Barkkavi's Stories Skip to main content

Posts

Showing posts from December, 2021
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

கனவு அலப்பறைகள் 6

நாள் : Feb-12-2021 ரெண்டு நாளா கனவு வரலையேன்னு யோசிச்சேன்... அது பொறுக்காத என் மூளை, 'உன்ன அவ்ளோ சீக்கிரமா நிம்மதியா தூங்க விட்டுடுவேனா'ன்னு அடுத்த கனவை பார்ஸல் பண்ணிடுச்சு...  நம்ம ஹாரிபாட்டர் ஃபர்ஸ்ட் பார்ட்ல வர 'செஸ் கேம்' தான் நேத்து என் கனவுக்கான 'இன்ஸ்பிரேஷன்' போல...😜😜😜 செஸ்ஸுக்கு பதிலா 'ஸ்னேக் அண்ட் லேடர்'...  ஃபர்ஸ்ட் டைம் விளையாடும் போது ஜாலியா தான் இருந்துச்சு... ஏணி மேல ஏறிப் போறதும் (ஆமா, ஏணி மேல ஏறி தான் போகணும்...😐😐😐) பாம்புக்கிட்ட இருந்து தப்பிச்சு, லாங் ஜம்ப் பண்ணி போறதும்... ஜாலி தான்... இப்படியே வேக வேகமா மேல ஏறிப் போன எனக்கு, 97 நம்பர்ல வந்துச்சு வினை... வச்சான் பாரு பெரிய பாம்பா அங்க... 96ல இருந்த நான், நமக்கு தாயம் எல்லாம் வராதுன்னு மிதப்பா டைஸ் உருட்ட, என்ன சோதிக்கிறதுக்காகவே விழுந்தது தாயம்...🤧🤧🤧 'அய்யயோ பாம்பு கிட்ட கடி வாங்கணுமா'ன்னு பயந்துட்டே இருந்தேன்... அது என்ன பாத்து என்ன நினைச்சதோ, 'உஸ்'ன்னு சத்தம் போட்டுட்டு மெதுவா படுத்துருச்சு... 'கடி வாங்காம தப்பிச்சோமே'ன்னு அந்த பாம்புக்கு ஒரு நன்றிய ச...

கனவு அலப்பறைகள் 10

நாள் : Dec-29-2021 இந்த கனவு நடந்த காலம் எதுன்னு தெரியல... அநேகமா 200 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி போகணும் அதாவது நம்ம பூமியில இருக்க கண்டங்கள் எல்லாம் ஒண்ணா இருந்து (Pangea) பிரிய ஆரம்பிச்ச சமயம் (Beginning of Jurassic Era) என்னடா இவ கனவு சொல்ல சொன்னா, வரலாறு சொல்லிட்டு இருக்கான்னு நீங்க யோசிக்கிறீங்கன்னு எனக்கும் புரியுது... ஆனா, என்ன பண்றது பார்கவி கனவுல இது தான வருது... அதே மாதிரி, நீ எப்படி Pangea periodகு போனன்னு கேட்க கூடாது... ஏன்னா, இது தான் கனவாச்சே...😜😜😜 (என் ஃபேவரைட் டையலாக்... சொல்லி ரொம்ப நாளாச்சு...😇😇😇) சரி வாங்க மறுபடியும் கனவுக்குள்ள போவோம்... இப்போ இருக்க எல்லா கண்டங்களும் சேர்ந்த பெரிய நிலப்பரப்பை தான் Pangeaனு சொல்வாங்க... அந்த Pangea பிரிஞ்சு ரெண்டா இருந்த காலகட்டம் அது... (இந்த பிரிவு ஏற்படுறதுக்கு பல வருஷங்கள் ஆகுமாம்) அப்பறம் இங்க இன்னொரு டவுட் வரலாம்... ஜூராசிக் பீரியட்ல மனுஷங்களே இல்லையே... நீ எப்படி இருந்துருப்பன்னு... அப்படி எந்த டவுட்ஸும் வரக்கூடாது... ஏன்னா, இது தான் கனவாச்சே...😜😜😜 நான் (கனவுல) இருந்த நிலப்பரப்புல இருந்தவங்களுக்கு இன்னொரு நிலப்...

