதை எவ்ளோ தான் பொறுத்துக்குறதுன்னு கோபமா பேசியிருப்பாங்க.” என்று கூறினாள்.

 

நோலனோஇல்லைஎன்று தலையசைத்து, “நேத்து டோவினா அப்படி எதுவும் நடந்துகிட்ட மாதிரி தெரியல. அண்ட் நான் ஜாஷா மேல வீண்பழி போடுறேன்னு நினைக்க வேண்டாம். ஜஸ்ட் டவுட். நீங்க சொல்ற மாதிரி கூட இருக்கலாம். ஆனா, நம்ம சிக்கியிருக்க சூழ்நிலைல எதையும் அப்படியே நம்பக்கூடாதுன்னு ரிஷப் சொன்னதுனால இதை உங்ககிட்ட சொல்றேன்.” என்றான்.

 

நோலன் சொல்றதும் சரி தான் நவி. யாரையும் அவ்ளோ சீக்கிரம் நம்பிடக் கூடாது. மேபி அவங்களுக்கு தெரியாம கூட, டோவினா கிட்ட சண்டைக்கு போயிருக்கலாம். நான் முதல் நாள் சொன்ன மாதிரி இந்த இடம் நம்ம மைண்டை கூட கண்ட்ரோல் பண்ணலாம்.” என்று நவியிடம் கூறியவன், நோலனிடம் திரும்பி, “இந்த விஷயத்தை எங்க கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு தேங்க்ஸ் நோலன். இனி ஜாஷாவை கவனிக்கலாம்.” என்றான்.

 

*****

 

அந்த இடத்திலேயே தங்களின் வயிற்றுபசியைப் போக்கிக் கொண்டவர்கள், தங்களின் பொருட்களை தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

ப்ரோ, நம்மகிட்ட வெப்பன்ஸ் குறைவா இருக்கே?” என்று ரியான் வினவ, “நம்ம போற இடத்துல இருக்கும் ரியான். அது பிரச்சனை இல்ல.” என்றான் ரிஷப்.

 

செல்லும் வழியெல்லாம், நவிக்கு நோலன் கூறியதே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது. அவளால் ஜாஷாவை அப்படி யோசிக்க முடியவில்லை. அதற்கான காரணமும் அவளிற்கு விளங்கவில்லை.  ஒருமுறை பேச்சுவாக்கில், ஜாஷா தன்னை அனாதை என்று கூறியதால் உண்டான கரிசனையாக கூட இருக்கலாம்.

 

ஹே நவி, என்ன எப்போ பார்த்தாலும் எதையோ யோசிச்சுட்டே இருக்க?” என்றவாறே அவளருகில் வந்தான் நந்து.

 

அது ஒன்னுமில்ல நந்து.” என்றவள், முன்தின சண்டை பற்றி நந்துவிடம் வினவினாள்.

 

அது எப்பவும் போல தான் நவி. அந்த வெள்ளை காராச்சேவு இருக்க இடத்துல சண்டைக்கா பஞ்சம்!” என்று அலுத்துக் கொண்டான்.

 

என்னாச்சு?” என்று மீண்டும் அதைப் பற்றியே வினவ, “எனக்கு சரியா தெரியல நவி. நோலன் தான் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்துனாரு. ஆமா, நீ ஏன் அந்த சண்டையைப் பத்தியே கேட்டுட்டு இருக்க?” என்று வினவினான்.

 

ஜாஷாவைப் பற்றி தவறாக கூற விரும்பாததால், “இல்ல, நோலன் தான் ஏதோ சண்டைன்னு சொன்னாரு. அதான் சும்மா டைம் பாஸுக்கு கேட்கலாம்னு.” என்று ஏதோ கூறி சமாளித்தாள் நவி.

 

இங்க வந்து எதையெல்லாம் கத்துக்கிட்டோமோ தெரியல. ஆனா, நல்லா காசிப் பேச கத்துக்கிட்டோம்!’ என்றான் நந்து.

 

ஜாஷா ஃபேக்கா இருக்காங்க!என்ற நோலனின் குரலும், ‘யாரையும் நம்பிடக் கூடாது.என்ற ரிஷபின் குரலும் போட்டிப்போடுக் கொண்டு அவளின் மூளைக்குள் வலம்வர, ‘ஏன் நோலன் பொய் சொல்லியிருக்கக் கூடாது?என்று சிந்திக்க ஆரம்பித்தாள் நவி.

 

நந்து கூறியது போலவே, ‘காசிப்பாக வெளியே பகிராவிட்டாலும், ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றி சிந்தித்தபடியே அந்த வெற்று நிலத்தைக் கடந்தனர்.

 

அந்த வெற்று நிலத்தின் எல்லையில் நீண்டதொரு பாலைவனம் துவங்கியது. அதைக் கண்டவர்களுக்கு அதிர்ச்சி தான்.

 

இப்படி ஒரு டெசர்ட் இருக்குன்னு மேப்ல இருக்கா?” என்று நவி ரிஷபிடம் வினவ, அவனோஇல்லைஎன்று தலையசைத்தான்.