கனவு அலப்பறைகள் 7

நாள் : Jun-09-2021  ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு கனவு எனக்கு ஞாபகம் இருக்குது...😁😁😁 நானே ஒரு பயந்தாங்கோலி... காலேஜ் முடியுற வரைக்கும் கூட திருட்டுத்தனமா மொபைல் கொண்டு போனது இல்ல...  ஆனா, கனவுல, நான் 1st இயர்லேயே மொபைல் கொண்டு போய் ஹாஸ்டல்ல அதை மறைச்சு வைக்க போறாடுற மாதிரி ஒரு கனவு...😏😏😏 கனவு கூடவா இப்படி பதட்டத்துலயே வச்சுருக்க மாதிரி வரணும்...🤧🤧🤧 அடேய் ப்ரைனு நல்லா பண்ற நீ...😐😐😐

கனவு அலப்பறைகள் 4

நாள் : Feb-07-2021 வந்துட்டேன் நேத்து கனவோட... இப்போலாம் தினமும் கனவு வருதே... ஏன்னு மீ சீரியஸ்லி திங்கிங்...🙄🤔🙄 இந்த கனவும் எனக்கு மறந்துபோச்சு... கொஞ்சம் தான் ஞாபகம் இருக்கு...  என்னோட பெட் நாய் பிளஸ் அதோட அஞ்சு குட்டிங்க இருக்குதுங்க... திடீர்னு என்னாச்சுன்னு தெரியல, அதுல ஒரு குட்டிய ரவுண்ட் கூட்டிட்டு போக 'சூப்பர் மேன்' வராரு...  எதே ரவுண்ட் கூட்டிட்டு போக 'சூப்பர் மேன்'னா!!!😲😲😲 கனவுனாலும் ஒரு நியாயம் வேணாமான்னு நீங்க  கேக்குறது எனக்கும் புரியுது... பட் வாட் டு டூ... இதான் கனவாச்சே...😉😜😉 அப்பறம் அந்த நாய் பெட்லா இருக்கான்னு கேக்காதீங்க... நாயினாலே லாங் ஜம்ப் பண்ணி அங்குட்டு போற ஆளு நானு... அதுவும் எங்க வீட்ல 'உன்ன வளக்குறதே பெருசு... இதுல நாய் வேறயா'ன்னு கேப்பாங்க... சோ நோ பெட்ஸ்...😁😁😁

கனவு அலப்பறைகள் 3

நாள் : Feb-03-2021 இன்றைய கனவு👇👇👇 கனவு : கடைவீதிக்குள் வந்து செல்லும் தொடர்வண்டி படம் : ஹனாய் ட்ரெயின் ஸ்ட்ரீட், வியட்நாம் (கனவுல வந்த மாதிரி இருக்கான்னு வழக்கம் போல கூகிள கேட்டப்போ வந்த பிக் இது...😁😁😁)

கனவு அலப்பறைகள் 5

நாள் : Feb-09-2021 கனவெல்லாம் நீதானேங்கிற மாதிரி இதுவரைக்கும் நான் கண்ட கனவுகள்ல முக்கால்வாசி இந்த கனவு தான் வரும். படிக்காம எக்ஸாம் எழுதப் போற கனவு... ஒவ்வொரு கனவுலயும் வேற வேற சப்ஜெக்ட்...😁😁😁 இன்னைக்கு கனவுல வந்த சப்ஜெக்ட் கெமிஸ்ட்ரி...😐😐😐 கெமிஸ்ட்ரி எக்ஸாம்னே தெரியாம ஸ்கூலுக்கு (😁😁😁) போய் எக்ஸாம் ஹால்ல  மத்தவங்க எழுதுற வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தது தான் கனவோட ஒன் லைனர்...😜😜😜 என்ன தான் கனவுன்னு தெரிஞ்சாலும், கொஸ்டினே தெரியலன்னு (ஆன்சர் தெரியாதது இங்க பிரச்சனை இல்ல...😜😜😜) ஃபீல் பண்ற மனசு இருக்கே... 'நல்லா பண்ற மா பெர்ஃபார்மன்ஸ்'👏👏👏

கனவு அலப்பறைகள் 8

நாள் : Jun-24-2021 நானும் என் பிரெண்டும் வேலைக்கு போறதுக்காக எப்பவும் போல (during BC - Before Covid) நைட் ட்ரெயின்ல பெங்களூரு நோக்கி பயணம் பண்ணிட்டு இருந்தோம்... நடுராத்திரில பெங்களூருவை கிட்டத்தட்ட நெருங்கிட்டப்போ, ஏதோவொரு ஸ்டேஷன்ல ட்ரெயின் நிக்க, நானும் என் பிரெண்டும் அதிசயமா கீழ இறங்குனோம்... எதுக்குன்னே தெரியல...🤷🤷🤷 கொஞ்ச நேரத்துல பார்த்தா ட்ரெயின் கிளம்பிடுச்சு... எங்க கோச் s13... ஆனா, அது லாஸ்ட்ல இருக்கு... எங்களால அங்க வரைக்கும் ரன்னிங்ல போய் ஏற முடியாதுன்னு, முன்னாடி இருந்த கோச்ல ஏறியாச்சு... 'ஹப்பா ட்ரெயின் வேகமெடுக்குறதுக்குள்ள ஒரு வழியா ஏறியாச்சு'ன்னு நிம்மதியா ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டா கடந்து போயிட்டு இருந்தோம். சரியா எங்களோட கோச்சுக்கு ஒரு கோச் முன்னாடி கோச்சுக்கு என்டர் ஆகுற சமயத்துல, அந்த கோச்ல இருந்து பின்னாடி இருந்த மத்த எல்லா கோச்சும் தடம்புரண்டுடுச்சு...🙄🙄🙄 'ஆத்தி சரியா எங்க கோச்ல ஏறியிருந்தா இந்நேரம்...'னு யோசிச்சுட்டு இருந்தப்போவே  முழிப்பு வந்துடுச்சு...  அடேய் ப்ரைனு காலங்கார்த்தால வர கனவா இது..! ரொம்ப யோசிக்கிற நீ..!  இனி பெங்களூருக்கு ட்ரெ...

கனவு அலப்பறைகள் 9

நாள் : Aug-20-2021  இது ஒரு periodic கனவு. சோ எல்லாரும் பழைய மன்னர் காலத்தை இமேஜின் பண்ணிக்கவும்...😁😁😁 என் கனவுல, ஒரு அழகான நாடு (அழகான நாட்டுக்கு என்னென்ன வர்ணனைகள் தேவையோ, அதை மானே தேனே மாதிரி இங்க இன்செர்ட் பண்ணிக்கவும்...😜😜😜) அந்த நாட்டோட இளவரசி தான் நானு... (நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்...😜😂🤣) (மேற்கண்ட படம் கற்பனைக்கே...😜😜😜) எனக்கே அந்த இளவரசி அட்டயர்ல பார்க்கும்போது கொஞ்சம் ஷையா தான் இருந்துச்சு...🙈🙈🙈 ஆனா, கொஞ்சம் நேரம் கூட அதை நினைச்சு சந்தோஷப்பட விடாம, அங்க இருந்த யாரோ வந்து இளவரசியை கொல்ல திட்டம் போட்டிருக்காங்கன்னு சொல்ல, 'ரைட்டு, இங்கேயும் ரன்னிங் சேஸிங் தான் போல'ன்னு என்னையே சமாதானப்படுத்திக்கிட்டேன்...😏😏😏 அப்போ ஆரம்பிச்ச ஓட்டம் முடிவுக்கே வரல... 'யாருய்யா இவ்ளோ பெருசா அரண்மனை கட்டினாங்க... வெளிய போறதுக்கே பல மைல் கடக்கணும் போல...'ன்னு மைண்ட் வாயிஸ்ல பேசிட்டே போனா, அங்க இன்னொருத்தன் கூட கோர்த்துவிட்டுட்டு முதல்ல வந்த ஆள் போயிட்டான்..! (பிகு... கனவுல என் முகம் தவிர யாருடைய முகமும் தெளிவாக தெரியாத காரணத்தினால், யாரு அவன்னு தெரியல...😑😑😑)...