 

ஒரு பெருமூச்சுடன் அந்த பாலைவனத்தில் காலை வைத்தனர் அனைவரும். ஏற்கனவே அந்த வெற்று நிலத்தை கடக்கும்போதே அவர்களுள் பலர் சோர்வடைந்தனர். அந்த வெற்று நிலமே பாலைவனம் போல தான் காட்சியளித்தது.

 

இப்போது  உண்மையாகவே பாலைவனத்தில், அந்த சூடான மண்ணில் கால் புதைய புதைய நடப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. ஓய்வுக்காக கூட எங்கும் அமர முடியாத நிலை. காலையில் தேவனாக தோன்றிய சூரியன், இப்போது சுட்டெரிக்கும் அரக்கனாக தோன்றினான்!

 

இதில் ஒரே ஆறுதலாக அமைந்தது, அவர்களின் பாதையில் ட்ரோன், டிராகன் போன்ற எவ்வித தொல்லைகளும் சவால்களும் இல்லாதது தான்.

 

வாடி வதங்கி இளைப்பாற சிறிது இடம் தேடும் கண்களோடு சுற்றிலும் தேடியவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது தொலைவில் தெரிந்த கட்டிடம்.

 

அதைக் கண்டவர்களுக்கு புதிதாக உற்சாகம் பிறக்க, சற்று வேகமாக அந்த கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

 

ரிஷப், தன்னிடம் இருந்த டேப்பில் தாங்கள் செல்வது சரியான பாதையா என்று அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.

 

அப்போது அவர்களின் உற்சாகத்தை தகர்ப்பது போல கேட்டது ஜாஷாவின் சத்தம். நவி வேகமாக திரும்பி பார்க்க, அங்கு புதை மணலிற்குள் சிக்கியிருந்தாள் ஜாஷா!

 

மணலின் சூடு தாங்க முடியாமல் அவள் அசைய, அதுவே அவளை மேலும் உள்ளே இழுத்தது. முதலில் அந்த காட்சியைக் கண்ட அனைவரும் திகைக்க, அவளின் அலறலில் சுயத்தை அடைந்தனர்.

 

ஜாஷா, அசையாம இருங்க. நீங்க அசைஞ்சா இன்னும் உள்ள இழுக்கும்.” என்று கூறிய ரிஷபிற்கும் தெரிந்து தான் இருந்தது, சூடான மணல் அவளை அசைய செய்யாமல் இருக்காது என்று

 

இதற்குள்ளாகவே ஜாஷா முக்கால்வாசி உள்ளே சென்றுவிட்டாள். உடல்வலியும், மனவலியும் சேர்ந்து அவளைத் தாக்க, பயத்துடன் கதறினாள் ஜாஷா.

 

விரைவாக செயல்பட்டு அவளைக் காக்க வேண்டும் என்று எண்ணிய ரிஷப், இன்னமும் அதிர்ச்சியில் இருந்த மற்றவர்களிடம், “ஜாஷாவை சீக்கிரமா காப்பாத்தணும். கயிறு மாதிரி ஏதாவது இருக்கான்னு பாருங்க. குயிக்!” என்றதும் சூழ்நிலை உணர்ந்து அவர்களும் தேடினர்.

 

நந்து தன்னிடமிருந்த பையில் இடந்த கயிறை ரிஷபிடம் தந்தான். அது மிகவும் சிறிதாக இருந்தது. எனினும், இனி தாமதிக்க வேண்டாம் என்று எண்ணிய ரிஷப் அதையே உபயோகிக்க எண்ணினான்.

 

இவர்களின் தேடுதல் வேட்டை முடியும் நேரத்தில் , ஜாஷாவின் முகமும் கையும்  தவிர அனைத்து பாகங்களும் உள்ளே சென்றுவிட, வேகமாக அந்த கயிறை அவளை நோக்கி வீசினான் ரிஷப்.

 

இறப்பை நோக்கி சென்று கொண்டிருந்தவளிற்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக அந்த கயிற்றை இறுக்கப் பற்றிக் கொண்டாள் ஜாஷா. ரிஷப், ஜாஷாவை இழுக்க முயற்சிக்க, அது கடினமானதாகவே இருந்தது.

 

கயிற்றின் நீளமும் சிறிதாக இருந்ததால், மற்றவரும் உதவிக்கு வர முடியாத சூழலில் இருந்தனர். மெல்ல மெல்ல அவளை இழுக்க முயற்சிக்கும் அந்த வேளையில், சட்டென்று கோடாரியால் அந்த கயிறு வெட்டப்பட, அதன் விளைவாக மொத்தமாக உள்ளே சென்றாள் ஜாஷா.

 

அதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியாக நின்றிருக்க, மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த கோடாரியைப் பிடித்திருந்தவன், அதை வைத்தே தன்னையும் வெட்டி அதே இடத்தில் உயிரற்ற சடலமாக விழுந்தான்!

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)