கனவு அலப்பறைகள் 2

நாள் : Jan-31-2021 வழக்கம் போல ரன்னிங் சேஸிங் தான்...😐😐😐 சீன் ஓப்பன் பண்ணா, மாலை மங்கும் நேரம்... நாங்க மூணு பேரு... அழகா கிளம்பி படம் பாக்க போனோம்... அப்படியே சீன கட் பண்றோம்... ஏன்னா, அது என்ன படம், அங்க என்ன நடந்துச்சுன்னு எதுவும் நியாபகம் இல்ல...😒😒😒 அடுத்த சீன ஓப்பன் பண்ணா, சேஸிங் தான்... நாலஞ்சு ரவுடி பாய்ஸ் எங்கள தொரத்த, நாங்க ஓடுனோம்... அதுவும் ஹீல்ஸோட மீ ரன்னிங்... (அது எப்படின்னு கேக்க கூடாது... ஏன்னா, இது தான் கனவாச்சே...😂😂😂) அப்படி ஓடிப் போய் ஆட்டோல ஏறி, 'ஹப்பாடா'ன்னு மூச்சு விட்டா, ரெண்டு பேரு தான் இருக்கோம், ஒருத்திய காணோம்... அவள அங்கயே மடக்கி பிடிச்சுட்டாங்க அந்த ரவுடி பாய்ஸ்... அய்யயோ என்ன பண்றதுன்னு நாங்க யோசிக்க, அந்த ஆட்டோ அண்ணா அதெல்லாம் யோசிக்காம, உடனே வண்டிய திருப்பி அவங்க கிட்ட போக, எங்களுக்கு ஆட்டோ அண்ணா மேல அவ்ளோ பாசம்... பின்ன எங்க பிரெண்ட காப்பாத்த ஹீரோ ரேஞ்சுக்கு போறாரேன்னு... அந்த பாசத்துல இடி விழுந்த மாதிரி, அவங்க பக்கத்துல ஆட்டோவ நிறுத்திட்டு, அவங்க கிட்ட ஹை-ஃபை அடிச்சு பேசிட்டு இருக்காரு... அப்போ தான் தெரிஞ்சுது, அவரு ஹீரோ இல்ல வில்லன்னு...

கனவு அலப்பறைகள் 1

நாள் : Dec 19, 2020 நீளமான வெர்டிகல் ரோடு... ரோட்டு மேல போகுது காரு... Me to my brain... அது எப்படி பங்கு செங்குத்தான ரோட்டுல கார் போகுது... கீழ விழுந்துடாது... ஆமா நீ மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற...🤔🤔🤔 சரி எதுக்கும் கூகிள் கிட்ட கேப்போம்னு வெர்டிகல் ரோடுன்னு தேடுனா, இந்த இமேஜ் காட்டுச்சு... இது ஜப்பான்ல இருக்க எஷிமா ஓஹாஷி பாலம். இது செங்குத்தா இருக்குறதுனால, ஜப்பான்ல இருக்குற ஆபத்தான இடங்கள்ல இதுவும் ஒன்னா இருக்கு... இது 1997ல கட்ட ஆரம்பிச்சு 2004ல தான் முடிச்சுருக்காங்க... இன்னும் தகவல்கள் வேணும்னா விக்கில பாருங்க...😉😉😉 Again me to my brain... எனக்கு தெரியாம இந்த பிரிட்ஜ்ஜ நீ எப்போ பார்த்துருப்ப...🤔🤔🤔